கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

வேலூர்: புரட்சியாளர் அம்பேத்கர் 132ஆவது பிறந்தநாள் விழா வேலூர் மாவட்டக் கழக சார்பில் மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் குடியேற்றம், கொண்டசமுத்திரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர்  விடுதலைக் கழகம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இணைந்து மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு அனைவரும் ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

நண்பகல் 12 மணிக்கு வேலூர் மாநகரில் விசிக ஒருங்கிணைத்த “ஜனநாயகம் காப்போம்! சனாதனத்தை வேரறுப்போம்!”பேரணியில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

நண்பகல் 2 மணிக்கு ராமாலையில் திராவிட் மற்றும் பகுதித் தோழர்கள் ஒருங்கிணைப்பில் அம்பேத்கருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் சிறப்பு உணவு வழங்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு  வேலூர் மாவட்டம் புட்டவாரபள்ளி கிராமத்தில் அமல்ராஜ், ஒருங்கிணைப்பில் பொதுமக்களோடு இணைந்து அம்பேத்கர்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.   இரவு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வாணியம்பாடி பகுதியில் வாணியம்பாடி நகர செயலாளர் சுரேசு தலைமையிலும், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் நகர செயலாளர் பார்த்திபன் தலைமையிலும், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி திலீபன் தலைமையிலும், ஆற்காடு பகுதியில் பாஸ்கரன் சந்திரன் ஒருங்கிணைப்பிலும் அம்பேத்கர் பிறந்த விழா கொண்டாடப்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் 14.04.2023 அன்று காலை 10.00 மணியளவில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் நிகழ்வு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்பு கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மாவட்ட தலைவர் முகில் ராசு  முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி அவர்கள் கொள்கை முழக்கங்களையும் புகழ் வணக்க முழக்கங்களையும் எழுப்ப தோழர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினார்கள்.

தொடர்ந்து அம்பேத்கர்ஆற்றிய பணி குறித்தும் இனி நாம் மேற்கொள்ள விருக்கும் செயல்பாடுகள் குறித்து கழகத்தின் இணையதள பொறுப்பாளர் பரிமளராசன், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி  உரையாற்றினார்கள். நிறைவாக கழகப் பொருளாளர் துரைசாமி நிறைவுறையாற்றினார்.

பிறகு தமிழ்நாடு மாணவர் கழக அறிவுமதி சமத்துவ நாள்  உறுதிமொழியினை கூற உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது, முடிவில் மாவட்டத் தலைவர் முகில் ராசு  நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் கழகத்தின் தெற்கு பகுதி பொறுப்பாளர் ராமசாமி, மாநகர அமைப்பாளர் முத்து, 15 வேலம்பாளையம் அமைப்பாளர் மாரிமுத்து, அய்யப்பன், சரசு, சிரிஜா, ஈழமாறன், முத்தமிழ், யாழிசை, யாழினி, திருவள்ளுவர் பேரவை அருண், மனோஜ், வினோத் உள்ளிட்ட கழகத் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டார்.

சென்னை : புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, காலை 9:30 மணியளவில், மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம், சுப்பராயன் சாலை ஆகிய பகுதிகளில் அம்பேத்கர் சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, அம்பேத்கர் மணிமண்டபத்தில் 10:30 மணியளவில் மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், ஏசுகுமார் மற்றும் சென்னை கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சேலம் : புரட்சியாளர் அம்பேத்கர் 132வது பிறந்தநாளை முன்னிட்டு கொளத்தூர் பேருந்துநிலையத்தில் விசிக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சித்துசாமி, கொளத்தூர் விஜி, கொளத்தூர் நகரச் செயலாளர்  அறிவுச்செல்வன், இளவரசன், கபிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் திமுக ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் காவை ஈசுவரன் ஆகியோர் கேக் வெட்டி கூடியிருந்த தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கினர்.

மதுரை : திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழக வாழ்வுரிமைப் பாதுகாப்பு மக்கள் கட்சியினர் ஒருங்கிணைந்து மதுரை அவுட்போஸ்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பேரணியாகச் சென்று கொள்கை முழக்கங்கள் எழுப்பி மாலை அணிவித்தனர்.

திண்டுக்கல் : பழனியில் தந்தை பெரியார் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் மரியாதை செலுத்தப்பட்டது. மருதமூர்த்தி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

கோவை : காந்திபுரம் பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்திற்கு ஸ்டாலின் ராஜா தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பி கொண்டாடப்பட்டது.

பீளமேடு பகுதியில் அம்பேத்கர் படத்திற்கு இராஜாமணி தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், நிர்மல் குமார், கிருஷ்ணன், வெங்கட், இராஜாமணி, துளசி, ஸ்ருதி, மணிராஜ், எழிலரசன், ராஜேஷ் குமார்,  செழியன், சித்ரா கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி : அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர் சந்திரசேகர், மாவட்டத் துணை தலைவர் பாலசுப்பிரமணியன், திராவிடர் கழக மண்டல பால்.இராசேந்திரம் உள்ளிட்ட தோழமை கழக நிர்வாகிகளும் தோழர்களும் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 20042023 இதழ்

You may also like...