திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில் மக்கள் பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்
திருப்பூர்: ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் மங்கலம் நான்கு வழி சந்திப்பு, சுல்தான் பேட்டை, பெரியாண்டிபாளையம் பிரிவு, குமரன் கல்லூரி, ஊத்துக்குளி ஆர்.எஸ், கூழிபாளையம், மன்னரை, காங்கேயம் பேருந்து நிலையம், நத்தக்காடையூர், படியூர், பொங்கலூர், அருள்புரம், வீரபாண்டி பிரிவு, உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
ஆகஸ்ட் 21,22 ஆகிய தேதிகளில் பல்லடம் பகுதிகளுக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், வடுகபாளையம், கேத்தனூர், காமநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், காரணம்பேட்டை, அனுப்பட்டி, எம்.ஜி.ஆர் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது.
ஆகஸ்ட் 22 அன்று பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியில் 50வது தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. அதனையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சுப்பிரமணியம், திமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு ஒன்றிய தலைவர் முஜிபுர் ரகுமான், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர அமைப்பாளர் முத்து, தமிழ்நாடு மாணவர் கழகம் மகிழவன், பிரசாந்த், எழுத்தாளர் சம்சுதின் ஹீரா ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
கழக செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், சிபிஐ விவசாய சங்கத் தலைவர் சுப்பிரமணியன் , அய்யப்பன், தனபால், சரசு, சிரிஜா, மாரிமுத்து, ரமேசு, ராஜா, சூலூர் தமிழ்ச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஊத்துக்குளி பகுதிச் செயலாளர் குமார், புரட்சிகர இளைஞர் முன்னணி காங்கேயம் பகுதி பொறுப்பாளர் கவி, தமிழினியன், கழக பல்லடம் நகரச் செயலாளர் கோவிந்தராசு, ஒன்றியச் செயலாளர் சண்முகம், வீரபாண்டி கார்த்திக், மகளிர் சங்க நிர்வாகி தனமணி, கைத்தறி நெசவாளர் சங்க நிர்வாகி சுப்பிரமணியம், பல்லடம் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை : 04.09.2023 திங்களன்று பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகம், மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெரு ஆகிய இரண்டு இடங்களிலும், 05.09.2023 செவ்வாய் புதன் மாலை 6 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரிலும், இரண்டாவது கூட்டம் இரவு 8 மணிக்கு டாக்டர்.கான் நகரிலும், 06.09.2023 புதன் கிழமை அன்று மாலை 5 மணிக்கு இராமாபுரம் அரசமரம் சந்திப்பிலும், இரவு 8 மணிக்கு இராமாபுரம் அம்பேத்கர் சிலை அருகிலும் கூட்டம் நடைபெற்றது.
07.09.2023 வியாழன் அன்று மாலை 5 மணிக்கு இராமாபுரம் அன்னை சத்யா நகரிலும், 08.09.2023 வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு காரம்பாக்கம் பாங்க் ஆப் பரோடா அருகிலும், மாலை 7 மணிக்கு அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம் அருகிலும், 9.9.2023 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆலம்பாக்கம் AGS தியேட்டர் எதிரிலும், மாலை 7.30 மணிக்கு மதுரவாயல் EB ஆஃபீஸ் அருகிலும், 11.09.2023 செவ்வாய் மாலை 6 மணிக்கு முகலிவாக்கம் அரசமர ஜங்ஷனில் நடைபெற்றது.
திமுக மாவட்ட பிரதிநிதி MR சதிஷ், எட்வின் பிரபாகரன், அருண் கோமதி, பெரியார் நம்பி, விக்னேஷ், காசி தமிழன் தொடக்கவுரையாற்றினர். தொடர்ந்து நாத்திகன் – உமாபதி குழுவினரின் நைய்யாண்டி அரசியல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக மடிப்பாக்கம் (187) வட்டத் துணைச் செயலாளர் தேவி கமல், தென்சென்னை மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி,154 வார்டு கவுன்சிலர் இராமநாதபுரம் செல்வகுமார், 155 வார்டு கவுன்சிலர் ராஜீ, வட்டச் செயலாளர் செல்வம், விசிக நிர்வாகிகள் நவீன், ரமணன், மதி, ஏழுமலை, ராவணன், மக்கள் குடிஅரசு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜான் மண்டேலா, திராவிடர் கழக சோழிங்கநல்லூர் மாவட்டச் செயலாளர் பாண்டு, சிங்காரவேலர் – பெரியார் பேரவை நிர்வாகி செல்வம், திமுக 137 வட்ட செயலாளர் பி.கே.குமார், திமுக தென் சென்னை மாவட்ட பிரதிநிதி முத்து மாரியப்பன்,
திமுக கலைஞர் கருணாநிதி நகர் திமுக ஐ.டி.விங் அமைப்பாளர் சி.எஸ்.தினேசு மற்றும் எம்ஜிஆர் நகர் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் செயசீலன், செயலாளர் பெரியார் மணிமொழியன், இராமபுரம் பகுதி தலைவர் க,சுப்பிரமணி, செயலாளர் மணி பாரதி, கண்ணன், மூவேந்தேன் ஆகியோர் பங்கேற்றனர். ராமாபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராஜதுரை தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
கோவை : மாநகர கழகம் சார்பாக சனாதனம் எது திராவிடம்? எது சனாதனம்? 16வது தெருமுனைக் கூட்டமானது 07.09.2023 வியாழன் அன்று உடையாம்பாளையம் காந்திநகர் பகுதியிலும் 17வது கூட்டம் பீளமேடு புதூரிலும், 18வது கூட்டம் சின்னியாம்பாளையத்திலும் நடைபெற்றது.
கிருட்டிணன் சனாதன எதிர்ப்பு பாடல்களைப் பாட, எம்.ஆர்.ராதா கலைக் குழுவினர் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் மருத்துவர் மாணிக்கம், கழக கோவை மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், வழக்கறிஞர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பாலகிருஷ்ணன், ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். வழக்கறிஞர் பாபு நன்றி கூறினார்.
கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திமுக பீளமேடு இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், நிர்மல்குமார், வெங்கட், தமிழ்செல்வி, ராஜி, பொன்மணி, நவீன், கிருஷ்ணன், அய்யப்பன், ஓட்டுனர் ரமேஷ், விவேகானந்தன், வழக்கறிஞர் விஷ்ணு, தோழா மொபைல்ஸ் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடலூர் : 9.9.2023 சனிக்கிழமை அன்று கடலூர் மாவட்டக் கழக சார்பில் தெருமுனைக் கூட்டம் புவனகிரி சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் பரங்கிபேட்டையில் தொடங்கி கிள்ளை, முட்லூர், புவனகிரி நகரத்தில் கூட்டம் நிறைவடைந்தது.
கடலூர் மாவட்ட அமைப்பாளர் அ.சதிசு தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ர.சிவக்குமார், மாவட்ட துணை தலைவர் செ.பிரகாஷ், மாணிக்க முருகேசன், ஒன்றிய பொருப்பாளர் பெரியார் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் விழுது திராவிட மகிழன் பகுத்தறிவு பாடல் பாட நிகழ்வு துவங்கியது.
கடலூர் மாவட்ட தலைவர் மதன்குமார் தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட தலைவர் பூ.ஆ.இளையரசன் கருத்துரையாற்றினார். நிறைவாக தலைமை செயற்குழு உறுப்பினர் ந.அய்யனார், விடுதலைக் குரல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். கலைமணி, ராஜேஷ்கண்ணன், ஆகாஷ், இளநிலவன், அபிஷேக், சபரிவாசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி : தர்மபுரி மாவட்டக் கழகம் சார்பில் பென்னாகரம், கூத்தப்பாடி, ஏரியூர், ஒகேனக்கல், பி அக்ரஹாரம், கடமடை ஆகிய பகுதிகளிலும் செப்டம்பர் 11 அன்று பாலக்கோடு, வெள்ளி சந்தை, மாரண்டஹள்ளி, பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம், பாப்பாரப்பட்டி அரசு கலைக்கல்லூரி அருகில், சோம்பட்டி பேருந்து நிறுத்தம் மற்றும் பண்டள்ளி கிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார், மாவட்டச் செயலாளர் சந்தோஷ் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத் தொடக்கமாக சந்தோஷ் குமார் மற்றும் அருண்குமார் குழுவின் அரசியல் நையாண்டி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழக பேச்சாளர் திருப்பூர் மகிழவன் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட அமைப்பாளர் பரமசிவம், செல்வமணி, அருண்குமார், அசோக் குமார், ராமதாஸ், நஞ்சப்பன், தேவன், மு.மாதையன், சுதந்திர குமார், தேசிய குமார் மற்றும் பல தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
சேலம் : நங்கவள்ளி ஒன்றிய கழகம் 11 மற்றும் 12வது தெருமுனைக் கூட்டம் 10.09.2023 அன்று ஞாயிறு மாலை 5 மணிக்கு வனவாசி புதுப்பேட்டை பகுதியிலும், இரவு 7 லிருந்து 9 மணி வரை நங்கவள்ளி அம்பேத்கர் நகர் பகுதியிலும் சிறப்பாக நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராசு பெரியாரியப் பாடல்களை பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் பொ.கிருஷ்ணன் தலைமை வகித்தார், வனவாசி நகர பொருளாளர் சு.பன்னீர்செல்வம், நங்கவள்ளி 11வது வார்டு கவுன்சிலர் சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கோ.இராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. கழக தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் அன்பு, திராவிட தமிழர் எழுச்சிக் கழகம் தமிழ்மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். வனவாசி நகர பொறுப்பாளர் கதிர், குமார் நன்றி கூறினர்.
சந்திரசேகர், அருள்குமார், உமாசங்கர், பிரபாகரன், சுடர்மணி, பேரறிவாளன், தமிழ், கி.பிரபாகரன், முத்துராஜ், விஜய், தேவராஜ், நாகராஜ், பென்னட், அருள்குமார், செட்டியூர் மாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் 14092023 இதழ்