1929 – சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசியலும் கோவையில் கழகம் நடத்திய எழுச்சிக் கருத்தரங்கு
கோவை மாநகரக் கழகம் ஏற்பாடு செய்த “1929 செங்கல் பட்டு முதல் சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசிய லும்” கருத்தரங்கம் கோவை அண்ணாமலை அரங்கில் பிப்ரவரி 18, மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
நிகழ்விற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார், கருத்தரங்கின் முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை கழகத் தோழர்கள் கிருஷ்ணன், புரட்சித் தமிழன், யாழினி, தமிழினி, சுருதி, அம்பிகா, இசைமதி ஆகியோர் பாடினார்கள். சிவராசு வரவேற் புரையாற்றினார்,
அதைத் தொடர்ந்து மாநகரத் தோழர் வெங்கட் , மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் யாழ். வெள்ளிங்கிரி, கழகப் பொரு ளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப் பாளர் சிவகாமி ஆகியோர் உரையாற்றினர் .
தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி “பெண்களை கைப்பிடித்து அழைத்து வந்த தலைவர் பெரியார்” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து சிறப்புரையாற்ற வந்த திமுக மாணவரணித் தலைவர் இரா. இராஜிவ் காந்திக்கு ஸ்டாலின் ராஜா ‘அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள்’ என்ற நூலை வழங்கினார். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். மாநகர அமைப்பாளர் நிர்மல் குமார் நன்றியுரை கூற கருத்தரங்கம் நிறைவு பெற்றது.
இக்கருத்தரங்கில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா 3ஆவது தவணையாக ரூ.10,000/- கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் கழகத் தோழர்கள் இராஜாமணி, பொன்மணி, அமிலா, சூலூர் ராஜி, இராஜ லட்சுமி ஆகியோர் வழங் கினார்கள். இதற்கு முன்பு கோவை மாவட்டக் கழகம் சார்பாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா தொகை ரூ.1,03,300/- வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது,
பெரியார் பெருந்தொண்டர் இரும்பொறை சுந்தரமூர்த்தி கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மாநகர அமைப் பாளர் நிர்மல்குமார் ஆகி யோருக்கு பயனாடை போர்த்தி பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
உயிர்காற்று நூல் ஆசிரியர் கொடுப்பனை நூல் விற்ற தொகையில் ரூ.5000 யை கழக வளர்ச்சி நிதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி யிடம் வழங்கினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கோவை உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். தோழருக்கு சட்ட எரிப்பு போராட்டம் நூல் வழங்கி கழகத் தலைவர் வரவேற்றார்.
மேலும் கருத்தரங்கில் கொடி யேந்தி நன்கொடை வசூலிக் கப்பட்டதில் ரூ.2995 திரட்டப் பட்டது, இக்கருத்தரங்கத்திற்கு கழகத் தோழர்கள், ஆதர வாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட கழகத் தோழர்கள் பல்வேறு பகுதிகளில் இருக்கக் கூடிய கழக ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களை சந்தித்து துண்டறிக்கை வழங்கி கருத்தரங்கத்திற்கு வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
பெரியார் முழக்கம் 23022023 இதழ்