முடிகொண்டான் சாரங்கபாணி முடிவெய்தினார்.
பெரியாரின் பெரும் தொண்டரும், தமிழ்நாடு அரசின் ‘நல்லாசிரியர்’ விருது பெற்றவரும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததற்காக, தனது மகள், மகனுடனும், கழகத் தலைவர், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் ஆகியோருடன் தடா வழக்கில் சிறை சென்றவருமான முடி கொண்டான் சா.சாரங்கபாணி, தனது 93ஆவது வயதில் 03.01.2025 அன்று தனது இல்லத்தில் முடிவெய்தினார். அவருக்கு நமது புகழ் வணக்கங்கள்.
பெரியார் முழக்கம் 09012025 இதழ்
