காவல்துறையைக் கண்டித்துப் பொதுக்கூட்டம்
மேட்டூர் நகரக் கழக சார்பில் மேட்டூர் சரகக் காவல்துறையினரின் போக்கைக் கண்டித்துக் கண்டனப் பொதுக்கூட்டம் 04.09.2024 அன்று மேட்டூர் சதுரங்காடியில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு தலைமை வகித்தார். மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது.
இதில் சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இரா.திருமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மேட்டூர் சரகக் காவல் துறையின் அடாவடிப் போக்கினைக் கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் இருக்கும் காவல் நிலையங்களில் காவல்துறை அதிகாரிகளால் நடைபெறும் விதிமீறல்கள், லஞ்சம், போதை பொருள் விற்பனைக்கு ஆதரவு, எளிய மக்களிடம் மிரட்டி அடித்து பணம் பறித்தல் போன்ற விவரங்களைத் திரட்டி ஆதாரத்துடன் பொதுக்கூட்டத்தில் எடுத்துரைத்தார். மேலும் மேட்டூர் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் முதல் மேட்டூர் சரகச் சாதாரணக் காவலர் வரையில் உள்ளோர் சட்ட விரோதச் செயல்களை மீண்டும் தொடர்ந்தால் திராவிடர் விடுதலைக் கழகத்தினரை அணுகி தொலைபேசி எண்ணுக்கு அழைத்தோ, வாட்சப் எண்ணுக்கு எழுதியோ, குரல்பதிவு செய்தோ அல்லது நேரடியாகவோ தகவல் அளிக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக நன்றியுரை மேட்டூர் நகரச் செயலாளர் சு.குமரப்பா கூறக் கூட்டம் நிறைவு பெற்றது.
பெரியார் முழக்கம் 12.09.2024 இதழ்