சூரியகுமார்-காயத்ரி இல்ல மணவிழா!
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் கழக சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ப. கு. சூரியகுமார்- காயத்ரி ஆகியோரின் மகன் இனியன் அவர்களுக்கும், சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தை சேர்ந்த ம.சதிஷ்குமார்- ம.சுமதி ஆகியோரின் மகள் ரிதிசக்தி அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா 14.09.2025 அன்று காலை 10.30 மணியளவில் மேட்டூர், நவப்பட்டி திருமலை மாதவி மகாலில் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராஜ் வரவேற்புரையாற்றி பெரியார் பாடல்களை பாடினார்.
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் தலைமையேற்புரையாற்றி, இணையர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இணையர்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஏற்பு ஒப்பந்தம் செய்து வைத்து உரையாற்றினார்.
இணையர்கள் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ 25,000 கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் அவர்களிடமும், ரூ25,000 கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடமும் வழங்கினர்.
இறுதியாக சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ப.கு. சூரியகுமார் நன்றியுரையாற்றினார். இதில் சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். கருஞ்சட்டைக் குடும்பங்களின் விழாவாக சிறப்புடன் நடைபெற்றது
பெரியார் முழக்கம் இதழ் 25092025
