க.கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு & நினைவேந்தல்
திராவிடர் விடுதலைக் கழக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் கருப்பூர் க.சக்திவேல் சகோதரரும், ஓய்வுபெற்ற ஆசிரியரும், சேலம் மாவட்ட திராவிடர் கழக காப்பாளருமான க.கிருஷ்ணமூர்த்தி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 11.11.2025 செவ்வாய்கிழமை கருப்பூர் சாமிநாயக்கன்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில், திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் பழநி.புள்ளையணன் தலைமையில் நடைபெற்றது.
சேலம் அம்மணி மருத்துவமனை நிர்வாக இயக்குனர், மருத்துவர் இரா. சரவணன் முன்னிலை வகித்தார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசும்போது, தோழர் க.கிருட்டிணமூர்த்தியும் அவரது குடும்பமும் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ததையும், அவர் பெரியாரிய இயக்கப் பணிகளை செய்த உணர்வுகளைப் பகிர்ந்து நினைவேந்தல் உரையாற்றினார்.
இறுதியாக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் கழகத் தோழர்கள், தி.க., தி.மு.க. தோழர்கள், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், அ.இ.தி.மு.க.வினர், பா.ம.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 27112025
