ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை ஓமலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரியும், தொடர் ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், 04.08.2024 அன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அண்ணா சிலை அருகில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கழக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல் தலைமை தாங்கினார். நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் பொ.கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.
சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், சிந்தாமணியூர் நகரத் தலைவர் ம.ரவிக்குமார், சிந்தாமணியூர் நகரப் பொருளாளர் கோ.ஜெயபிரகாஷ், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் சி.தங்கதுரை, பவளத்தானூர் இரா.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் இரா.தெய்வானை, வி.சி.க ஒழுங்கு நடவடிக்கைக் குழு மாநிலத் துணைச் செயலாளர் சௌ.பாவேந்தன், திராவிடர் பண்பாட்டு நடுவப் பொறுப்பாளர் முல்லைவேந்தன், தமிழ்ப்புலிகள் கட்சியின் சேலம் மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் தீனா, தமிழ்ப்புலிகள் கட்சியின் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் கார்த்தி, சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ், வி.சி.க. கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் சேட்டு குமார், சேலம் மாநகரச் செயலாளர் இரா.ஆனந்தி, சேலம் மாநகர அமைப்பாளர் மோ.பாலு, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் ஆகியோர் ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக ‘தனிச் சட்டத்தை’ தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்கள்..
நிறைவாக கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ப.இரத்தினசாமி கண்டன உரையாற்றினார். அவர் பேசுகையில் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக கழக சார்பில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது – இதற்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களையும் கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. அண்மையில் தருமபுரியில் முகம்மது ஆசிப் என்ற இஸ்லாமிய இளைஞர் தலித் வகுப்பைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தார் என்பதற்காக அவரது சகோதரர்களால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இப்படி ஆணவப் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றப்பட்டால் பெருமளவு ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்த வாய்ப்பு இருப்பதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டத்தை இயற்ற வேண்டுமெனத் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.
முடிவில் சிந்தாமணியூர் நகரச் செயலாளர் முருகேசன் அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகரம், சிந்தாமணியூர், குரங்குச்சாவடி, ஏற்காடு, இளம்பிள்ளை, கொளத்தூர், மேட்டூர், மேட்டூர் RS, நங்கவள்ளி, வனவாசி, தாரமங்கலம், மேச்சேரி கோவில் வெள்ளார், மூலப்பாதை உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்