கோவையில் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்!

கோவை மாநகர மாவட்டக் கழக சார்பில் புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம் 24.12.2024 அன்று சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தம் அருகில் கோவை மாநகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.

முன்னதாக நிகர் கலைக்குழுவின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் “தற்கால அரசியலும் அம்பேத்கரும்” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், “ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் “ என்ற தலைப்பில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனும், “மார்க்சிய பார்வையில் பெரியாரும் – அம்பேத்கரும்” என்ற தலைப்பில் சிபிஐ (மாலெ) ரெட் ஸ்டார் மத்தியக்குழு உறுப்பினர்  மு. இனியவனும்  சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தமிழ்ப்புலிகள் கட்சி பொதுச்செயலாளர் இளவேனில், தலைமை செயற்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர் செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார், தி.மு.க. கணபதி பகுதிச் செயலாளர் கோவை லோகு, கோவை வி.சி.க. செய்தி தொடர்பு மாவட்ட அமைப்பாளர் கோவை ராசா, கோவை மாநகராட்சி 68ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கமலாவதி போஸ், ம.தி.மு.க. கணபதி பகுதிச் செயலாளர் ராமநாதன், தி.மு.க. 68ஆவது வட்டச் செயலாளர் போஸ்,  கோவை  மாநகர மாவட்ட தோழர்கள் இரத்தினபுரி சதீஸ், ஸ்டாலின் ராஜா, மாதவன், ராஜாமணி, ராஜலட்சுமி, ராமகிருஷ்ணன், நிலவழகன், அமுல்ராஜ், திருப்பூர் முத்துக்குமார், வசந்தி, சங்கீதா, சரஸ்வதி, கோவிந்தராஜ், செம்பருதி, சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிறைவாக தமிழ்நாடு மாணவர் கழக கோவை மாவட்டப் பொறுப்பாளர் நவீன் நன்றி கூறினார்.

பொதுக்கூட்டத் துளிகள்

• புரட்சிப் பெரியார் முழக்க ஏட்டிற்கான சந்தா தொகையாக ரூ. 30,000/- யை அமுல்ராஜ், சதீஷ், இராமகிருஷ்ணன், நிலவழகன் ஆகியோர் கழகத் தலைவரிடம் வழங்கினர்.

• சமூக செயற்பாட்டாளர் லோகநாயகி கழகத் தலைவர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்.

• திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி பொறுப்பாளர்கள் அருண், மதிவாணன், கதிரவன் ஆகியோர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் மாணவரணிப் பொறுப்பாளர்களுக்கு பெரியார் முழக்கத்திற்கான ஆண்டு சந்தாவை செலுத்தினர்.

You may also like...