ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

கோவை: மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற – பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து 12.9‌.2024 அன்று கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் வெங்கட் வரவேற்புரையாற்றினார்.
கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், திமுக மாணவரணிப் பொறுப்பாளர் மதிவாணன், மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் மூர்த்தி, பெண்ணிய செயற்பாட்டாளர் லோகநாயகி, மாநகரத் தலைவர் நிர்மல்குமார், CPIML ரெட்ஸ்டார் இனியவன், புரட்சிகர இளைஞர் முன்னணிப் பொறுப்பாளர் மலரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாக மாவட்ட அமைப்பாளர் சூலூர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
முன்னதாக மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் மாவட்டக் கழகத் தலைவர் இராமச்சந்திரன், மாதவன், பொங்கலூர் கார்த்தி, இரத்தினபுரி சதீஷ், கிணத்துக்கடவு இராமகிருஷ்ணன், மேட்டுப்பாளையம் அமுல்ராஜ், நிலவழகன், தி.மு.க அருண், செல்வராஜ், ஆதித்தமிழர் பேரவை பிரபாகரன், வி.சி.க சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் : மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற – பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து 12.9‌.2024 அன்று திருப்பூர் மாநகராட்சி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குக் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் சரசுவதி, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருப்பூர் மாவட்டச் செயலாளர் எஸ்.இரவிச்சந்திரன், ம.தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் சக்திவேல், வி.சி.க துரைவளவன், ஆதித்தமிழர் பேரவை விடுதலைச் செல்வன், பு.இ.மு தமிழ் அமுதன், நவீன மனிதர்கள் பாரதி சுப்பராயன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் வீ.சிவகாமி, கழக சமூகவலைதளப் பொறுப்பாளர் துரை.பரிமளராசன் ஆகியோர் கண்டனவுரையாற்றினார்கள்.
இதில் ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆர்.நாகராசு, கழக திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு, மாவட்ட அமைப்பாளர் வீ.சங்கீதா, மாவட்டப் பொருளாளர் இரவி, மாநகரச் செயலாளர் சி.மாதவன், திருப்பூர் தெற்கு பகுதிச் செயலாளர் மா.இராமசாமி, மாநகர அமைப்பாளர் முத்து, பல்லடம் நகர அமைப்பாளர் கோவிந்தராசு, மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன், ஒன்றியச் செயலாளர் சிவானந்தம், பல்லடம் பழனிச்சாமி. முத்துலட்சுமி, கோமதி, சிரிஜா, வசந்தி, நஜ்முனிசா, கார்த்திக், கதிர் முகிலன், ராஜ்குமார், பிரபாகரன், ரமேசு, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்டச் செயலாளர் சி.இரா.கனல்மதி, பல்லடம் கெளதம், பெரியாயிபாளையம் அபிமன்யு, யாழினி யாழிசை, பெரியார் விழுதுகள் வெற்றிமாறன், தழல்சிறகன், மகிழ் மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநகரத் துணைத் தலைவர் கரு.மாரிமுத்து நன்றி கூறினார்.
கள்ளக்குறிச்சி : மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற – பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 10.9‌.2024 அன்று ரிஷிவந்தியம் வாணாபுரம் பகண்டை கூட்டுச் சாலையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் முருகன், ஒன்றிய அமைப்பாளர் கார்மேகம், நாகராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் கண்டனவுரையாற்றினார்.
இதில் மதியழகன், ராமர், பெரியார் வெங்கட், வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக ஒன்றியத் தலைவர் குமார் நன்றி கூறினார்.
ஈரோடு: மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற – பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 11.9‌.2024 அன்று ஈரோடு சூரம்பட்டியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குக் கழக அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார்.
இதில் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் சண்முகம், அருந்ததியர் முன்னேற்றப் பேரவை சாமிநாதன், தலித் விடுதலைக் கட்சி பொன்.சுந்தரம், கொங்கு விடுதலைப்புலிகள் கட்சி விஸ்வநாதன், நீரோடை நிலவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சரவணன், திராவிடர் விடுதலைக் கழக வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி, நம்பியூர் ரமேஷ், தெற்கு மாவட்டத் தலைவர் செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாகக் கழக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார். இதில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தோழர்கள் பிரபாகரன், நவீன், கொ.வி.பு.க தோழர் கோபி, சிவகிரி பிரபு, திராவிடர் விடுதலைக் கழக வடக்கு மாவட்டத் தோழர்கள் ஈஸ்வரமூர்த்தி, தயாநிதி, அருளானந்தம், புலவன்சிறை நடராஜ், மயில்சாமி. தெற்கு மாவட்ட தோழர்கள் எழிலன், கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, குமார், திருமுருகன், சத்தியமூர்த்தி, நல்லதம்பி உள்ளிட்டத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் : மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற – பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 10.9‌.2024 அன்று பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்டச் செயலாளர் சரவணன், அமைப்பாளர் முத்துப்பாண்டி, மற்றும் ஆதித்தமிழர் பேரவை, CPM, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்டத் தோழமை இயக்கத்தினர் பங்கேற்றுக் கண்டனவுரையாற்றினார்கள்.
மயிலாடுதுறை : மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற – பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 10.9‌.2024 அன்று மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குக் கழக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் தெ.மகேஷ் தலைமை தாங்கினார். தமிழ் மண் தன்னுரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் மற்றும் தோழமை இயக்கத்தினர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள்.
காஞ்சிபுரம் : மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற – பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 10.9‌.2024 அன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குக் கழக காஞ்சி மாவட்ட அமைப்பாளர் கா.ரவி பாரதி தலைமை தாங்கினார். ராமஜெயம், ஏழுமலை, அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் உரிமை கூட்டமைப்பு காஞ்சி அமுதன், தி.மு.க தாண்டவ மூர்த்தி, தி.க அவெ.முரளி, காஞ்சி மக்கள் மன்றம் தஞ்சை தமிழன், ம.தி.மு.க, மகேஷ், காஞ்சிக் கலைக்குழு உலக ஒளி, ம.ம.க தாஜூதீன், தன்னாட்சித் தமிழகம் பழநி, சீதாவரம் உழவர் மோகன், பி.யூ.சி.எல் பாரதி விஜயன், தி.மு.க லெனின் ஆகியோர் கண்டனவுரையாற்றினார்கள்.

பெரியார் முழக்கம் 19.09.2024 இதழ்

You may also like...