காதலர் தினத்தில் ஜாதிமறுப்பு மணவிழா
கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சார்ந்த ராஜேந்திரன் – ஜானகி ஆகியோரின் மகள் விவேகா அவர்களுக்கு, கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சார்ந்த சிவகாமி – தமிழ்செல்வி ஆகியோரின் மகன் மோகனகிருஷ்ணன் அவர்களுக்கும் சுயமரியாதை இணையேற்பு விழா 14.02.2026 சனிக்கிழமை (அன்பின் நாளான காதலர் தினத்தன்று) மாலை 6 மணி அளவில் கோவை மாவட்டம், குன்னத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பழனியாண்டவர் கலையரங்கத்தில் நடைபெற்றது.
கழகப் பொருளாளர் துரைசாமி, பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ), சூலூர்.தமிழ்செல்வி (கோவை மாவட்ட அமைப்பாளர்), வெங்கட் (கோவை மாநகரச் செயலாளர் ) ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார்.
கோவை மாவட்டக் கழகம் வழிகாட்டுகிறது
கோவை மாவட்டக் கழகம் சார்பில் 2026 ஆம் ஆண்டு புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா முதல் தவணையாக சதிஷ், பொங்கலூர் கார்த்தி, ஸ்டாலின் ராஜா ஆகிய தோழர்கள் ரூ30,000 கழகத் தலைவரிடம் வழங்கினார்கள்.
மணமக்கள் கோவை மாவட்டம் இந்த ஆண்டு நடத்த இருக்கும் பயிலரங்கத்திற்காக ரூ15,000 நன்கொடை வழங்கினர்.
மணமக்கள் நன்றியுரையாற்றினர். கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கழகத் தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ்19022026
