Category: சேலம் மேற்கு

சேலம் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள்!

சேலம் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள்!

கே.ஆர்.தோப்பூரில் கணேசன் இல்லத்தில் 18.11.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: தீர்மானம்-1: “மனிதம் நமது அடையாளம் – ஜாதி நமக்கு அவமானம்” தெருமுனைக் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 29,30 ஆகிய நாட்களில் புதிய பகுதிகளில் நடத்துவது. தீர்மானம்-2: டிசம்பர் 14 அன்று “மனிதம் நமது அடையாளம்” “ஜாதி நமக்கு அவமானம்” நிறைவுக்கூட்டம் பொதுக்கூட்டமாக தாரமங்கலம் அண்ணா சிலை பகுதியில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம்-3: புரட்சிப் பெரியார் முழக்க இதழை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் கொண்டு சேர்ப்பது குறித்தும், புதிய சந்தாக்களை அதிகப்படுத்தி வருகிற டிசம்பர் 24 அன்று மாவட்டக் கழகத்திடம் ஒப்படைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தீர்மானம்-4: டிசம்பர் 24 கோவையில் நடைபெறும் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொள்வது எனவும்...

க.கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு & நினைவேந்தல்

க.கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு & நினைவேந்தல்

திராவிடர் விடுதலைக் கழக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் கருப்பூர் க.சக்திவேல் சகோதரரும், ஓய்வுபெற்ற ஆசிரியரும், சேலம் மாவட்ட திராவிடர் கழக காப்பாளருமான க.கிருஷ்ணமூர்த்தி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 11.11.2025 செவ்வாய்கிழமை கருப்பூர் சாமிநாயக்கன்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில், திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் பழநி.புள்ளையணன் தலைமையில் நடைபெற்றது. சேலம் அம்மணி மருத்துவமனை நிர்வாக இயக்குனர், மருத்துவர் இரா. சரவணன் முன்னிலை வகித்தார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசும்போது, தோழர் க.கிருட்டிணமூர்த்தியும் அவரது குடும்பமும் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ததையும், அவர் பெரியாரிய இயக்கப் பணிகளை செய்த உணர்வுகளைப் பகிர்ந்து நினைவேந்தல் உரையாற்றினார். இறுதியாக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் கழகத் தோழர்கள், தி.க., தி.மு.க. தோழர்கள், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், அ.இ.தி.மு.க.வினர், பா.ம.க.வினர் பலர்...

இளங்கோவன்- வினிதா சுயமரியாதை திருமணம்!

இளங்கோவன்- வினிதா சுயமரியாதை திருமணம்!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், குறுக்குப்பட்டி கிராமம், பவளத்தனூர் பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர். சரவணன்- சித்ரா ஆகியோரின் மகன் இளங்கோவன் அவர்களுக்கும் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், உடையார்குடி கிராமம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன்- ஆனந்தி ஆகியோரின் மகள் வினிதா அவர்களுக்கும் 04.11.2025 காலை 11 மணியளவில் மேட்டூர்ள பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் முன்னிலையில் இணையர்களுக்கு சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட இணையர்கள் கழகத் தலைவரிடம் பயணச் செலவிற்காக ரூ. 5000 வழங்கினர். பெரியார் முழக்கம் இதழ் 27112025

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்- கொளத்தூரில் கண் மருத்துவ முகாம்!

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்- கொளத்தூரில் கண் மருத்துவ முகாம்!

இலவச மருத்துவ முகாமை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். சேலம் வள்ளி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை சார்பாக 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டம் கொளத்தூர் ஸ்ரீ கொளத்தூர் கஃபே, S. K. C கார்னரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். இம்முகாமை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிபுரியும் கழகத் தோழர். ஜலகண்டாபுரம் ரமேஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் கழக தலைமைக் குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், செட்டியூர் மாரி, கத்தரிப்பட்டி பழனியப்பன் ஆகிய கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 27112025

சேலம் கிழக்கு, வடக்கு மாவட்டக் கழக கலந்துரையாடல்!

சேலம் கிழக்கு, வடக்கு மாவட்டக் கழக கலந்துரையாடல்!

சேலம் கிழக்கு: இளம்பிள்ளையில் சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் கடையில் 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு: மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் 08.11.2025 சனி மாலை 6.00 மணியளவில் மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: தீர்மானம் – 1: சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 2026ஆம் ஆண்டிற்கான புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு 500 சந்தாக்களை வருகிற டிசம்பர் 24 அன்று மாவட்ட கழகத்திடம் ஒப்படைப்பதென தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் – 2: நவம்பர் 26 சட்ட எரிப்பு நாளை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 10 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் – 3: டிசம்பர் 24 கோவையில் நடக்கும் தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக பெருவாரியாக தோழர்கள் கலந்து கொள்வதென...

தந்தை பெரியார் தொழிற்சங்கம் திறப்பு

தந்தை பெரியார் தொழிற்சங்கம் திறப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தந்தை பெரியார் தொழிற்சங்க பேரவையின் கிளை திறப்பு விழா ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் சார்பாக தந்தை பெரியார் தொழிற்சங்கம் திறப்பு விழா 23.10.2025 அன்று நடைபெற்றது. சி.குப்புசாமி (பொதுச் செயலாளர் தந்தை பெரியார் தொழிற்சங்க, பேரவை) தலைமையில் கோ. செல்லதுரை (அந்தியூர் கிளை தலைவர்) வரவேற்புரையாற்றினார். காவை ஈஸ்வரன் (தலைமைக் குழு உறுப்பினர்), நாத்திக ஜோதி (ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர்), ஈஸ்வரன் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் விசிக, வேங்கை பொன்னுச்சாமி தமிழ்ப் புலிகள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் ஆகியோர் தொழிற்சங்கத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். கௌசல்யா அந்தியூர், பெருமாள் அந்தியூர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கழகத்தின் சார்பாக வேணுகோபால் பவானி, சேகர் வெள்ளி திருப்பூர், குமரேசன் கொளத்தூர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியாரிய உணர்வாளர்கள், தோழமை இயக்கத் தோழர்கள்...

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் வாகன பேரணியுடன்  பெரியார் பிறந்த நாள் விழா!

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் வாகன பேரணியுடன் பெரியார் பிறந்த நாள் விழா!

சேலத்தில் காலை முதல் மாலை வரை 20-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு வாகனப் பேரணியாக சென்று, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சேலம் கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் எங்கு திரும்பினாலும் பெரியார் பதாககைகள், படங்கள் இருந்த காட்சி பெரும் மகிழ்ச்சியை தந்தது. அனைத்துப் பகுதிகளிலும் பெரியார் படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. சேலம் மேற்கு: 17.09.2025 புதன் காலை 9.00 மணியளவில் கோனூர் சமத்துவபுரத்தில் எழுச்சியுடன் தொடங்கியது. சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமை வகித்தார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அதன் பிறகு தோழர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணி சமத்துவபுரம் பெரியார் சிலையில் இருந்து தொடங்கி மேச்சேரி, பனங்காடு, மசக்காளியூர், கீழ் வனவாசி, வனவாசி மேல்ரோடு, நங்கவள்ளி பேருந்து நிலையம், தோப்புத்தெரு, வீரக்கல், மேட்டூர்...

சூரியகுமார்-காயத்ரி இல்ல மணவிழா!

சூரியகுமார்-காயத்ரி இல்ல மணவிழா!

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் கழக சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ப. கு. சூரியகுமார்- காயத்ரி ஆகியோரின் மகன் இனியன் அவர்களுக்கும், சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தை சேர்ந்த ம.சதிஷ்குமார்- ம.சுமதி ஆகியோரின் மகள் ரிதிசக்தி அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா 14.09.2025 அன்று காலை 10.30 மணியளவில் மேட்டூர், நவப்பட்டி திருமலை மாதவி மகாலில் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராஜ் வரவேற்புரையாற்றி பெரியார் பாடல்களை பாடினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் தலைமையேற்புரையாற்றி, இணையர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இணையர்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஏற்பு ஒப்பந்தம் செய்து வைத்து உரையாற்றினார். இணையர்கள் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ 25,000 கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் அவர்களிடமும், ரூ25,000 கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடமும் வழங்கினர். இறுதியாக சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ப.கு....

சேலம் மாவட்டக் கழகத் தோழர்களின்  தொடர் முயற்சியால்  தமிழில் பெயர்ப்பலகை!

சேலம் மாவட்டக் கழகத் தோழர்களின் தொடர் முயற்சியால் தமிழில் பெயர்ப்பலகை!

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீராஜஸ்தானி உணவகத்தின் பெயர் பலகைகளில் தமிழ்நாட்டு அரசாணைப்படி தமிழில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் ஓமலூர் காவல் நிலையத்தில் கடந்த 01.08.2025 அன்று புகார் மனு கொடுக்கப்பட்டிருந்தது. புகாரைப் பெற்றுக்கொண்டு (18.08.2025) வரை போதிய மாற்றங்கள் ஏதும் செய்யாத நிலையில், மீண்டும் 19.08.2025 அன்று இரண்டாவது புகார் மனு அளிக்கபட்டிருந்தது. அந்த புகார் மனுவில் செப்டம்பர் 05.09.2025 தேதிக்குள் அந்த பெயர் பலகையை நடவடிக்கை எடுத்து மாற்றாத பட்சத்தில் தமிழ்நாடு அரசின் ஆணையை நிறைவேற்றும் எண்ணத்தோடு நாங்களே அந்த பலகையை அழிக்க வேண்டி இருக்கும் என்பதை புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அதனடிப்படையில் அந்த உணவகத்தின் பெயர் பலகைகளில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் புகார் மனு எதிரொலியால் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 18092025

சேலம் மாவட்டக் கழகம் தொடர் பரப்புரை                                          ஜாதிப் பெருமை பேசாதீர்!

சேலம் மாவட்டக் கழகம் தொடர் பரப்புரை ஜாதிப் பெருமை பேசாதீர்!

ஜாதிப் பெருமை அல்ல அது அவமானம் ஜாதிப் பெருமை பேசாதீர் அது மீண்டும் நம்மை அடிமையாக்கிவிடும் என்றும் மக்களிடம் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாடு முழுதும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை செய்து வருகிறது. உலகம் முழுதும் மனிதர்கள் பிறக்கிறார்கள் இந்த நாட்டில் மட்டும் தான் மனிதப் பிறவியோடு ஜாதி அடையாளமும் சேர்ந்து பிறக்கிறது. அந்த ஜாதியே சமூகத்தைப் பாகுப்படுத்துகிறது. ஜாதி அமைப்புக்குள் நாம் மூழ்கிக் கிடந்தால் பார்ப்பனியத்தின் அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறோம் என்று அதன் பொருள். கடந்த தலைமுறைகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதியைப் படிக்க விடவில்லை. ஜாதித் தொழிலை கட்டாயப்படுத்தினார்கள். இதிலிருந்து மீண்டு படித்து, ஜாதித் தொழிலில் இருந்து விடைபெற்ற பிறகு நாம் ஜாதிப் பெருமையை பேசிக் கொண்டிருக்கலாமா? வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே மனம் விரும்பி திருமணம் செய்தால் அதை தடுக்கலாமா? கழகத் தோழர்கள் அடுக்கடுக்கான கேள்வியை மக்கள் மன்றத்தில் எழுப்பி வருகிறார்கள். சேலம் இளைஞர் அணியின் சார்பில் “மனிதம் நமது...

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்!

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்!

16.08.2025 மாலை 6.00 மணிக்கு நங்கவள்ளியில் கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) இல்லத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமை வகித்தார். கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை வகித்தார். கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய கலந்துரையடால் தொடங்கியது. கூட்டத்தில் எடுக்கபட்ட தீர்மானங்கள்: 1). மேச்சேரியில் 03.08.2025 அன்று சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் நடைபெற்று முடிந்த “பெரியார் எனும் பெருநெருப்பு” கருத்தரங்கத்திற்கான வரவு, செலவு கணக்கு சார்பார்க்கப்பட்டது. வரவு- 74,500, செலவு- 70,160, மீதி= 4,340 2). சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் எதிர்வரும் 22.08.2025 வெள்ளி அன்று ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனவும் இறுதியாக நிறைவுக் கூட்டம் ஓமலூரில் பொதுக் கூட்டமாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ), சிவ சண்முகம்...

பெரியார் எனும் பெருநெருப்பு                    மாநாடு போல் நடந்த கொளத்தூர் கருத்தரங்கு

பெரியார் எனும் பெருநெருப்பு மாநாடு போல் நடந்த கொளத்தூர் கருத்தரங்கு

கொளத்தூரில் நடந்த ‘பெரியார் எனும் பெருநெருப்பு’ கருத்தரங்கம் மாநாடு போல் எழுச்சியுடன் நடந்தது. அரங்கம் நிரம்பி வழிந்த்து. சேலம் மாவட்டம் கொளத்தூரில் ஆகஸ்ட்17-ல் கே.வி.ஆர் மண்டபத்தில் ஈசுவரன் (தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு கோவிந்தராஜ் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் இணைந்து பகுத்தறிவு பாடல்கள் பாடினார்கள். கொளத்தூர் இளைஞரணி தோழர் குமரேசன் வரவேற்புரையாற்றினார், ஆசிரியர் செல்வேந்திரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். மிதுன் சக்கரவர்த்தி (திமுக மேற்கு மாவட்ட ஒன்றியச் செயலாளர்) கருத்தரங்கத்தில் ஏராளமான தோழர்களுடன் கலந்து கொண்டு கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையின் அவசியத்தை பாராட்டி பேசினார். மில்டன்: பேரலை வலையொளி மில்டன் தனது உரையில்; பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதை திருமணம் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது என்று குறிப்பிட்டார். ஜாதி கட்டமைப்பையும் பெண் அடிமையையும் சமூகத்தில் அது அசைத்தது. இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு என்பது மொழித் திணிப்பு எதிர்ப்பு மட்டுமல்ல! அது பண்பாட்டுத்...

கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா

கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா

சென்னை: கழகம் 14-ம் ஆண்டு துவக்க விழா சென்னை மாவட்டக் கழகம் சார்பில் இராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவு படிப்பகத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கொடியோற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கழகத் தோழர்கள் தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்),வேழவேந்தன்(மாவட்டத் தலைவர்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), ம.கி எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ப.அருண்( இளைஞரணி அமைப்பாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (வடசென்னை மாவட்ட அமைப்பாளர்), கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), த.நா சூர்யா (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் தோழி, குறளரசி மற்றும் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 12.08.2025 மாலை 5.00 மணியளவில் கோனூர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து...

மேச்சேரியில் “பெரியார் எனும் பெருநெருப்பு” கருத்தரங்கம்!

மேச்சேரியில் “பெரியார் எனும் பெருநெருப்பு” கருத்தரங்கம்!

சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் 03.08.2025 ஞாயிறு மேச்சேரி VGP மஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிவ சண்முகம் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கதுரை, வெற்றிமுருகன், திவாகர் , மற்றும் ஏற்காடு தேவபிரகாஷ் (சேலம் மாவட்ட இளைஞர் அணித் தலைவர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரபாகரன்( மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜின் பகுத்தறிவு பாடல்களைப் பாடினார். U2Brutus தோழர்கள் மைனர் மற்றும் சத்யாவின் அரசியல் அரட்டை நடைபெற்றது. “மீண்டும் நடிகர்” எனும் தலைப்பில் பேரலை மில்டன், “மாடல்ல மற்றை யவை” எனும் தலைப்பில் U2Brutus மைனர், “நாக்பூர் ஏஜெண்டுகள்” எனும் தலைப்பில் இந்திரகுமார் தேரடி அவர்களும் கருத்துரை ஆற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கவியரசு (தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்) நன்றி கூறினார்....

சேலத்தில் கழக சார்பில் தொடர் கூட்டங்கள்

சேலத்தில் கழக சார்பில் தொடர் கூட்டங்கள்

சேலம் மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல்” தெருமுனைக் கூட்டம் 12.07.2025 அன்று அம்மாபேட்டை ரவுண்டானா அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் தலைமை வகித்தார். பரமேஷ் வரவேற்புரையாற்றினார். ஆத்தூர் நகரத் தலைவர் மகேந்திரன் அவர்களின் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகரத் தலைவர் பாலு, ஆத்தூர் நகரத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சேலம் மாநகரப் பொருளாளர் பிரபு, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிமுருகன் ஆகியோரின் அரசியல் நையாண்டி நிகழ்வும் நடைபெற்றது. நிறைவாக சேலம் மாநகரச் செயலாளர் தோழர் ஆனந்தி நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. கலந்துகொண்டோர்: அவினேஷ், சுதர்சன், தோழர் ராஜசேகர், பாலாஜி, சித்தார்த்தன், தமிழ் இனியன்ஆகியோர். கூட்டத்திற்கு அம்மாப்பேட்டை பகுதி வாழ் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. பெண்கள், மாணவர்கள் என அனைவரும் ஆர்வமுடன்...

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பாக 15-07-2025 மாலை 4 மணி அளவில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் மாநகரச் செயலாளர் மாதவன் முன்னிலையில் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கல்விக் கண் திறந்த காமராசர் அவர்களின் 123 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கல்வி உரிமைப் பாதுகாப்புப் பரப்புரைப் பயணம் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலும், அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகிலும் காமராஜர் செய்த அரும்பணிகள் குறித்து மக்களிடத்தில் எடுத்துரைக்கும் விதமாக தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்வில் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத்தலைவர் முகில் ராசு, ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் விடுதலை செல்வன்,மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, சரஸ்வதி,தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன்,மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, மற்றும் கழகத் தோழர்கள் ராஜசிங்கம்,ஸ் ரீஜா, ஆத்துப்பாளையம் மதன், முத்து...

சேலத்தில் கழக தெருமுனைக் கூட்டம்

சேலத்தில் கழக தெருமுனைக் கூட்டம்

“இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல்” என்ற தலைப்பில் சேலம் மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டம் 05.07.2025 அன்று பொன்னம்மாப்பேட்டை தண்ணீர் தொட்டி அருகில் மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாநகரத் தலைவர் பாலு தலைமை வகித்தார். சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகர தலைவர் பாலு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சேலம் மாநகர பொருளாளர் பிரபு மற்றும் சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிமுருகன் ஆகியோரின் அரசியல் நையாண்டி நிகழ்வும் நடைபெற்றது. நிறைவாக நந்தகுமார் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவு மற்றும் தேநீர் தோழர் நந்தகுமார் அவர்கள் வழங்கினார். தோழர்கள் அருண்பாண்டியன், பாலு ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். சங்கிகளின் மிரட்டல் கூட்டம் தொடங்குவதற்கு அரைமணிநேரத்திற்கு முன்பாகவே 30க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தோழர்கள் காவல்துறை அதிகாரிகளிடம்...

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார அமைப்புகளைக் கட்டுப்படுத்தவும், அனுமதி இல்லாத இடங்களில் சிலைகளை வைத்து மத மோதல்களைத் தூண்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலி பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள். நீதிமன்ற ஆணைகள், தமிழ்நாடு அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்ய வலியுறுத்தி மனுக்களை நீதிமன்ற ஆணை நகல்களுடன் இணைத்து கோரிக்கை மனு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,மாவட்ட...

சேலம் இளைஞரணி முடிவுகள்!

சேலம் இளைஞரணி முடிவுகள்!

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் வெள்ளார் பகுதியில் 06.07.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்திற்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம், சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட இளைஞர் அணியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து தோழர்கள் அனைவரும் தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கினார்கள். தீர்மானங்கள்: 1). ஜூலை மாத இறுதிக்குள் சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் மேச்சேரியில் கருத்தரங்கம் நடத்துவது எனவும், 2). கிராமப்புற பகுதிகளில் மாதம் ஒரு தெருமுனைக் கூட்டம் நடத்துவது, 3). மாதம் ஒரு பகுதியில் கிளைக் கழக சந்திப்பு நடத்தி புதிய இளைஞர்களை திரட்டுவது. 4). புதிய இளைஞர்களுக்கு வருடம் ஒரு பயிலரங்கம் இளைஞர் அணி சார்பாக நடத்துவது,...

கழகத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

கழகத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

20.06.2025 அன்று கழகத் தலைவரின் 78 வது பிறந்தநாளில் சேலம் மாவட்ட மகளிர் அணி சார்பில் தலைவரை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கழகத் தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக மகளிர் அணி சார்பில் ரூ.10,000 வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் சுதா, சரசுவதி மற்றும் தோழர்கள் கலைச்செல்வி, காயத்ரி, கோமதி, கீதா, தேன்மொழி, இராணி, அருள்மொழி, மகிழினி ஆகியோர் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 10072025இதழ்

பாராட்டத்தக்க முயற்சி!  பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

பாராட்டத்தக்க முயற்சி! பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

ஆசிரியர் சிவகாமி முன்னெடுப்பில் புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஒரு வருட செயல் திட்டமாக மாதம் 500 ரூபாய் நிதி பங்களிப்பு செய்வதாக தீர்மானித்து செயல்பட்டு வருகிறது. முதல் தவணையாக ஜூன் மாதம் ரூ.8000 வழங்கியள்ளனர். குழுவில் இணைந்து ஒரு வருடத்திற்கு வளர்ச்சி நிதி வழங்க விருப்பமுள்ள தோழர்கள் தகவல் தெரிவிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். பெரியார் முழக்கம் 26062025இதழ்

தமிழ்நாடு முதல்வருடன் கழகத் தலைவர் சந்திப்பு!

தமிழ்நாடு முதல்வருடன் கழகத் தலைவர் சந்திப்பு!

தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 12.06.25 வியாழன் அன்று மேட்டூரில் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது “குடியரசு 100” எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்ட 3 புத்தகங்கள் அடங்கிய தொகுதியை கழகத் தலைவர் அவர்கள் முதல்வருக்கு வழங்கினார். மேலும் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் அவர்கள் புரட்சிப் பெரியார் முழக்கத்தில் வெளிவந்த தலையங்கங்களின் தொகுப்பாக கழகம் வெளியிட்ட “ஆரிய மாடலா? திராவிட மாடலா?” நூலை முதல்வருக்கு வழங்கினார். இச்சந்திப்பின் போது மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வகணபதி, மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈஸ்வரன், மேட்டூர் சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், சேலம் மாவட்ட அமைப்பாளர் அன்பு ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் 19062025இதழ்

மேச்சேரியில் பொதுக்கூட்டம்

மேச்சேரியில் பொதுக்கூட்டம்

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்! இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மேச்சேரியில் 20.04.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.தாமோதரன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்வு மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மகிழவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நிறைவுரையாக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி அவர்கள் கருத்துரையாற்றினார். இறுதியாக சேலம்...

நாத்திகர் விழா! கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நாத்திகர் விழா! கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தோழர்களுக்கு வணக்கம்,வருகிற நாள் 24.05.25 சனிக்கிழமை சேலம் மாவட்டம் கொளத்தூரில் திராவிடர் விடுதலைக் கழக பெண்களே தலைமையேற்று முழுமையாக நடத்தும் “நாத்திகர் விழா “நடைபெற உள்ளது. “நாத்திகர் விழா”வின் முதல் நிகழ்வாக முக்கிய நிகழ்வாக மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது. மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில், 1. முதுகில் அலகு குத்தி கார் இழுப்பது 2. முதுகில் அலகு குத்தி தொங்கும் பறவைக் காவடி 3. தீச்சட்டி ஏந்துதல் 4. ஆணிப் படுக்கையில் படுத்து வருவது 5. அரிவாளின் மீது ஏறி நிற்பது 6. கன்னத்தில் அலகு குத்துவது 7. கன்னத்தில் முதுகில் எலுமிச்சம்பழம் குத்துவது 8. நாக்கில் சூடத்தை எரிய விடுவது 9. நெருப்பை கக்குவது 10. சுருள் வீச்சு 11. தீப்பந்தம் சுற்றுதல் 12. சிலம்பம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை கீழ்காணும் அலைபேசி எண்ணில் முன்கூட்டியே பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். “மூடநம்பிக்கைகளை...

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

கோவை: சிவானந்தா காலனியில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 135-வது பிறந்தநாளில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் நவீன் அவர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துகொண்டனர். பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் டெம்போ சிவா, திவிக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், திவிக கோவை மாநகரச் செயலாளர் வெங்கட், திவிக கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், முன்னாள் கோவை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் மதிவாணன், தமிழ்ப்புலிகள் தோழர்கள் தம்பி செந்தில், கோவை குமார், ராமகிருஷ்ணன், திவிக தோழர்கள் ஸ்டாலின், மாதவன், நிலவழகன், ராமகிருஷ்ணன், கீர்த்தீகா, அபிலேஸ் பாண்டியன் மற்றும் மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இறுதியாக ரத்தினபுரி பகுதி திவிக பொறுப்பாளர்...

ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!-சேலத்தில் ரயில் மறியல்! கோவையில் கருப்புக்கொடி! சென்னை மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டங்கள்…

ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!-சேலத்தில் ரயில் மறியல்! கோவையில் கருப்புக்கொடி! சென்னை மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டங்கள்…

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு எனும் முழக்கத்தோடு.. 25.04.2025 வெள்ளி மாலை 4.00 மணியளவில் சேலம் ரயில் நிலையத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை வகித்தார். கழக மாநில வெளியீட்டுச் செயலாளர் கோபி.இராம.இளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் ராவண பிரபு, CPML மக்கள் விடுதலை ப.செல்வகுமார், உழைப்போர் இயக்கம் கண்ணன், புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கலந்து கொண்டவர்கள்: அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், தலைமைக் குழு...

சங்கராச்சாரிக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்!

சங்கராச்சாரிக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்!

கோவை: காஞ்சி விஜயேந்திர சங்கராச்சாரி அரசியல் சட்டத்திற்கு எதிராக இன ஒதுக்கல் பேசியதைக் கண்டித்து கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு, கழகத்தின் கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் இரவிக்குமார், தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் இளவேனில், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், Cpi ml ரெட் ஸ்டார் இனியவன், மக்கள் அதிகாரம் கணேஷ், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிக்குமார் மற்றும் தோழமை அமைப்பினரும், திராவிடர் விடுதலைக் கழக மாநகரச் செயலாளர் வெங்கட், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாதவன், சதீஷ், ஸ்டாலின் ராஜா, மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், கௌதம், கதிரவன் கலந்து கொண்டனர். நாமக்கல்: குமாரபாளையம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாலை...

மகளிர் ஒன்று கூடல்!

மகளிர் ஒன்று கூடல்!

திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட மகளிர் அணி கலந்துரையாடல் கூட்டம் 30.03.2025 ஞாயிறு காலை 11.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை ஏற்காடு JP ரெசிடென்சில் சிறப்பாக நடைபெற்றது. கடவுள் மறுப்பு வாசகம் திருப்பூர் யாழினி கூற கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தோழர் சுதா தலைமை வகித்தார். சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தோழர் திவ்யா வரவேற்புரை நிகழ்த்தினார். கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் தோழர் சிவகாமி அவர்களும் தோழர்களிடையே கருத்துரையாற்றினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு குடும்பங்களில் கடைபிடிக்கப்படும் மூடநம்பிக்கையால் பெண்ணடிமைத்தனம் எவ்வாறு வளர்கிறது, பெண்கல்வியால் தமிழ் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் தோழர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இறுதியாக சேலம்...

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

சேலம்: 18/03/2025 வீரகனூர் பேருந்து நிலையம், பெரம்பலூர் வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது. பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. ஆத்தூர் நகர செயலாளர் கணபதி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைகணபதி, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், பெரம்பலூர் சுதாகர் ஆகியோர் தலைமை வகித்தனர். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், ஆத்தூர் நகர தலைவர் மகேந்திரன், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், ஆத்தூர் நகர செயலாளர் கணபதி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை தாமோதரன் ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரை...

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

விழுப்புரம்: 17/03/2025 (திங்கள்) கீழ்பெண்ணாத்தூர் கலைஞர் பேருந்து நிலையம், கடலாடிகுளம் பேருந்து நிலையம், செஞ்சி பேருந்து நிலையம், அப்பம்பட்டு மசூதி அருகில் நடைபெற்றது. காலை உணவு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தோழர் பொன்.சுப்ரமணி வழங்கினார். நம் பிரச்சார பயணத்தின் தலைப்பான பெரியார் ஏன் எதிரிகளை பதறவைக்கிறார் என்ற செய்தியை அவர்களின் சிந்தனைப் பலகையில் 17/3/2025 அன்றைய செய்தியாக எழுதி வரவேற்றனர், மேலும் ராமநாதன்,கோதண்டராமன், ஆதிமூலம், தமிழ் மக்கள் கட்சியை சார்ந்த முகிலன் அம்பேத்கர் மக்கள் கட்சி விழுப்புரம் மாவட்ட செயலாளர் சு.மழைமேனி பாண்டியன், பகுத்தறிவு கழகத்தை சார்ந்த துரை.திருநாவுக்கரசு, பேராசிரியர். ஜாக்குலின், வி.சி.க. விழுப்புரம் மாவட்ட செயலாளர் தனஞ்செழியன், திராவிடர் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கோபண்ணா, பேராசிரியர் நந்தகுமார், தமுமுக அலிஜான் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் செயலாளர் ராசநாயகம், க.ராமர், பூ.ஆ இளையரசன், தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர்...

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும், அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும் திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று ‘பெரியார் பணி செய்வதே என் கடன்’ என்ற லட்சிய வெறியோடு ஒரு வாரகாலம் பயணித்த கழகச் செயல் வீரர்களை இம்மாநாடு பாராட்டுகிறது, மகிழ்கிறது.இந்தப் பயணத்தில் தோழர்கள் செலுத்திய உழைப்பு வீண் போகாது; வரலாற்றில் பதியப்படும் என்று இந்த மாநாடு பெருமை அடைகிறது. பெரியார் முழக்கம் 27032025இதழ்

பரப்புரையில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள்!!

பரப்புரையில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள்!!

சென்னை பரப்புரைக் குழு: கிழக்கு தாம்பரம் வால்மீகி நகரில் சங்கராச்சாரியார் படத்தை சட்டைப் பையில் வைத்திருந்த வெங்கடேஷ் என்ற புதிய ஆதரவாளர் பரப்புரை பயணத்தைக் கூர்ந்து கவனித்து கூட்டம் முடிந்ததும் தோழர்களுக்கு தேநீர் வாங்கி கொடுத்தார். மேலும், “நான் ஆன்மிகவாதிதான். ஆனால் பக்தி வேறு அரசியல் வேறு” என்றும், “எனக்குப் பெரியாரை பிடிக்கும். பெரியார் இல்லை என்றால் நான் இன்றைக்கு இந்த டிராவல்ஸ் தொழிலை வைத்திருக்க முடியாது” என உணர்ச்சி பொங்க கூறினார். “இன்றைக்கு சீமான் போன்ற ஆட்கள் பெரியாரைப் பற்றி அவதூறு பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் இந்த மாறி அயோக்கியனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துங்கள். பெரியார் இல்லை என்றால் இன்றைக்கு கல்வி கற்க முடியமா தமிழர்கள்” என்றும் கூறினார். அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பரப்புரை வாகனத்திற்கு பெட்ரோலை கேனில் தர மறுத்தனர். வெங்கடேஷ் அவர்கள் சென்று கழகப் பிரச்சார ஜெனரேட்டர்க்கு 610 ரூபாய்க்கு பெட்ரோல்...

பரப்புரைப் பயணங்கள் தொடங்கின- பெரியாரின் பெரும் தொண்டுகள் மக்களிடையே விளக்கம்! இளைஞர்கள் பெண்கள் பேராதரவு…

பரப்புரைப் பயணங்கள் தொடங்கின- பெரியாரின் பெரும் தொண்டுகள் மக்களிடையே விளக்கம்! இளைஞர்கள் பெண்கள் பேராதரவு…

பெரியார் ஏன் எதிரிகளைப் பதறவைக்கிறார்? பரப்புரைப் பயணம் கடந்த 15-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது 16-ஆம் தேதி ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடங்கியது. கழக செயல் வீரர்கள் தனி வாகனங்களில் பயணத்தில் பங்கேற்கிறார்கள். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கழக செயல் வீரர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த பரப்புரையில் இளைஞர்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். கழக நூல்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். பெரியாரின் எதிர்நீச்சல் அவர் உருவாக்கிய சமூக மாற்றங்களைக் கழகப் பேச்சாளர்கள் மக்களிடம் எடுத்துக் கூறுகிறார்கள். கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. பயணங்களின் செய்தித் தொகுப்பு சென்னை: “பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” எனும் தலைப்பில் சென்னை அணி செல்லும் பரப்புரைப் பயணத்தின் தொடக்க விழா,இராயப்பேட்டையில் 15.03.2025 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் சிறப்புரையாற்றி பரப்புரைப் பயணத்தை துவக்கி வைத்தார். திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.என்.துரை, 119-வது...

மகளிர் தினம் – கழகப் பெண்கள் துண்டறிக்கை பிரச்சாரம்!

மகளிர் தினம் – கழகப் பெண்கள் துண்டறிக்கை பிரச்சாரம்!

மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிர் தின வாழ்த்துகள் கூறி 2000 துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. 08.03.25 அன்று மேட்டூர் அரசு கலைக் கல்லூரி முன்பு கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் சுதா, மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், தேன்மொழி, முத்துராஜ், இராமச்சந்திரன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் ஆகியோரும், வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர், இந்திராணி, நந்தினி ஆகியோர்களும், கொளத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரசுவதி, தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், அழகேஸ்வரி, கோமதி ஆகியோர் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள், இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். 08.03.25 அன்று தொடர்ந்து சேலம் மாநகர் செளடேஸ்வரி மகளிர் கல்லூரி முன்பு சேலம்...

சடலங்களைை இடுகாடு வளைை சுமந்து செசல்கிறாார்கள்  “மரபுகளைைத் தகர்க்கும் திவிக பெெண்கள்‌

சடலங்களைை இடுகாடு வளைை சுமந்து செசல்கிறாார்கள் “மரபுகளைைத் தகர்க்கும் திவிக பெெண்கள்‌

தமிழ்நாட்டில் பெரியாரியப் பெண்கள் பண்பாட்டு புரட்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இந்து ஆங்கில நாளேடு இதை சுட்டிக்காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் இறந்தவர்களின் சடலங்களை திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த பெண்கள் இடுகாடு வரை சுமந்து சென்று எந்த வித சடங்கு சம்பிரதாயம் இன்றி உடலை அடக்கம் செய்து வருகிறார்கள். பெண்கள் சுடுகாட்டுக்கு போவதே சமூகம் தடைச் செய்து உள்ளது. தடையை தகர்த்து சேலம் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக 100-க்கு மேற்பட்ட சடலங்களை பெண்களே சுமந்து சென்று இறுதி நிகழ்வுகளை செய்துள்ளனர் என்று இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளிட்டுள்ளது. (மார்ச் 10, 2025). பெரும்பாலான மதங்கள் பெண்களை சுடுகாடு செல்வதற்கு அனுமதிப்பதில்லை. தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மரணத்தில் கூட இடுகாடு செல்ல முடியாது. ஆனால் சேலம் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெண்கள் சடலங்களை சுடுகாடு சுமந்து சென்று மத மரபுகளை உடைத்து இருக்கிறார்கள். இந்த...

நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம்

நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம்

ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் தோழர்கள் நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி முன்னிலையில், தலைமைக் குழு உறுப்பினர் ஈசுவரன் தலைமையில் நடைபெற்றது. காவலாண்டியூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழி எடுக்கப்பட்டு எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் மாலை அணிவித்து மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்நிகழ்வில் சேலம் மாவட்டக் கழக ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், வழக்கறிஞர் சரவணன் பரத், காவை.தங்கராசு, மாரி, மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் மேட்டூர் நாகராஜ்,ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழில் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.திருமண நிகழ்வின் மகிழ்வாக இணையர்கள் புரட்சிப் பெரியார் முழுக்கத்திற்கு ரூபாய் ₹1000/- வளர்ச்சி நிதியை கழகத் தலைவரிடம் வழங்கினர்.

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய அரசு தமிழ்நாட்டின்‌ பள்ளிக்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்து தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டுள்ளது. திமுக சார்பில் டெல்லியில் கண்டன‌ ஆர்ப்பாட்டம்‌ நடந்து முடிந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்‌ தமிழ்நாடடின்‌ முக்கிய நகரங்களில் பிப்.13 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பல்கலைக் கழக பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த புதிய விதிகளில் பல்கலைக்கழகங்கள் ஒன்றிய அரசின்‌ நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆபத்து அடங்கியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி துண்டறிக்கை அச்சிடப்பட்டு மக்களிடம் வழங்கப்பட்டன. கழகம்‌ ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு… சேலம்: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் யூஜிசி விதிகளில் திருத்தம் செய்து மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற, இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கிற ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து 13.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்...

மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.01.2025 அன்று மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சேலம் மாவட்டப் பொருளாளர் சம்பத், மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், மாவட்ட அமைப்பாளர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுதா மற்றும் பொறுப்பாளர்களும், தோழர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். 2025ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் இயக்க வளர்ச்சி குறித்தும் தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். புரட்சிப் பெரியார் முழக்க சந்தா தொகையை வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தலைமைக்கு ஒப்படைப்பது குறித்தும், சேலம் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நங்கவள்ளி கிருஷ்ணன், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளராக இராஜேந்திரன்,...

முடிகொண்டான் சாரங்கபாணி முடிவெய்தினார்.

முடிகொண்டான் சாரங்கபாணி முடிவெய்தினார்.

பெரியாரின் பெரும் தொண்டரும், தமிழ்நாடு அரசின் ‘நல்லாசிரியர்’ விருது பெற்றவரும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததற்காக, தனது மகள், மகனுடனும், கழகத் தலைவர், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் ஆகியோருடன் தடா வழக்கில் சிறை சென்றவருமான முடி கொண்டான் சா.சாரங்கபாணி, தனது 93ஆவது வயதில் 03.01.2025 அன்று தனது இல்லத்தில் முடிவெய்தினார். அவருக்கு நமது புகழ் வணக்கங்கள். பெரியார் முழக்கம் 09012025 இதழ்

ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்; சேலத்தில் நடந்த இளைஞர் – மாணவர் கூட்டத்தில் முடிவு!

ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்; சேலத்தில் நடந்த இளைஞர் – மாணவர் கூட்டத்தில் முடிவு!

சேலம்: சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.09.2024 அன்று சேலம் தாதகாப்பட்டியில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஏற்காடு தேவபிரகாசு தலைமை தாங்கினார். அமைப்பாளர் வெற்றிமுருகன் முன்னிலை வகித்தார். இதில் வருகிற 16.10.2024 அன்று சேலம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநர் ரவியைக் கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், பெரியார் நினைவு நாளில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A (h) மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை விளக்கி மாணவர்களிடையே விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவது எனவும், மாணவர் விடுதிகளில் சந்திப்பு – அறிவியல் கண்காட்சி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மாநகரத் தலைவர் பாலு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகரச் செயலாளர்...

காவல்துறையைக் கண்டித்துப் பொதுக்கூட்டம்

காவல்துறையைக் கண்டித்துப் பொதுக்கூட்டம்

மேட்டூர் நகரக் கழக சார்பில் மேட்டூர் சரகக் காவல்துறையினரின் போக்கைக் கண்டித்துக் கண்டனப் பொதுக்கூட்டம் 04.09.2024 அன்று மேட்டூர் சதுரங்காடியில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு தலைமை வகித்தார். மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. இதில் சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இரா.திருமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மேட்டூர் சரகக் காவல் துறையின் அடாவடிப் போக்கினைக் கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் இருக்கும் காவல் நிலையங்களில் காவல்துறை அதிகாரிகளால் நடைபெறும் விதிமீறல்கள், லஞ்சம், போதை பொருள் விற்பனைக்கு ஆதரவு, எளிய மக்களிடம் மிரட்டி அடித்து பணம் பறித்தல் போன்ற விவரங்களைத் திரட்டி ஆதாரத்துடன் பொதுக்கூட்டத்தில் எடுத்துரைத்தார். மேலும் மேட்டூர் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் முதல் மேட்டூர் சரகச் சாதாரணக் காவலர் வரையில் உள்ளோர் சட்ட விரோதச் செயல்களை மீண்டும்...

தேனி, திண்டுக்கல், திருச்சியிலும் கழகம் ஆர்ப்பாட்டம்!

தேனி, திண்டுக்கல், திருச்சியிலும் கழகம் ஆர்ப்பாட்டம்!

சேலம் : “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிமுருகன் வரவேற்புரையாற்றினார். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட இளைஞரணித்...

சேலத்தில் தலைவர், சென்னையில் பொதுச்செயலாளர் பங்கேற்பு கல்வி உரிமைகளைப் பறிக்கும் பாஜகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலத்தில் தலைவர், சென்னையில் பொதுச்செயலாளர் பங்கேற்பு கல்வி உரிமைகளைப் பறிக்கும் பாஜகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம் : “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிமுருகன் வரவேற்புரையாற்றினார். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட இளைஞரணித்...

சேலத்தில் இளைஞர் – மகளிர் – மாணவர் அணிகள்  கலந்துரையாடல்

சேலத்தில் இளைஞர் – மகளிர் – மாணவர் அணிகள் கலந்துரையாடல்

சேலம் : சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – மகளிர் அணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 01.09.2024 இளம்பிள்ளை நேரு,வேடியப்பன் இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. சேலம் (கி) மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலை வகித்தார். கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் (கி) மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் தமிழரசன் ஆகியோர் இளைஞர்கள் மத்தியில் தங்களது கள அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேலும் சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – மகளிர் அணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகக்த்திற்குப் புதியப் பொறுப்பாளர்களை நியமித்தார். அவை பின்வருமாறு:- மாவட்ட இளைஞர் அணித் தலைவராக ஏற்காடு தேவபிரகாஷ்,...

விநாயகர் சதுர்த்தி அத்துமீறலைத் தடுக்க வேண்டும்! கழகம் சார்பில் காவல்துறைக்குக் கோரிக்கை!

விநாயகர் சதுர்த்தி அத்துமீறலைத் தடுக்க வேண்டும்! கழகம் சார்பில் காவல்துறைக்குக் கோரிக்கை!

விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்களைத் தடுக்கக் கோரி கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனு அளிக்கப்பட்டுவருகிறது. சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலிப் பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்டு அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 20.08.2024 அன்று சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் சென்னை மாவட்டக் கழக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை: விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் இந்துத்துவ அமைப்புகள் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைகளைத் துளியும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும்...

ஜாதி – குடி போதைக்கு எதிரானப் பரப்புரைக்குத் தயாராகும் கழகம்! மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் பேரெழுச்சி!

ஜாதி – குடி போதைக்கு எதிரானப் பரப்புரைக்குத் தயாராகும் கழகம்! மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் பேரெழுச்சி!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.08.2024 அன்று தர்மபுரி B.அக்ரகாரத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கழகத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது. நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தர்மபுரி மாவட்டத் தலைவராக வெ.வேணுகோபால், தர்மபுரி மாவட்டச் செயலாளராக கு.நாகராஜ், மாவட்ட அமைப்பாளராக மா.பரமசிவம், பென்னாகரம் ஒன்றிய அமைப்பாளராக இரா.சரவணன் (B.அக்ரஹாரம்), காரிமங்கலம் ஒன்றிய அமைப்பாளராக கோ.செந்தில்குமார், நல்லம்பள்ளி ஒன்றிய அமைப்பாளராக மு.இராமதாஸ், தர்மபுரி ஒன்றிய அமைப்பாளராக பி.முத்துலட்சுமி, அரூர் ஒன்றிய அமைப்பாளராக பெருமாள், ஏரியூர் ஒன்றிய அமைப்பாளராக மா.அசோக்குமார், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளராக சா.வையாபுரி ஆகியோரை நியமனம் செய்தார். சேலம் கிழக்கு: சேலம் கிழக்கு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.08.2024 அன்று மாலை 6 மணியளவில் கருப்பூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில்...

வனவாசியில் கலந்துரையாடல் கூட்டம்

வனவாசியில் கலந்துரையாடல் கூட்டம்

நங்கவள்ளி : வனவாசி கிளைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 01.08.2024 அன்று வனவாசி நகரத் தலைவர் பா.செந்தில்குமாரின் இல்லத்தில் நடைபெற்றது. இதற்கு சேலம் மாவட்டக் கழக அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, மேட்டூர் அண்ணாதுரை, கிட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாதந்தோறும் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது, கிளைக் கழக சந்தாவாக ரூ.100/- வழங்குவது, புதிய தோழர்களைக் கழகத்தில் இணைப்பது எனப் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் இராசேந்திரன், கிருஷ்ணன், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், பொருளாளர் பன்னீர்செல்வம், அமைப்பாளர் கதிர்வேல், நங்கவள்ளி பகுதி தோழர்கள் சிவக்குமார், விஸ்வநாதன், தானாவதியூர் பகுதியைச் சேர்ந்த புதிய தோழர்கள் சந்திரசேகரன், விக்னேஷ் ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை ஓமலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை ஓமலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரியும், தொடர் ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், 04.08.2024 அன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அண்ணா சிலை அருகில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கழக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல் தலைமை தாங்கினார். நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் பொ.கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், சிந்தாமணியூர் நகரத் தலைவர் ம.ரவிக்குமார், சிந்தாமணியூர் நகரப் பொருளாளர் கோ.ஜெயபிரகாஷ், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் சி.தங்கதுரை, பவளத்தானூர் இரா.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் இரா.தெய்வானை, வி.சி.க ஒழுங்கு நடவடிக்கைக் குழு மாநிலத் துணைச் செயலாளர் சௌ.பாவேந்தன், திராவிடர்...

கொளத்தூரில் கலந்துரையாடல்;  மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

கொளத்தூரில் கலந்துரையாடல்; மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

கொளத்தூர்: கொளத்தூர் நகரக் கலந்துரையாடல் கூட்டம் 27-07-2024 அன்று கொளத்தூர் சோதனைச் சாவடி அருகில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு, நங்கவள்ளி பொறுப்பாளர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இயக்க வளர்ச்சி மற்றும் புதியத் தோழர்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான செய்திகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கொளத்தூர் நகரக் கழகத்தின் எதிர்காலப் பணிகள் – புதியத் தோழர்களை அமைப்பாக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.. மேலும் இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அது பின்வருமாறு:- 1. மாதம்தோறும் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது. 2. பெரியார் படிப்பகத்தை முறையாக பயன்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவது. 3. புதிய தோழர்களைச் சந்தித்து அவர்களுடன் கழகம் – பெரியாரியல் குறித்து எடுத்துக்கூறி அமைப்பாக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. கூட்டத்தின் முடிவில் பெரியார் இயக்கத்தின்...

நங்கவள்ளி நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நங்கவள்ளி நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நங்கவள்ளி நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 22.07.2024 அன்று நங்கவள்ளியில் உள்ள அ.செ.சந்திரசேகரன் இல்லத்தில் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமையில் நடைபெற்றது. சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் அ.அண்ணாதுரை, சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, மே.கா.கிட்டு, கொளத்தூர் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இயக்க வளர்ச்சி குறித்தும், புதிய தோழர்களை இயக்கத்திற்கு சேர்ப்பது, சந்தா சேர்ப்பு மற்றும் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி நகரச் செயலாளர் பிரபாகரன், அ.செ.சந்திரசேகரன், அருள்குமார், ரமேஷ், ரவிக்குமார், பேரறிவாளன் ஆகியோர் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 25.07.2024 இதழ்