கழகத் தோழர் நித்தியானந்தம் காலமானார்!
கோவை மாவட்டம், பனப்பட்டியை சேர்ந்த கழகத் தோழர் நித்தியானந்தம் (37) 25.01.2024 அன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
மறைந்த நித்தியானந்தம் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வந்தார். ஜாதி ஒழிப்பு இயக்கத்தில் இணைந்ததற்காக தனது குடும்பத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட இவர். இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக எந்தவித சமரசமின்றி போராடி வந்தார். ஊரின் எதிர்ப்பையும் மீறி கழகப் பரப்புரைக் கூட்டங்களை பனப்பட்டியில் கழகத் தோழர் முருகேசனுடன் இணைந்து நடத்தியவர். தொடர்ந்து தனது நண்பர்களுக்கு தனது சொந்த பணத்தை செலுத்தி புரட்சிப் பெரியார் முழக்கம் இதழை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்