மேச்சேரியில் பொதுக்கூட்டம்

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்! இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மேச்சேரியில் 20.04.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.

சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.தாமோதரன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்வு மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மகிழவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிறைவுரையாக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி அவர்கள் கருத்துரையாற்றினார்.

இறுதியாக சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன் நன்றி கூற பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.

கூட்டத்தில் சேலம் மாநகரம், சிந்தாமணியூர், இளம்பிள்ளை, நங்கவள்ளி, மேட்டூர், மேட்டூர் ஆர்எ, வனவாசி, காவலாண்டியூர், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 08052025இதழ்

You may also like...