ஜாதிவெறி மிரட்டல் காவல்துறையில் கோவை மாவட்டக் கழகம் மனு!
கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் நிர்மல் குமார் (மாநகரத் தலைவர்) தலைமையில் காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டது.
கோபி, சுதாகர் இருவரும் பரிதாபங்கள் என்கிற வலையொலி சேனல் மூலம் விழிப்புணர்வு வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். ஆணவக் கொலைகளுக்கு காரணமாக உள்ளவற்றை விளக்கி அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தியும் கல்வி சார்ந்து முன்னேறுவோம் ஒற்றுமையாக இருப்போம் என்பதை வலியுறுத்தியும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வெளியான நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் சவுத்ரி தேவர் என்பவர் கோபி சுதாகர் இருவரையும் பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.
அதுமட்டுமன்றி அண்மையில நடந்த சுர்ஜித் ஆணவப் படுகொலையை நியாயப்படுத்தி ஜாதி வெறியை தூண்டியுள்ளார். இவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கழகத் தோழர்கள் நவீன் (தமிழ்நாடு மாணவர் கழகம் கோவை) வழக்கறிஞர்கள் பாபு, முத்துமாரி, சண்முகநாதன் (பெரியார் மாணவர் கழகம்), வழக்கறிஞர் நரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
பெரியார்முழக்கம்இதழ்04092025
