சென்னை, கோவையில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை: மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.06.2025 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.

மறைந்த கழகத் தோழர் இசைக் கலைஞர் அருண் படத் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தொடர்ச்சியாக கழகம் முன்னெடுத்த பிரச்சார கூட்டங்களையும், இளைஞரணி, நிமிர்வோம் வாசகர் வட்டம், மாணவர் கழக செயல்பாடுகளையும் பட்டியலிட்டு கருத்துரையாற்றினார்.
மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் கழகத் தோழர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவற்றை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பேசினார். தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், அருண் கோமதி, புருஷோத்தமன், தினகரன், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு, தேன்மொழி, இரண்யா, பிரசாந்த், சிரிஜன், மகிழவன், நந்தகுமார், ஹர்ஷா ஆகியோர் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும் கழக வார இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பது பற்றியும், 25 ஆண்டுகள் தொடர்ந்து கழகம் நடத்திவரும் நமது இதழுக்கு ஒரு விழா எடுக்கலாம் என்ற கோரிக்கையை பற்றியும் பல தோழர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தோழர்கள் அருண், ரவீந்திரன் ஆகியோர் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். கழக வெளியீடுகளை வழங்கி கழகத் தலைவர் அவர்களை வரவேற்றார்.
சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக இணையதளக் குழு மற்றும் தொழில்நுட்பக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. சேத்துப்பட்டு இராசேந்திரன் தனது இணையர் அலமேலுவின் மணிவிழாவை முன்னிட்டு ரூ.1000 கழக வளர்ச்சி நிதியாக கழகத் தலைவரிடம் வழங்கினார். 45க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கோவை: 7/6/2025 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் வழக்கறிஞர் மதிவாணன் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலைஞர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. தோழர் வெங்கட்கலைஞரின் சுயமரியாதைப் பணிகளை நினைவுகூர்ந்து பேசினார். கடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தியது பற்றியும் அதன் நிறைகுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அடுத்தகட்ட பணிகள் பற்றி எடுக்கப்பட்ட முடிவுகள்:
 கோவை மாவட்டக் கழகம் கிராமங்களுக்கு சென்று தயாரித்த ஜாதி தீண்டாமை பட்டியல் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 புதிய தோழர்களுக்கு பெரியாரியல் பயிலரங்கம் நடத்துவது
 கலைஞர் பிறந்தநாளை ஒட்டி தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது
 காமராஜர் பிறந்தநாளை கொண்டாடுவது
 ‘வேண்டும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி’ தெருமுனைக் கூட்டங்களை மாதா மாதம் இடைவிடாமல் நடத்துவது. அதன் முதல் கட்டமாக இருகூர், AGபுதூர், இராவத்தூர் பகுதிகளில் நடத்துவது
சிவானந்தா காலனியில் டிசம்பரில் பொதுக்கூட்டம் நடத்துவது
 முகநூல், இன்ஸ்டா, எக்ஸ் தளப் பொறுப்பாளராக மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தோழர் ஹரிஹரன் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார். ‘பெண் ஏன் அடிமையானால்’ ஆங்கில பதிப்பு நூலைக் கொடுத்து மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
பெரியார் முழக்கம் 12062025இதழ்

You may also like...