சேலம் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள்!
கே.ஆர்.தோப்பூரில் கணேசன் இல்லத்தில் 18.11.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
தீர்மானம்-1: “மனிதம் நமது அடையாளம் – ஜாதி நமக்கு அவமானம்” தெருமுனைக் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 29,30 ஆகிய நாட்களில் புதிய பகுதிகளில் நடத்துவது.
தீர்மானம்-2: டிசம்பர் 14 அன்று “மனிதம் நமது அடையாளம்” “ஜாதி நமக்கு அவமானம்” நிறைவுக்கூட்டம் பொதுக்கூட்டமாக தாரமங்கலம் அண்ணா சிலை பகுதியில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்-3: புரட்சிப் பெரியார் முழக்க இதழை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் கொண்டு சேர்ப்பது குறித்தும், புதிய சந்தாக்களை அதிகப்படுத்தி வருகிற டிசம்பர் 24 அன்று மாவட்டக் கழகத்திடம் ஒப்படைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தீர்மானம்-4: டிசம்பர் 24 கோவையில் நடைபெறும் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கபட்டது.
தாரமங்கலம் ஒன்றியச் செயலாளர் சரவணன் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது. சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, பவளத்தானூர் தனசேகர், கே.ஆர்.தோப்பூர் கண்ணன், கே.ஆர்.தோப்பூர் கணேசன், சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், சேலம் நவராஜ், கொங்கனாபுரம் கோகுல், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கவியரசு, சேலம் வெங்கடேஷ், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர், சிவதாபுரம் அவினேஷ், நங்கவள்ளி நித்யா, இளம்பிள்ளை சேகர், சிந்தாமணியூர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கணேசன் தேநீர் வழங்கினார்.
பெரியார் முழக்கம் இதழ் 27112025
