காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்களை தோழர்கள் சந்தித்து நிதி திரட்டினர்

சேலம் கழக மாநாட்டை ஒட்டி நன்கொடை திரட்டும் பணி ஏப்ரல் 17, அந்தியூரில் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் ஈரோடு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி முன்னிலையில் நடைபெற்றது. வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மாநாட்டு நிதியை வழங்கினார்கள். அந்தியூரில் ரூ.13,030 நன்கொடை திரட்டப்பட்டது.

பங்கேற்றோர் : இராம.இளங்கோவன், நாத்திகஜோதி, காவை ஈசுவரன், சித்துசாமி, இளவரசன், இளம்பிள்ளை தங்கதுரை, தங்கமாபுரிபட்டினம் ராமசந்திரன், நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன், வனவாசி உமாசங்கர், நந்தினி , கே.ஆர்.தோப்பூர். அஜித்குமார் ஆகியோர்.

சேலம் மேற்கு : தனிநபர் வசூல் பணி சுசீந்திரன், சாரா தலைமையில் ஏப்ரல் 17 ஆம் தேதி சங்ககிரியில் நடைபெற்றது. சங்ககிரி பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர், காவல்துறை உயர் அதிகாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் மாநாட்டு நிதி வழங்கினார்கள். ரூ. 25,300 வசூலானது.

இளைஞர்கள் அதிகளவில் பெரியாரிய இயக்கத்தில் இருப்பதை பார்த்து அரசு அதிகாரிகள் பாராட்டி மகிழ்ந்தனர்.

பங்கேற்றோர் : நங்கவள்ளி : குமார், இந்திராணி, அருள், ராஜேந்திரன், அன்பு ,மேட்டூர் விஜய், மேட்டூர் ஆர்.எஸ் : சுசீந்திரன், ஜெகதீஷ், நாகராஜ், பென்னட், கொளத்தூர் : சுதா மாரி செட்டி, சங்ககிரி : செந்தில், சாரா ஆகியோர்.

சேலம் மேற்கு : ஏப்ரல் 21 ஆம் தேதி கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் காவலாண்டியூரில் நடைபெற்றது.

நாமக்கல் கொமராபாளையம் தமிழன் லேத் ஒர்க்ஸ் உரிமையாளர் ரூ.10,000 வழங்கி வசூல் குழுவினருக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மகாலட்சுமி டேப்ஸ் உரிமையாளர் செங்கோட்டு வேல் ரூ.5000, தேவூர் தமிழன் ஆட்டோ மொபைல்ஸ் உரிமையாளர் ரூ.3000 மற்றும் மாலை தேநீர், குளிர்பானம் மற்றும் வாழைப்பழம் வழங்கினார்.

தேவூரைச் சார்ந்த ஜாதி மறுப்பு இணையர்கள் பெரியண்ணன், நவீனா ரூ.1000, ஆனந்தம்பாளையம் கவிதா, ஆறுமுகம் ரூ.1000, தேவூர் திமுக கவுன்சிலர் தங்கவேலன் ரூ.500 கொடுத்து உதவினார்கள்.

மொத்தம் ரூ.20,500 வசூலானது.

கழக தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், இளவரசன், சித்துசாமி, மாதுராசு, அவினாசி ஆகியோர் பங்கேற்றனர்.

சேலம் கிழக்கு : இளம்பிள்ளையில் இரண்டாம் கட்ட வசூல் பணி ஏப்ரல் 22, இளம்பிள்ளை கோபி, திவ்யா ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. ஜவுளி வியாபாரிகள், தறி தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மாநாட்டு நிதியை வழங்கி ஆதரவு தெரிவித்தனர். ரூ. 15,700 வசூலானது.

பங்கேற்றோர் : இளம்பிள்ளை : கோபி, தங்கதுரை, திவ்யா, பெரியார் விழுது நிலா, தமிழ், அமுதன், ரமேஷ், குப்புசாமி, சேகர், மணிமாறன் , புளியம்பட்டி ரமேஷ், புளியம்பட்டி செந்தில், முருங்கப்பட்டி அசோக். சேலம் மாநகரம் : சரவணன்

நங்கவள்ளி : கிருஷ்ணன், பிரபாகரன், உமாசங்கர், அருள்குமார் ஆகியோர்.

திருப்பூர்: சுந்தரராச அடிகளாரை சந்தித்து கழக மாநாட்டு அழைப்பிதழ் வழங்கி, நன்கொடை பெற்றுக் கொண்டனர்

தோழர்கள்.

தொழில் அதிபர் இரகு கழக மாநாட்டிற்கு ரூ.5000 நன்கொடை வழங்கினார்.

அணைமேடு டேவிட் மற்றும் தோழர்களிடத்தில் கழக மாநாட்டின் தேவையை விளக்கி பேரணியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொண்டதற்கிணங்க இளைஞர்கள் 20 நபர்களுக்கு குறையாமல் கலந்துகொள்வதாக உறுதி அளித்தனர்.

கோவை : திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் அசோக்பாபு ஆகியோரை நேரில் சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினோம். அழைப்பிதழை பெற்றுக் கொண்டு மாநாட்டிற்கு நன்கொடை வழங்கினார்.

திமுக கோவை வடக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சி.ஆர்.இராமச்சந்திரன், மதிமுக கோவை மாவட்ட செயலாளர் செல்வராஜ், மூத்த தலைவர் ஆர்.ஆர்.மோகன்குமார்,

திமுக கவுன்சிலர்கள் திருவை.சிலம்பரசன், டீமுசு நடராஜன்,

விசிக பொறுப்பாளர்கள் கரிகாலன், வழக்கறிஞர் சீலராஜ்,

நிமிர்வு கலைக்குழு நிறுவனர் சக்தி, ஞருஊடு பாலமுருகன், அண்ணாதுரை, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கரீம், ஜோதிகுமார், திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி மற்றும் கழக ஆதரவாளர்கள், இளம் வழக்கறிஞர்களை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினோம்.

தோழர்கள் சூலூர் பன்னீர்செல்வம், கிருஷ்ணன், நிர்மல் குமார், மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், சிவராசு, உப்பிலிபாளையம் இராமகிருஷ்ணன், வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி : வையம்பட்டி, நடுப்பட்டி பகுதிகளில் கழக மாநாட்டு சுவரெழுத்து பணிகளை கழகத் தோழர்கள் மேற்கொண்டனர்.

பெரியார் முழக்கம் 27042023 இதழ்

You may also like...