நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம்

ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் தோழர்கள் நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி முன்னிலையில், தலைமைக் குழு உறுப்பினர் ஈசுவரன் தலைமையில் நடைபெற்றது.

காவலாண்டியூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழி எடுக்கப்பட்டு எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் மாலை அணிவித்து மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்நிகழ்வில் சேலம் மாவட்டக் கழக ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், வழக்கறிஞர் சரவணன் பரத், காவை.தங்கராசு, மாரி, மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் மேட்டூர் நாகராஜ்,ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழில் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.திருமண நிகழ்வின் மகிழ்வாக இணையர்கள் புரட்சிப் பெரியார் முழுக்கத்திற்கு ரூபாய் ₹1000/- வளர்ச்சி நிதியை கழகத் தலைவரிடம் வழங்கினர்.

You may also like...