தந்தை பெரியார் தொழிற்சங்கம் திறப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தந்தை பெரியார் தொழிற்சங்க பேரவையின் கிளை திறப்பு விழா ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் சார்பாக தந்தை பெரியார் தொழிற்சங்கம் திறப்பு விழா 23.10.2025 அன்று நடைபெற்றது. சி.குப்புசாமி (பொதுச் செயலாளர் தந்தை பெரியார் தொழிற்சங்க, பேரவை) தலைமையில் கோ. செல்லதுரை (அந்தியூர் கிளை தலைவர்) வரவேற்புரையாற்றினார்.
காவை ஈஸ்வரன் (தலைமைக் குழு உறுப்பினர்), நாத்திக ஜோதி (ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர்), ஈஸ்வரன் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் விசிக, வேங்கை பொன்னுச்சாமி தமிழ்ப் புலிகள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் ஆகியோர் தொழிற்சங்கத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். கௌசல்யா அந்தியூர், பெருமாள் அந்தியூர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கழகத்தின் சார்பாக வேணுகோபால் பவானி, சேகர் வெள்ளி திருப்பூர், குமரேசன் கொளத்தூர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியாரிய உணர்வாளர்கள், தோழமை இயக்கத் தோழர்கள் என 35க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 30102025
