ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்; சேலத்தில் நடந்த இளைஞர் – மாணவர் கூட்டத்தில் முடிவு!

சேலம்: சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.09.2024 அன்று சேலம் தாதகாப்பட்டியில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சேலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஏற்காடு தேவபிரகாசு தலைமை தாங்கினார். அமைப்பாளர் வெற்றிமுருகன் முன்னிலை வகித்தார்.
இதில் வருகிற 16.10.2024 அன்று சேலம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநர் ரவியைக் கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், பெரியார் நினைவு நாளில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A (h) மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை விளக்கி மாணவர்களிடையே விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவது எனவும், மாணவர் விடுதிகளில் சந்திப்பு – அறிவியல் கண்காட்சி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மாநகரத் தலைவர் பாலு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சேலம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பிரபாகரன், அமைப்பாளர்கள் தங்கதுரை, சுசீந்திரன், திவாகர், சிவ சண்முகம், சேலம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திவ்யா, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், சேலம் மாநகரப் பொருளாளர் பிரபு, தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்கள் நாகராஜ், சரிதா, கவியரசு, இளம்பிள்ளை கோபி, சேலம் பரமேஷ், சுதர்சன், யாழினி, நிலா, தமிழ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக சேலம் மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் கவியரசு நன்றி கூறினார்.

மகளிரணி சந்திப்பு
மேட்டூர்: ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கழக மகளிரணி சந்திப்பு 06.10.2024 அன்று மேட்டூர் தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுதா தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி முன்னிலை வகித்தார். இதில் மகளிரணி அமைப்பாளர் சரசுவதி, சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, காவலாண்டியூர் கலைச்செல்வி, கொளத்தூர் காயத்ரி, அழகேஸ்வரி, தார்க்காடு இனியா, மேட்டூர் கீதா, நங்கவள்ளி கோகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் மகளிரணி சார்பில் மாத சந்தா பெறுவது எனவும், வருடந்தோறும் பெரியார் பிறந்தநாள் – மே தினம் மற்றும் மகளிர் தினத்தில் பள்ளிக் கல்லூரி வளாகங்களில் துண்டறிக்கை வழங்குவது, வருடம் ஒருமுறை சுற்றுலா செல்வது, மகளிர் நலன் சார்ந்து தனி கவனம் செலுத்துவது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நங்கவள்ளி
நங்கவள்ளி: நங்கவள்ளி ஒன்றியக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 29.09.2024 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் நங்கவள்ளி KMT நகர் பகுதியில் உள்ள நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன் இல்லத்தில் நடைபெற்றது.
நங்கவள்ளி அ.செ.சந்திரசேகரன் தலைமை வகித்தார். வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர் முன்னிலை வகித்தார்.
இதில் அக்டோபரில் பெரியார் 146வது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. வனவாசி நகரத் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 10.10.2024 இதழ்

You may also like...