பெரியார் பிறந்த நாள் விழாக்கள்!
கடலூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக 17.9.2025 காலை 9 மணி அளவில் கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தோழர்கள் பெரியார் சிவா, அறிவழகன், அருணாச்சலம் வழக்கறிஞர், குப்பசாமி, பெரியார் பிஞ்சு திராவிட மகிழன் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் தி.ச திருமார்பன் வழக்கறிஞர் மாநில அமைப்பு செயலாளர் வி சி க ஆகியோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்: பேராவூரணி பெரியார் சிலைக்கு தலைமைக்குழு உறுப்பினர் திருவேங்கடம் தலைமையில் ஒன்றியச் செயலாளர் உதயகுமார், தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் அறிவுச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பேராவூரணி நகர அமைப்பாளர் தா.கலைச்செல்வன் மாலை அணிவித்தார்.
தி.க மாவட்டச் செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், மதிமுக நகரச் செயலாளர் குமார், அதிமுக நகரச் செயலாளர் நீலகண்டன், காங்கிரஸ் நகரச் செயலாளர் பொன் நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எஸ் வேலுச்சாமி, தமிழ் வழி கல்வி இயக்கம் பழனிவேல், அறநெறி மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஆயர் ஜேம்ஸ், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு நீலகண்டன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம், நகரச் செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் கொள்கை முழக்கமிட்டனர். அனைத்து கட்சியின் சார்பில் திரளான பொறுப்பாளர்களும் தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் 147 பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.
முடச்சிக்காடு: பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு அறநெறி மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஆயர் ஜேம்ஸ், மரக்காவலசை பெரியசாமி இல்லத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.
ஈரோடு வடக்கு: கோபி ஒன்றியத்தில் கொளப்பலூர், சிறுவலூர் ,கோபி பேருந்து நிலையம், கச்சேரி மேடு, ல.கள்ளிப்பட்டி கல்லூரி பிரிவு,கோட்டுபுள்ளாம்பாளையம் அயலூர் சமத்துவபுரம், கோபி மார்கெட்திடல் ஆகிய பகுதிகளில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் கழகத்தின் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் தோழர்கள் நிவாஸ், அருளானந்தம், ஜெகநாதன், ரகுநாதன், மூர்த்தி, ரங்கசாமி, கிருஷ்ணமூர்த்தி, தங்கம் ,ஆசைத்தம்பி, பழனிச்சாமி, காமராஜ், முருகேசன், மணிமொழி, வழக்குரைஞர் ஜெகதீஸ்வரன், மோகன், தயாநிதி, பரசுராமன், துரை, அறிவுக்கனல் உள்ளிட்ட கழகத் தோழர்களும், திமுக கொளப்பலூர் பேரூராட்சித் தலைவர் அன்பரசு ஆறுமுகம், சரண்யா, பேரூர்கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மதியம் தோழர்களுக்கு கோபி நகர கழகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டது.
சத்தி: சத்தி ஒன்றியத்தின் சார்பில் புது ரோடு, அண்ணா நகர், சத்தி எஸ்.ஆர்.டி கார்னர், சத்தியமங்கலம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சிதம்பரம் முத்து, தமிழரசன், உள்ளிட்ட தோழர்களும் ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்பின் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
நம்பியூர்: நம்பியூர் ஒன்றியம் சார்பாக புலவன் சிறை, கோசனம் ஆகிய பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்தும், நம்பியூரில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாவட்டச் செயலாளர் செல்வகுமார் தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நம்பியூர் ஒன்றிய ரமேஷ் மயில்சாமி நடராஜன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
டி.என்.பாளையம் ஒன்றியம்: ஒன்றியத்தின் சார்பில் காந்திநகர், காசிபாளையம் ஆகிய பகுதியில் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, ஒன்றியப் பொறுப்பாளர் கருப்பணன், சின்னத்தம்பி, பழனிச்சாமி, அசோக், சண்முகம், ஹரி வர்சன் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 23102025
