மேச்சேரியில் “பெரியார் எனும் பெருநெருப்பு” கருத்தரங்கம்!

சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் 03.08.2025 ஞாயிறு மேச்சேரி VGP மஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிவ சண்முகம் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கதுரை, வெற்றிமுருகன், திவாகர் , மற்றும் ஏற்காடு தேவபிரகாஷ் (சேலம் மாவட்ட இளைஞர் அணித் தலைவர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிரபாகரன்( மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார்.

சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜின் பகுத்தறிவு பாடல்களைப் பாடினார்.

U2Brutus தோழர்கள் மைனர் மற்றும் சத்யாவின் அரசியல் அரட்டை நடைபெற்றது.

“மீண்டும் நடிகர்” எனும் தலைப்பில் பேரலை மில்டன், “மாடல்ல மற்றை யவை” எனும் தலைப்பில் U2Brutus மைனர், “நாக்பூர் ஏஜெண்டுகள்” எனும் தலைப்பில் இந்திரகுமார் தேரடி அவர்களும் கருத்துரை ஆற்றினார்கள்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

கவியரசு (தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்) நன்றி கூறினார். கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்திருந்தார். நிகழ்வில் கழகத் தோழர்கள், பொதுமக்கள், மாற்று அரசியல் கட்சியினர், இயக்கத் தோழர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

பெரியார்முழக்கம்இதழ்07082025

You may also like...