பெரியார் பிறந்த நாள் எழுச்சி; பரப்புரைக் கூட்டங்கள்
பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று கொடி ஏற்றம்; தெருமுனைப் பரப்புரை; பொதுக் கூட்டங்களை கழகம் நடத்தியது.
தூத்துக்குடியில் பால் பிரபாகரன் உரை : ஆரிய விசம் முறிக்கும் அருமருந்து தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாளில் சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்பீர் என்று தி.வி.க பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அறைகூவல் விடுத்தார்.
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் 17.09.2022 தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனாதன எதிர்ப்பு விளக்கப் பொதுக் கூட்டமாக தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு தருவைகுளம் முதன்மை சாலையில் நடைபெற்றது. நிகழ்விற்கு தி.வி.க.மாவட்ட துணைத் தலைவர் ச.கா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வே.பால்ராசு, ச.ரவிசங்கர், ம.அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சா.த.பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்.
திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அவர் தனது உரையில் “தந்தை பெரியாரின் உழைப்பால் சமத்துவ சமூக மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் மீண்டும் சமத்துவத்திற் எதிரான சனாதன கருத்தியலை ஆளும் ஒன்றிய அரசு திணிப்பதுடன் தமிழ்நாட்டில் ஆளுனர் மற்றும் போலிதமிழ் தேசியவாதிகளை கொண்டு சனாதனத்தை நியாயப்படுத்தி வருகிறார்கள்.
அய்.பி.எஸ். அதிகாரியாக இருந்தவரை ஆடு மேய்ப்பது சிறந்தது என சனாதன கருத்தை பேச வைக்கிறது. ஆனால் ஆடு மேய்க்கும் பிள்ளைகளை படிக்க வைத்து ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்து சமத்துவம் பேணுவது பெரியாரியம்
தற்போது ஒரே நாடு , ஒரே மொழி, ஒரே கல்வி , ஒரே தேர்வு , மருத்துவ கல்விக்கு நீட்டு, பிற்போக்கு கல்வித் திட்டத்திற்கு தேசிய கல்வி திட்டம், ஆகம விதி எனும் சாதிய கட்டுமானம் போன்றவற்றால் சனாதனத்தைப் புகுத்தி இந்துராஷ்ட்ரம் அமைக்க புதிய அரசியல் சட்டம் எழுதியது என மீண்டும் ஆரிய விசநாகம் தலைதூக்க தொடங்கியுள்ளது. இந்நேரத்தில் நாம் அமைதி காப்போம் எனில் நம் தாத்தா சட்டை அணிய முடியாதது போல், கல்வி கற்க முடியாததைபோல், செருப்பு அணி முடியாதது போல் நமக்கும் ஏற்படும் எனவே சனாதனத்தின் வேரறுத்து சமத்துவ சமூகம் அமைக்க ஆரிய விசம் முறிக்கும் அருமருந்து சமத்துவ சமுதாயத்தின் முகவரி தந்தை பெரியார் பிறந்த நாளில் உறுதியேற்க வாரீர் என குறிப்பிட்டார்.
நிகழ்வில் திராவிடர் தமிழர் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சு.க.சங்கர், எஸ்.டி.பி.அய் கட்சி மைதீன்கனி, தமிழ் புலிகள் கட்சி பொறுப்பாளர் கத்தார் பாலு, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து 8வது வட்ட தி.மு.க. கவுன்சிலர் வசந்தகுமாரி , தூத்துக்குடி ஒன்றிய 4 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆனந்தி, கிருத்தவர் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சுந்தரி மைந்தன், வடக்கு சோட்டையன் தோப்பு வி.சி.க.வழக்குரைஞர் செந். அர்ஜுன், தி.மு.க. மாணவரணி இள.கார்த்தி, சட்டக் கல்லூரி மாணவர் அரவிந்த், தி.வி.க.மாவட்ட துணைச் செயலாளர் மாரிசாமி, சூரங்குடி ஊராட்சி துணைத் தலைவர் சதீஸ், புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் சுஜித், திராவிடர் கழகத் தோழர் செ. செல்லத்துரை, மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் புலிகள் கட்சி தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். நிறைவாக தி.வி.க.மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட தோழர்களுக்கு தி.வி.க.வெளியீடுகள் (புத்தகம்) தந்தைபெரியார் 144ஆவது பிறந்த நாள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
குமாரபாளையம் : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா, 17.09.2022 அன்று காலை 10 மணியளவில் இருசக்கர வாகனப் பேரணி காவேரி நகரில் துவங்கியது. புது பாலம் அருகில் காவிரி நகரில் கொடிக்கம்பத்தில் ரேணுகா திராவிடமணி கொடியேற்றினார். பாலம் அருகில் தோழர் சந்திராவும், பேருந்து நிலையம் அருகில் பரிமளம் அவர்களும், பேருந்து நிலையம் மறுபுறம் திராவிடர் கழக கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும், அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து அட்டை இனிப்பும் வழங்கப்பட்டது.
பின்னர் நகராட்சி தெருவில் அறிஞர் அண்ணா சிலை, பெரியார் உருவப்படத்துக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. நகராட்சி ஊழியர்களுக்கு வாழ்த்து அட்டையும், இனிப்பும் வழங்கப்பட்டது. பின்னர் தாசில்தார் அலுவலகம் சென்று அங்கும் வாழ்த்து அட்டையும், இனிப்பும் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நகரில் புதிதாக நடப்பட்ட கொடி மரத்தில் குருவை வேல்முருகன் கொடியேற்றி அனைத்து கழகத் தோழர்களுக்கும் பழரசம் வழங்கினார். சேலம் முக்கிய சாலை வழியாக கம்பன் நகரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
காமராசர் சிலையிலிருந்து சமத்துவபுரம் சென்று தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலம் நிறைவுற்றது. அனைத்து கழகத் தோழர்களுக்கும் நன்கொடையாளர்களின் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.
25.09. 22 அன்று தந்தை பெரியார் அவர்களின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தொடங்கிய பொதுக்கூட்டம் முதல் நிகழ்வாக தலித் சுப்பையா அவர்களின் நினைவுகளோடு புதுவை “விடுதலை குரல்” இசைக் குழுவினரின் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட காப்பாளர் கேப்டன் அண்ணாதுரை தலைமையில் மாவட்ட தலைவர் மு சாமிநாதன், மாவட்ட செயலாளர் மு. சரவணன், மாவட்ட அமைப்பாளர் அ. முத்துப்பாண்டி ஆகியோரது முன்னிலையில் நகரத் தலைவர் மீதா. தண்டபாணி வரவேற்பு கூறினார்.
பொதுக்கூட்ட மேடையில், மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் வரவு செலவு கணக்கை படித்தார் . திராவிடர் விடுதலைக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி தொடக்கவுரை நிகழ்த்தினார். இறுதியாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். குமாரபாளையம் நகரச் செயலாளர் செ. வடிவேலு நன்றி கூறினார். இரவு 10:15 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது. அனைவருக்கும் கழகத் தோழர் மாதுராஸ் இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.
பொதுக் கூட்டத்தில் கொரோனா நோயினால் மறைந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினுடைய தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று குமாரபாளையம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர் எஸ் சேகர் அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு மறைந்த அனைவருக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் வீர வணக்கமும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சி அன்று மதியமே குமாரபாளையம் வந்து எங்களோடு நிகழ்ச்சியை சிறப்பு செய்ய தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் அவர்கள் சென்னையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு நங்கவள்ளி, திருச்செங்கோடு, வெண்ணந்தூர், காவலாண்டியூர், ஈரோடு, ராசிபுரம், காளிப்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் குமாரபாளையம் தோழர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்து பங்கெடுத்துக் கொண்டார்கள்.
கூட்டம் துவங்குவதற்கு முன்பு கொரோனாவினால் பாதிப்புக்குள்ளாகி இறந்த அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் கொரோனா நோயிலிருந்து நோயாளிகளை காப்பாற்ற தன் உயிரை பொருட்படுத்தாமல் பாடுபட்ட மறுத்தவர்கள் செவிலியர்கள் அதன் உடன் நின்றவர்கள் தூய்மை பணியாளர்கள் காவல்துறையைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கோவை : காந்திபுரம் – தந்தை பெரியாரின் 144 – வது பிறந்தநாளில் கோவை காந்திபுரம் பெரியார் சிலைக்கு மாநகரத் தலைவர் நேருதாசு மாலை அணிவித்தார். புரட்சிதமிழன் உறுதிமொழி வாசிக்க அனைத்து தோழர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். கூடியிருந்த தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் துண்டறிக்கை வழங்கப்பட்டது. மாநகர தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சித்தாபுதூர் – கழகத் தோழர் லோகு தலைமையில் நடைபெற்றது. நிலா அறிவரசு உறுதிமொழி வாசிக்க அனைத்து தோழர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் தோழர்கள் நிர்மல்குமார், நேருதாசு முன்னிலையில் தோழர்கள் சாத்தூர் சதீஷ் ஷைனிமேரி திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்தனர். (குறிப்பு) சதீஷ் அவர்கள் நான் அறிவியலை விரும்பி படிப்பதால் எனக்கு கடவுள் ஜாதி மதம் எல்லாம் பிடிக்கவில்லை பெரியார் தான் பிடித்தார். அதனால் பெரியார் கொள்கைகளை பரப்ப நான் கழகத்தில் இணைகிறேன் என்று நிகழ்வில் உரையாற்றினார்.
பீளமேடு – பீளமேட்டில் இராஜாமணி தலைமையில் நடைபெற்றது. பொன்மணி உறுதிமொழிவாசித்தார். கூடியிருந்த தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளும் ஜசனாதன எதிர்ப்பு துண்டறிக்கையும் வழங்கப்பட்டது.
சவுரிபாளையம் பகுதியில் பெரியார் படத்திற்கு துளசி அறிவரசு மாலை அணிவித்தார். குமரேசன் உறுதிமொழி வாசித்தார். சிவராசு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். பனைமரத்தூர், தந்தை பெரியாருடைய 144 வது பிறந்த தினம் காலை 8 மணிக்கு பனைமரத்தூர் நியாய விலை கடைக்கு முன்பாக நடைபெற்றது. பெரியார் பிஞ்சு யாழினி படத்துக்கு மாலை அணிவித்தார். நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தோழர்கள் கலந்து கொண்டனர் தோழர்கள் நேருதாஸ், மணிகண்டன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். மதிமுக சஞ்சய் பாபு, வழக்கறிஞர் தர்மலிங்கம், இனியன்நேருதாஸ் அனைவருக்கும் இனிப்பு வழங்கி உறுதிமொழி எடுக்கப்பட்டது
இரத்தினபுரி: பெரியாரின் 144 பிறந்தநாள் விழா, பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ரத்தினபுரி ஆறு முக்கு பிரிவில் ஜீவா மன்றம் முன்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு நேருதாஸ் தலைமை வகித்தார். வெங்கட் வரவேற்பு கூறினார், சதீஷ் முன்னிலை வகித்தார். புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் மலரவன், திராவிட முன்னேற்றக் கழகப் பகுதி கழகப் பொறுப்பாளர் லோகு, தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர், இளவேனில், புரட்சித் தமிழன் திராவிடர் விடுதலைக் கழகம், சி.பி.ஐ.எம்.எல். லிபரேஷன்- பாலசுப்பிரமணியம், சி.பி.ஐ.எம்.எல். ரெட் ஸ்டார் – சுர்ஜித் ராஜா, சாந்தகுமார் – செயலாளர் ஜீவாமன்றம், சிபிஐ – குரு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தங்கராசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சாஜித் – தந்தை பெரியார் திராவிடர் கழகம், வெண்மணி- தலைவர், திராவிடர் தமிழர் கட்சி, வெள்ளிங்கிரி – கோவை மாவட்ட செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம், அமிலா உறுதிமொழி வாசித்தார். மாநகர செயலாளர் நிர்மல் குமார் நன்றி கூறினார். தோழர்கள், ஜெயந்த் மாதவன், கிருஷ்ணன், புரட்சித் தமிழன், ராஜலட்சுமி, பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், சுரேஷ், ரஞ்சித், மருதாசலம், பொன்மணி சைனி, மகிழ், தமிழ் கொடி, அருள் மொழி, தமிழ் நம்பி வெங்கடேஷ், சபரி ஆனந்த் சமரன், தமிழரசன், அறிவாயுதம் செந்தில், பாரதிவாசன்,இனியவன் ஆகியோர் உட்பட, திரளாக நிகழ்வில் பங்கெடுத்து கொண்டனர். கலந்து கொண்ட தோழர்களுக்கு அனைவருக்கும் இனிப்புகள், தேநீர் வழங்கப்பட்டது. மாநகரில் கலந்து கலந்து கொண்ட தோழர்கள்: நிர்மல் குமார், நேரு தாசு, கிருஷ்ணன், இராஜாமணி, ஜெய்ந்த், வெங்கட், மாதவன் சங்கர், புரட்சித் தமிழன், ரத்தினபுரி சதீஷ், துளசி அறிவரசு, குமரேசன், மனோரஞ்சனி, அமிலா, மருதாசலம், பொன்மணி, சைனி மேரி, சாத்தூர் சதீஷ், போத்தனூர் சதீஷ், எழிலரசு, நிலா அறிவரசு, சின்னதுரை, இராஜலட்சுமி, பெரியார் பிஞ்சுகள் சித்தாபுதூர் கனல்விழி, பீளமேடு கனல்விழி, அறிவுக்கனல்.
வடபுதூரில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தோழர்கள், வேலுச்சாமி-திமுக, கார்த்திக் -திமுக. செந்தில்குமார்-திவிக, ரங்கசாமி கலந்து கொண்டனர், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கோவை மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட தோழர்கள் அமுல்ராஜ் திவிக, திமுக நகர செயலாளர்- முனுசாமி, சிவ சுரேஷ் அரசு வழக்கறிஞர், ரமேஷ் குமார் வழக்கறிஞர், இரும்பொறை சுந்தரமூர்த்தி பகுத்தறிவாளர் கழகம், இங்கர்சால் திமுக வினோத்குமார், மகேஸ்வரன், கலைச்செல்வன், முகமது முபாரக், உமாநாத், இப்ராகிம் ரவி, மலர்மன்னன்,வேலு, ரங்கராசு பகுத்தறிவாளர் கழகம், குப்புசாமி பகுத்தறிவாளர்கள் கழகம்.
சூலூர் ஒன்றியம் : சூலூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சூலூரில் பெரியார் 144வது நாள் விழா பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் அண்ணா சீரணி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட தோழமை அமைப்புகள் : திராவிட முன்னேற்ற கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை, திராவிடர் விடுதலைக்கழகம், தந்தை பெரியார்திராவிடர்கழகம். பாவேந்தர் பேரவை. மார்க்சிய லெலினிய இளைஞர் அமைப்பு.
கலங்கல் சாலை : கலங்கல் சாலையில் கருப்பண்ணன் பிரதர்ஸ் லேஅவுட் பகுதில் பெரியார் 144வது பிறந்தநாள் நிகழ்வாக பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அத்தப்பகவுண்டன் புதூர் : சூலூர் ஒன்றியம் அத்தப்பகவுண்டன் புதூர் பகுதில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில பெரியார் 144வது அண்ணா 114வது பிறந்த நாள் விழா தோழர் தங்கராசு தலைமையில் நீலம்பூர் தங்கராசு முன்னிலையில் பெரியார், அண்ணா படங்களுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சின்னியம் பாளையம் : சூலூர் ஒன்றியம் சின்னியம்பாளையம் பகுதியில் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் தலைமைக்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், சிவா முன்னிலையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்று நிகழ்வாக நடைபெற்றது.
அரசூர் : பெரியாரின் 144வது பிறந்த நாள் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சூலூர் ஒன்றியம் அரசூர் பெரியார் சமத்துவ புரம் பகுதியில் உள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்வாக நடைபெற்றது. தலைமை: தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம். முன்னிலை : சூலூர் பாபு,பொங்கலூர் கார்த்தி,வழக்கறிஞர் பாபு. கலந்துகொண்ட தோழர்கள் : அத்தப்ப கவுண்டன்புதூர் தங்கராசு, மைலம்பட்டி அம்பேத்கர் நகர் தோழர் தங்கராசு,சின்னியம் பாளையம் தோழர்கள் வழக்கறிஞர் விஷ்ணு, மொபைல் கடை தோழர் சிவா, விக்னேஷ்பாபு,லோகேஷ், சூலூர் சாந்தி பாபு,கோகுல்.
திருப்பூரில் : திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 18.09.22 ஞாயிறு அன்று பெரியார் பிறந்த நாள் நிகழ்வுகள் “சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்” எனும் முழக்கத்தோடு தெருமுனை கூட்டங்களாகவும் கழக கொடியேற்றும் நிகழ்வாகவும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்வுகள் திருப்பூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு இரவு வரை நடைபெற்றது . தெருமுனை கூட்டங்கள், கொடியேற்றும் நிகழ்வுகளுக்கு கழகப் பொருளாளர் துரைசாமி தலைமை தாங்கினார். கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு முன்னிலை வகித்தார்கள்.
தொடக்க நிகழ்வு திருப்பூர் ராயபுரம் பகுதியில் காலை 9 மணி அளவில் பறையிசையுடன் ஆரம்பித்து கழகத்தின் இணையதள பொறுப்பாளர் பரிமளராசன் தலைமையில் நடைபெற்றது. பெரியார் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறோம் ? சனாதனத்தை ஏன் வேரறுக்க வேண்டும் என்கின்ற செய்திகளை பரிமளராசன், சிவகாமி,முகில் ராசு ஆகியோர் விளக்கிப் பேசினர். திமுகவின் அப்பகுதி பொறுப்பாளர் ராமகிருஷ்ணன், மதிமுக வின் பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தெரிவித்து பேசினார்கள்.தோழர் அய்யப்பன் நன்றி கூறினார்.
இரண்டாவது நிகழ்வு திருப்பூர் அணைமேடு பகுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது. டேவிட் அவர்கள் தலைமையில் அப்பகுதியில் ஒரு சிந்தனை பலகை திறக்கப்பட்டது. சிந்தனைப் பலகையை கழகப் பொருளாளர் துரைசாமி திறந்து வைத்தார். முதல் சிந்தனையாக “ஜாதி ஒழிப்பே சமூக விடுதலை” எனும் பெரியாரின் சிந்தனையை தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி எழுதினார். அப்பகுதியில் பள்ளி மாணவி அனு பெரியார் குறித்தும் பெண் விடுதலை குறித்தும் சிறப்பாக பேசி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார். அப்பகுதி மக்கள் கழகத் தோழர்களை அன்புடன் வரவேற்று காலை உணவு, தேநீர் வழங்கி சிறப்பித்தனர். தோழர் டேவிட் நன்றியுரையில் அப்பகுதியில் மக்கள் பாதிப்புக்கு உள்ளான போது கழகம் துணை நின்றதை குறிப்பிட்டு பேசினார்.
மூன்றாவது நிகழ்வாக திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியில் கழக மாநகர செயலாளர் மாதவன் தலைமையில் கொடியேற்றும் நிகழ்வும் தெருமுனை கூட்டமும் நடைபெற்றது. கழகக் கொடியை கோமதி ஏற்றி வைத்தார். சண்.பாண்டியநாதன், ஆசிரியர் சிவகாமி ஆகியோர் பெரியாரின் இன்றைய தேவை குறித்தும் சனாதனத்தின் ஆபத்து குறித்தும் பேசினார்கள். அடுத்து ரங்கநாதபுரம் பகுதியில் கழகத் தோழர் பிரசாத் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி, பிரசாத் ஆகியோர் பொதுமக்களிடம் ஒன்றிய பாஜக அரசின் ஆபத்தான மனுவாத போக்கினை விளக்கிப் பேசினார்கள். அடுத்ததாக பெரியார் காலனி பகுதியில் கொடியேற்றம் மற்றும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.கழகக் கொடியை ஸ்ரீஜா ஏற்றி வைத்தார்கள். பெரியார் காலணி பகுதியில் சன் பாண்டியநாதன், ஆசிரியர் சிவகாமி ஆகியோர் பெரியாரின் இன்றைய அவசியம் குறித்து பேசினார்கள். கவுசல்யா நன்றி கூறினார்.
அடுத்ததாக மதிய உணவு இடைவேளை. கழக மாவட்டத் தலைவர் முகில் ராசு இல்லத்தில் பரப்புரையில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. மீண்டும் பிற்பகல் பரப்புரை அம்மாபாளையம் பகுதியில் தோழர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. சனாதனத்தின் ஆபத்துகள் குறித்தும் பெரியாரின் தேவை குறித்தும் பரிமளராசன், ஆசிரியர் சிவகாமி, மாரிமுத்து ஆகியோர் விளக்கி பேசினார்கள்.
அடுத்து ஆத்துப்பாளையம் பகுதியில் தனபால் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மதன் கழக கொடியினை ஏற்றி வைத்தார். அப்பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் பரமானந்தம் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா,பரிமள ராசன் ஆகியோர் உரையாற்றினார்கள். வீரலட்சுமி நன்றி கூறினார். அப்பகுதியைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர்கள் பத்மநாபன் அருண்குமார் ஐயப்பன் ஆகியோர் கழகத்தின் தெருமுனை கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நிகழ்வில் பங்கேற்றனர். அடுத்து அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் தோழர் முத்து தலைமையில், சாரதி அவர்கள் கழக கொடியினை ஏற்றி வைத்தார். இங்கு ஆசிரியர் சிவகாமி உரையாற்றினார். அடுத்து சந்தைப்பேட்டை பகுதியில் தனபால் தலைமையில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது ஆசிரியர் சிவகாமி உரையாற்றினார்.
குளத்துப்பாளையம் பகுதியில் இளமாறன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. கழக பொருளாளர் துரைசாமி, ஆசிரியர் சிவகாமி ஆகியோர் உரையாற்றினார்கள்.தோழர் சரஸ்வதி நன்றி கூறினார். வீரபாண்டி பிரிவில் ராஜசிங்கம் தலைமையில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முகில் ராசு, தனபால், ஆசிரியர் சிவகாமி ஆகியோர் உரையாற்றினார்கள். கழகப் பொருளாளர் துரைசாமி நிறைவுரையாற்றினார். தனகோபால் நன்றி கூறினார். இத்தோடு இரவு 8.30 அளவில் கழகத்தின் தெருமுனை கூட்டங்கள் கொடியேற்றும் நிகழ்வுகள் நிறைவுற்றன.
மடத்துக்குளத்தில்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா 17.09.22 அன்று காலை 9 மணி அளவில் கடத்தூர் புதூரில் தொடங்கியது. கழகக் கொடியேற்றிய தோழர்கள் : புதூர் – தோழர் சங்கீதா; கடத்தூர் -ஆரியமாலா; கணியூர் – செல்வி; காரத்தொழுவு – கணக்கன்; குட்டைத் திடல் – மாரிமுத்து; மடத்துக்குளம் – ஜோதி மோகன் ருத்ரா பாளையம் – கணக்கன்.
பாலப்பம்பட்டி சமத்துவத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பொருளாளர் துரைசாமி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் தோழர்கள் அனைவருக்கும் மதிய உணவாக மாட்டு கறி பிரியாணி வழங்கி சிறப்பித்தனர். மீண்டும் பிற்பகல் 3.00 மணி அளவில் நீலம்பூர் பகுதியில் கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கொழுமம் சமத்துபுரத்தில் மகிழவன் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிறைவாக தோழர் ராஜேந்திரன் இல்லத்தில் அனைத்து தோழர்களுக்கும் தேநீர் வழங்கப்பட்டு நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. திராவிட முன்னேற்ற கழக தோழர்கள் பாரூக் ஊராட்சி மன்ற உதவித் தலைவர் – கடத்தூர் திமுக மகுடீஸ்வரன்,வெள்ளியங்கிரி – விடுதலை சிறுத்தைகள் கட்சி த சதீஷ்குமார், திருப்பூர் மாவட்ட செயலாளர் – மாதவன் செல்வகுமார் மூர்த்தி சதீஷ் – கம்யூனிஸ்ட் பாலு கொழுமம் – வெள்ளிங்கிரி திமுக கடத்தூர் கிளைச் செயலாளர் – சதீஷ் தொப்பம்பட்டி விசிக அமைப்பாளர் – திருப்பூர் அய்யப்பன், மகிழவன், ராசசிங்கம், மாரிமுத்து ஆகியோர்.
பெரியார் முழக்கம் 29092022 இதழ்