சேலத்தில் கழக சார்பில் தொடர் கூட்டங்கள்
சேலம் மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல்” தெருமுனைக் கூட்டம் 12.07.2025 அன்று அம்மாபேட்டை ரவுண்டானா அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் தலைமை வகித்தார். பரமேஷ் வரவேற்புரையாற்றினார். ஆத்தூர் நகரத் தலைவர் மகேந்திரன் அவர்களின் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகரத் தலைவர் பாலு, ஆத்தூர் நகரத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சேலம் மாநகரப் பொருளாளர் பிரபு, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிமுருகன் ஆகியோரின் அரசியல் நையாண்டி நிகழ்வும் நடைபெற்றது. நிறைவாக சேலம் மாநகரச் செயலாளர் தோழர் ஆனந்தி நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
கலந்துகொண்டோர்: அவினேஷ், சுதர்சன், தோழர் ராஜசேகர், பாலாஜி, சித்தார்த்தன், தமிழ் இனியன்ஆகியோர். கூட்டத்திற்கு அம்மாப்பேட்டை பகுதி வாழ் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. பெண்கள், மாணவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் கவனித்தனர்.
பெரியார்முழக்கம்இதழ்31072025
