எதிர்கால வேலைத் திட்டங்கள்; கோவை மாவட்டக் கழகம் முடிவு
கோவை மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 8/2/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் தமிழ்ப்புலிகள் கட்சி அலுவலகத்தில் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுவில் பேசப்படும் வேலைத் திட்டங்களை பற்றி கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆலோசனைகளை கூறினர்.
பிப்ரவரி 14 அன்று கழகத் தோழர் மோகனகிருஷ்ணன் விவேகா சுயமரியாதை திருமண விழாவில் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவுகள்
1. கோவை மாநகர புதிய பொறுப்பாளர்கள்
கோவை மாநகர அமைப்பாளர்களாக தோழர்கள் சிவராசு,நவீன், நிலவழகன், மாநகர துணைத் தலைவர்களாக தோழர் சத்தியமூர்த்தி ,
மாநகர துணைச் செயலாளராக தோழர் தரணி , கோவில்பாளையம் பகுதி அமைப்பாளராக தோழர் மோகனகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
2. “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!” தலைப்பில் தொடர்ந்து தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்துவது.
3. கோவையில் வடநாட்டார் குறிப்பாக பனியா ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. இவர்கள் இந்துத்துவ அமைப்புகளுக்கு நிதி ஆதாரமாகவும் இருப்பதை பற்றி தோழர்களிடம் விவாதிக்கப்பட்டது. இந்நிலையை தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் ஆலோசனையின் படி இந்த விவாகரத்தில் மேற்கொண்டு செயல்பட முடிவு செய்யப்பட்டது
4. தோழர்கள் “மோகன கிருஷ்ணன் விவேகா” சுயமரியாதை திருமண விழாவில் பெரியார் முழக்கம் முதல் தவணை சந்தா தொகையை தலைவரிடம் வழங்குவது
5. திராவிடர் இயக்கங்களின் வரலாற்று நிகழ்வுகளை, போராட்டங்களை, தலைவர்களை பற்றி சூழலுக்கு ஏற்றவாறு மாதம் இரண்டு இணைய வழி கூட்டங்களை இளம் தோழர்கள் நடத்துவது
6. வருடம் இரண்டு பயிற்சி வகுப்புகளை நடத்துவது
7. ஜாதிய தீண்டாமை கொடுமைகளை தொடர்ந்து கண்காணித்து ஒழிப்பதற்கான பணி செய்வது
தோழர்கள் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், வெங்கட், சூலூர் தமிழ்ச்செல்வி,மாதவன், பொங்கலூர் கார்த்தி, கிருஷ்ணன், இராஜாமணி, சத்தியமூர்த்தி, தரணி ,மோகனகிருஷ்ணன், நவீந்திரகுமார், கதிரவன், இராஜசேகரன், ஹரிஹரன்,சுதர்சன் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ்12022026.
