சேலம், நாமக்கல் மாவட்டத்தில் வாகன பேரணியுடன் பெரியார் பிறந்த நாள் விழா!

சேலத்தில் காலை முதல் மாலை வரை 20-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு வாகனப் பேரணியாக சென்று, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சேலம் கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் எங்கு திரும்பினாலும் பெரியார் பதாககைகள், படங்கள் இருந்த காட்சி பெரும் மகிழ்ச்சியை தந்தது. அனைத்துப் பகுதிகளிலும் பெரியார் படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

சேலம் மேற்கு: 17.09.2025 புதன் காலை 9.00 மணியளவில் கோனூர் சமத்துவபுரத்தில் எழுச்சியுடன் தொடங்கியது. சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமை வகித்தார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அதன் பிறகு தோழர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணி சமத்துவபுரம் பெரியார் சிலையில் இருந்து தொடங்கி மேச்சேரி, பனங்காடு, மசக்காளியூர், கீழ் வனவாசி, வனவாசி மேல்ரோடு, நங்கவள்ளி பேருந்து நிலையம், தோப்புத்தெரு, வீரக்கல், மேட்டூர் ஆர்.எஸ், காவலாண்டியூர் படிப்பகம், செட்டியூர் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பி, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது. நங்கவள்ளி பகுதி முழுவதும் பெரியார் பதாகைகள், கழகக் கொடிகள், சுவரொட்டிகள், கொடித் தோரணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேட்டூர் ஆர்.எஸ் பகுதி முழுவதும் சுவரெழுத்துகள், சுவரொட்டிகள், கழகக் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. 30 அடி உயரம் கொண்ட மின்னொளியில் பெரியாரின் புகைப்பட காட்சிகள் மற்றும் பெரியார் பொன்மொழிகள் கொண்ட உயர்மின்னொளி கோபுரம் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றி கொள்கை முழக்கங்கள் எழுப்பபட்டது.

மாலை 5.00 மணியளவில் கொளத்தூர் பேருந்து நிலையத்திலும், திருவள்ளுவர் நகர், கொளத்தூர் காவல் நிலையம் பின்புறம் வைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பப்பட்டது. தார்காடு பகுதியில் வாகனப் பேரணி இரவு 7.30 மணிக்கு நிறைவு பெற்றது. பெரியார் படம் அலங்காரம் செய்யப்பட்டு ஒலிபெருக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இரவு உணவு தார்காடு பகுதி தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.

பிரச்சார வாகனத்தில் (ஆட்டோ) தந்தை பெரியாரின் படம் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. நங்கவள்ளி தோழர்களால் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதிய உணவு மேட்டூர் நகர தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வனவாசி பகுதித் தோழர்கள் அனைவருக்கும் குளிர்பானம் வழங்கினார்கள். பிரச்சாரப் பேரணியில் காவை ஈசுவரன், ஆர்.எஸ் சக்திவேல், கோவிந்தராஜ், நங்கவள்ளி அன்பு, கொளத்தூர் ராமமூர்த்தி, நங்கவள்ளி கிருஷ்ணன், தார்காடு குமரேசன், கொளத்தூர் அறிவு, காவை விஜயகுமார், காவை இளவரசன் நங்கவள்ளி நித்யா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
நூற்றுக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் வாகனப் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சேலம் கிழக்கு: 17.09.2025 புதன் காலை 9.30 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டனர். தோழர்கள் அனைவரும் சமூகநிதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலை வகித்தார். இருசக்கர வாகனப் பேரணி சேலம் மாநகரம், கருப்பூர், சிந்தாமணியூர், தாரமங்கலம், இளம்பிள்ளை வழியாக முருங்கப்பட்டியில் மாலை 6.00 மணிக்கு நிறைவு பெற்றது.

சேலம் கிழக்கு மாவட்டம் முழுவதும் 22 இடங்களில் பெரியார் படம் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கழகக் கொடி ஏற்றி கொள்கை முழக்கங்களும் எழுப்பப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. சேலம் மாநகரம் பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, புத்தகங்களை சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் வழங்கினார். நிகழ்வை சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிமுருகன் ஏற்பாடு செய்திருந்தார்.

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த நவராஜ், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு கழக வெளியீடுகளை வழங்கி தோழர்கள் வரவேற்றனர்.

மதிய உணவு சிந்தாமணியூர் பகுதி தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.நன்றியுரை சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் கூறினார். 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நாமக்கல்: குமாரபாளையத்தில் தந்தை பெரியார் அவர்களின் 147-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இருசக்கர வாகனப் பேரணி காலை 11 மணிக்கு தொடங்கியது. காவேரி நகரில் துவங்கி பேருந்து நிலையம் வழியாக காவல் நிலையத்தில் வாழ்த்து அட்டை வழங்கி, நகர்மன்றத் தலைவர் விஜய் கண்ணன் அவர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கி, நகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.

அறிஞர் அண்ணா, காமராசர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, தாலுகா அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது. மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூணில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கலை அறிவியல் கல்லூரி அருகில் உள்ள பெருந்தலைவர் காமராசரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து தோழர்கள் முழக்கம் எழுப்பினார்கள்.

கழக தலைமைக் குழு உறுப்பினர் மு.கேப்டன் அண்ணாதுரை தலைமையில், மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்டச் செயலாளர் மு.சரவணன் முன்னிலையில் பேரணி நடைபெற்றது.

உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திக மாவட்டத் தலைவர் அக்குகுமார், நகரச் செயலாளர் சு.சரவணன், பாடச்சநல்லூர் செல்வகுமார், பள்ளிபாளையம் பிரகாஷ், ராசிபுரம் பிடல் சேகுவாரா, சந்திரா மணியம்மை, மாதுராச, சரசு செல்வராசு, கார்த்தி ஆட்டோ குமார், புகழேந்தி, பள்ளிபாளையம் வடிவேல், கண்ணகி, மோகன் பிரகாஷ் வளையல், பிரகாஷ், பெரியார் பிஞ்சுகள் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக கழகத் தோழர்கள் அனைவரும் கடவுள் மறுப்பு உறுதிமொழி கூறி, பகுத்தறிவு பாடல்களை பாடினார்கள். நகரச் செயலாளர் ஸ்ரீ வடிவேல், நகரத் தலைவர் மீ.த.தண்டபாணி, குருவை வேல்முருகன் பவானி, ஓவியர் பழனிச்சாமி, கருப்பநாயக்கன்பாளையம் ஆசிரியர் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்தனர்.
வேலூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக 17.9.2025 அன்று அறிவாசான் தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தத்தில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு சிவா(ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர்) தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தெருவிளக்கு கோபிநாத் (அறிவியல் மன்றத் தலைவர்) மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி: திராவிடர் இயக்கங்களில் ஒருங்கிணைப்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 17.09.25 அன்று படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. யாழ் வெள்ளியங்கிரி, தி.பரமசிவம், மாரிமுத்து(தி.க), சண்முகவேல் பிரபாகரன்(திஇதபே), மாரிமுத்து(மவிமு), சேதுபதி(தமிழர் தன்னூரிமைமீட்பு இயக்கம்), கோபால்(ஆதித்தமிழர் பேரவை), தமிழ்பிரபாகரன்(மே17), மற்றும் கழகத் தோழர்கள் ஆனந்த், அரிதாஸ், நந்து, ஆஜித் சிகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி: மாவட்டக் கழகத்தின் சார்பாக பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு 17.09.25 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மனோகரன் (மாவட்டச் செயலாளர்) தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தோழர்கள் குணராஜ் (திருவரம்பூர் ஒன்றிய பொறுப்பாளர்), புதியவன்(மாவட்ட அமைப்பாளர்), குமரேசன் (விராலிமலை ஒன்றிய பொறுப்பாளர்) கோகுல்ராஜ் (அல்லித்துறை பகுதிச் செயலாளர்), அசோக் (திருவரங்கம் நகரச் செயலாளர்), ஆறுமுகம், முருகானந்தம், திருப்பூர் தோழர்கள் சங்கீதா, தனபால், ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர் பிரியதர்ஷன் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஏற்காடு: திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் நிகழ்வு 17.09.25 அன்று காலை ஏற்காட்டில் நடைபெற்றது.கழகத் தோழர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்களை எழுப்பினார்கள்.அதனைக் கண்ட அப்பகுதியில் சென்ற சுற்றுலாப் பயணிகளும் தோழர்களுடன் இணைந்து பெரியார் பிறந்த நாளை கொண்டாடினர்.
பெரியார் முழக்கம் இதழ் 02102025

You may also like...