இளங்கோவன்- வினிதா சுயமரியாதை திருமணம்!
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், குறுக்குப்பட்டி கிராமம், பவளத்தனூர் பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர். சரவணன்- சித்ரா ஆகியோரின் மகன் இளங்கோவன் அவர்களுக்கும் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், உடையார்குடி கிராமம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன்- ஆனந்தி ஆகியோரின் மகள் வினிதா அவர்களுக்கும் 04.11.2025 காலை 11 மணியளவில் மேட்டூர்ள பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் முன்னிலையில் இணையர்களுக்கு சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட இணையர்கள் கழகத் தலைவரிடம் பயணச் செலவிற்காக ரூ. 5000 வழங்கினர்.
பெரியார் முழக்கம் இதழ் 27112025
