சேலம் இளைஞரணி முடிவுகள்!
சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் வெள்ளார் பகுதியில் 06.07.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்திற்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம், சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் மாவட்ட இளைஞர் அணியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து தோழர்கள் அனைவரும் தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கினார்கள்.
தீர்மானங்கள்:
1). ஜூலை மாத இறுதிக்குள் சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் மேச்சேரியில் கருத்தரங்கம் நடத்துவது எனவும்,
2). கிராமப்புற பகுதிகளில் மாதம் ஒரு தெருமுனைக் கூட்டம் நடத்துவது,
3). மாதம் ஒரு பகுதியில் கிளைக் கழக சந்திப்பு நடத்தி புதிய இளைஞர்களை திரட்டுவது.
4). புதிய இளைஞர்களுக்கு வருடம் ஒரு பயிலரங்கம் இளைஞர் அணி சார்பாக நடத்துவது,
5). பள்ளி, கல்லூரிகளில் துண்டறிக்கை பிரச்சாரங்கள் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நிறைவாக சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திவாகர் நன்றி கூற நிறைவு பெற்றது. சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திவாகர், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், ஆர்எஸ் பகுதிச் செயலாளர் விவேக், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கவியரசு, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் நாகராஜ், கொங்கணாபுரம் கோகுல், அவினேஷ், ஆனந்த், கபிலன், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர்கள் அனைவருக்கும் தோழர் சிவ சண்முகம் தேநீர் வழங்கினார்.
பெரியார் முழக்கம் 10072025இதழ்
