பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:-

சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.

 

இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பீளமேடு, சித்தாபுதூர் பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு பொள்ளாச்சி நகர பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடர் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தோழர்கள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் : தந்தை பெரியாரின் 50வது நினைவு நாளை முன்னிட்டு பேராவூரணியில் உள்ள பெரியார் சிலைக்கு 24.12.2023, காலை 10 மணிக்கு நகர கழக அமைப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், மாவட்ட அமைப்பாளர்  திருவேங்கடம், ஒன்றிய செயலாளர் உதயகுமார்,  மற்றும் தோழமை இயக்கத்தினர் பங்கேற்றனர்.

கோபி : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோபி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சத்தியமங்கலம் : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு காஞ்சி மாவட்டக் கழக சார்பில் காஞ்சி சங்கர மடம் முன்பு உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கடுவனூர், ரிஷிவந்தியத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

திருப்பூர் : பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

வேலூர் : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சிவா தலைமையில் குடியாத்ததில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேர்ணாம்பட்டு, திம்மம்பேட்டை, பூசாரவலசையில் கழகம் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கழகத் தோழர் வினோத் அவர்களின் மகள் நவீராவின் முதல் பிறந்தநாளை ஒட்டி கழக வளர்ச்சி நிதியாக ரூ.1500/- வழங்கினார். நெமிலியில் மாவட்டத் தலைவர் திலீபன் தலைமையிலும், ஆற்காட்டில் பாஸ்கர் தலைமையிலும் மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு மதுரை மாவட்டக் கழக சார்பில் தல்லாக்குளம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஈரோடு வடக்கு : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்டக் கழக சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மரப்பாலம், கல்லுக்கடை, ஆலமரத்து தெரு உள்ளிட்ட இடங்களில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாவட்டச் செயலாளர் எழிலன், மாநகர அமைப்பாளர் குமார், பொருளாளர் கிருஷ்ணன், கணேஷ், சத்தியமூர்த்தி, திருமுருகன், பரப்புரைச் செயலாளர் வேணுகோபால், கமலி, விருதுநகர் செந்தில், பெருந்துறை பழனிசாமி, கணேஷ், மகிழவன், அய்யப்பன், முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்கள் ரூ.1280/- நன்கொடை வழங்கினர்.

பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

You may also like...