மடத்துக்குளம், கோவையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

திருப்பூர்: மடத்துக்குளம் – கணியூர் காரத்தொழுவு, துங்காவி பகுதிகளில் 12-10-2025 அன்று மடத்துக்குளம் மாவட்டக் கழகம் சார்பாக தந்தை பெரியார் 147வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, ‘ஜாதி நமக்கு அவமானம்; மனிதம் நமது அடையாளம்’ என்கிற கருத்தை முன்வைத்து தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார்.

கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தங்கவேலு, கழக மாவட்டக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றியச் செயலாளர் விசிக ராஜசேகர், கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு, மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். கடத்தூர் சரவணன் நன்றி உரையாற்றினார்.

மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் சண்முகம், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் பிரதீப், பழனிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை: ‘மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்’ என்ற தலைப்பில் 25.10.2025 அன்று கோவை சிவானந்தா குடியுருப்புப் பகுதி பேருந்து நிறுத்தம் அருகில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

ஜாதித் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும், ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர ஆணையம் அமைத்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க‌.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், வருகிற டிசம்பர் 24 பெரியார் நினைவு நாளில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவையில் நடைபெறவுள்ள போராட்டம் பற்றியும் தோழர்கள் உரையாற்றினார்.

தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இளவேனில், திமுக பகுதி செயலாளர் டெம்போ சிவா, (தலைமைக் குழு உறுப்பினர்) நிர்மல்குமார், வெங்கட், லோகநாயகி, வழக்கறிஞர் மதிவாணன் திமுக, நிகழ்வில் நவீன், சுதர்சன், சத்தியமூர்த்தி, ஸ்ரீநாத், ஸ்ரீராம், இராஜலட்சுமி, தரணீஸ்வரன் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர். சதீஷ் நன்றி உரையாற்றினார்.
பெரியார் முழக்கம் இதழ் 06112025

You may also like...