ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!-சேலத்தில் ரயில் மறியல்! கோவையில் கருப்புக்கொடி! சென்னை மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டங்கள்…
சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு எனும் முழக்கத்தோடு..
25.04.2025 வெள்ளி மாலை 4.00 மணியளவில் சேலம் ரயில் நிலையத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை வகித்தார். கழக மாநில வெளியீட்டுச் செயலாளர் கோபி.இராம.இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் ராவண பிரபு, CPML மக்கள் விடுதலை ப.செல்வகுமார், உழைப்போர் இயக்கம் கண்ணன், புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கலந்து கொண்டவர்கள்: அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் மாநகரத் தலைவர் பாலு, சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திவ்யா, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, மாவட்ட இளைஞர் அணித் தலைவர் தேவா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சுசி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவா, நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், இளம்பிள்ளை நகரத் தலைவர் ரமேஷ், கோபியிலிருந்து ஈரோடு மாவட்டச் செயலாளர் செல்வகுமார், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய கழகப் பொறுப்பாளர் அருளானந்தம், காந்தி நகர் கிளைத் தலைவர் சின்னத்தம்பி தோழர்கள் ராமச்சந்திரன் நடராஜன் ஆகியோர் மற்றும் சேலம் மாநகரம், ஈரோடு, நாமக்கல், இளம்பிள்ளை, மேட்டூர், நங்கவள்ளி, வனவாசி, காவலாண்டியூர், மேட்டூர் RS, மேச்சேரி, ஏற்காடு, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து தோழர்கள் 80 க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
மதுரை: உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் அரசியலமைப்பையும் அவமதிக்கும் ஆர்எஸ்எஸ் ஆளுநர் ஆர் என் ரவியைக் கண்டித்தும் பதவி விலகக் கோரியும் ஆர்ப்பாட்டம் 26.04.25 அன்று மாலை 4 மணியளவில் மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அண்ணாத்துரை (மக்கள் சட்ட உரிமைகள் இயக்கம்), மெய்யப்பன் (தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்), த.அபுதாஹீர்(எஸ்டிபிஐ), நடராசன் (மக்கள் அதிகாரம்), இசுமாயில் (தமிழக மக்கள் ஜனநாயக கட்சி), அம்ஜத்கான் (இந்திய தேசிய லீக்), இன்குலாப் (மாமன்ற உறுப்பினர் விசிக), சிதம்பரம் (தமிழ்ப்புலிகள் கட்சி), இராஜா (குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்), பித்தன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), மேரி (தமிழ்த்தேச மக்கள் முன்னணி), அனீஸ்(ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம்), கார்த்திக் (ஆதித்தமிழர் பேரவை), காளிதாசு (தமிழ் மாநிலக்குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), நிலவழகன் (மக்கள் தமிழகம் கட்சி), விடுதலை வீரன் (திராவிடத் தமிழர் கட்சி), கனியமுதன் (மாநிலத் துணைச் செயலாளர் விசிக), மணிபாபா (தமிழக வாழ்வுரிமைப் பாதுகாப்பு மக்கள் கட்சி), இராமலிங்கம் (மக்கள் அதிகாரக் கழகம்), அப்பாஸ் (தமுமுக & மனிதநேய மக்கள் கட்சி) ஆகிய தோழர்கள் கலந்துகொண்டு தங்கள் கண்டங்களைப் பதிவு செய்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வேங்கைமாறன், சத்தியமூர்த்தி மற்றும் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து, கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பனகல் மாளிகை அருகில் மாலை 4 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது..
ஆர்ப்பாட்டத்தில் MRF தொழிற்சங்கம் சேகர், மக்கள் அதிகாரக் கழகம் – வெற்றிச்செல்வன் பொதுச்செயலாளர், மைனர் வீரமணி – யூடு புரூடஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்..
ஆர்ப்பாட்டத்தில், கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி, வடசென்னை மாவட்ட செயலாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், திமுக தலைமைக் குழு உறுப்பினர் அன்பரசு, வழக்கறிஞர் இளமாறன் ஆகியோர் உட்பட சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
கோவையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த கோவை விமான நிலையம் வந்த ரவியை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொருளாளர் துரைசாமி அவர்கள் தலைமையில் இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் மாநில பொதுச் செயலாளர் இளவேனில், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் இராமச்சந்திரன், கோவை சிற்றரசு, கோவை குமார், நந்தன் தம்பி, சந்திரன், அன்னூர் முருகேசன், சுரேஷ், மூர்த்தி, நவீன், கொங்கு விடுதலைப் புலிகள் கட்சி விஸ்வநாதன், சண்முகம், கிருஷ்ணமூர்த்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், திவிக மாநகரத் தலைவர் நிர்மல் குமார், மாநகர செயலாளர் வெங்கட், சூலூர் தமிழ்ச்செல்வி, பல்லடம் சண்முகம், முத்து, ரவி சங்கீதா, சரஸ்வதி, மாரிமுத்து, யாழினி, கிருஷ்ணன், மாதவன், ஸ்டாலின் ராஜா, ஆட்டோ சந்திரன் தோழர்கள் கலந்து கொண்டு கைதாகினர்.
பெரியார் முழக்கம் 01052025இதழ்
