நாத்திகர் விழா! கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
தோழர்களுக்கு வணக்கம்,வருகிற நாள் 24.05.25 சனிக்கிழமை சேலம் மாவட்டம் கொளத்தூரில் திராவிடர் விடுதலைக் கழக பெண்களே தலைமையேற்று முழுமையாக நடத்தும் “நாத்திகர் விழா “நடைபெற உள்ளது.
“நாத்திகர் விழா”வின் முதல் நிகழ்வாக முக்கிய நிகழ்வாக மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது. மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில்,
1. முதுகில் அலகு குத்தி கார் இழுப்பது
2. முதுகில் அலகு குத்தி தொங்கும் பறவைக் காவடி
3. தீச்சட்டி ஏந்துதல்
4. ஆணிப் படுக்கையில் படுத்து வருவது
5. அரிவாளின் மீது ஏறி நிற்பது
6. கன்னத்தில் அலகு குத்துவது
7. கன்னத்தில் முதுகில் எலுமிச்சம்பழம் குத்துவது
8. நாக்கில் சூடத்தை எரிய விடுவது
9. நெருப்பை கக்குவது
10. சுருள் வீச்சு
11. தீப்பந்தம் சுற்றுதல்
12. சிலம்பம்
போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை கீழ்காணும் அலைபேசி எண்ணில் முன்கூட்டியே பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
“மூடநம்பிக்கைகளை ஒழிப்போம்!”
“அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்!”
– திராவிடர் விடுதலைக் கழக மகளிர் அணி,
சேலம் மாவட்டம்
கொளத்தூர் தோழர். காயத்திரி
7373893451
பெரியார் முழக்கம் 15052025இதழ்
