சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்!

16.08.2025 மாலை 6.00 மணிக்கு நங்கவள்ளியில் கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) இல்லத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமை வகித்தார்.
கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை வகித்தார். கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய கலந்துரையடால் தொடங்கியது.
கூட்டத்தில் எடுக்கபட்ட தீர்மானங்கள்:
1). மேச்சேரியில் 03.08.2025 அன்று சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் நடைபெற்று முடிந்த “பெரியார் எனும் பெருநெருப்பு” கருத்தரங்கத்திற்கான வரவு, செலவு கணக்கு சார்பார்க்கப்பட்டது.
வரவு- 74,500, செலவு- 70,160, மீதி= 4,340
2). சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் எதிர்வரும் 22.08.2025 வெள்ளி அன்று ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனவும் இறுதியாக நிறைவுக் கூட்டம் ஓமலூரில் பொதுக் கூட்டமாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ), சிவ சண்முகம் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), கவியரசு (தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்), மேச்சேரி சிவசபரி, நங்கவள்ளி கி.பிரபாகரன், செ.அறிவழகன், நிலவன், புகழேந்தி, பரத்ராஜ், பூபதிராஜா, கவின், பேரறிவாளன், கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்
கி.பிரபாகரன் நங்கவள்ளி நன்றி உரையாற்றினார்.

பெரியார்முழக்கம்இதழ்28082025

You may also like...