மகளிர் ஒன்று கூடல்!
திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட மகளிர் அணி கலந்துரையாடல் கூட்டம் 30.03.2025 ஞாயிறு காலை 11.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை ஏற்காடு JP ரெசிடென்சில் சிறப்பாக நடைபெற்றது.
கடவுள் மறுப்பு வாசகம் திருப்பூர் யாழினி கூற கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தோழர் சுதா தலைமை வகித்தார். சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தோழர் திவ்யா வரவேற்புரை நிகழ்த்தினார். கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் தோழர் சிவகாமி அவர்களும் தோழர்களிடையே கருத்துரையாற்றினார்கள்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு குடும்பங்களில் கடைபிடிக்கப்படும் மூடநம்பிக்கையால் பெண்ணடிமைத்தனம் எவ்வாறு வளர்கிறது, பெண்கல்வியால் தமிழ் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் தோழர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
இறுதியாக சேலம் மாநகரச் செயலாளர் தோழர் ஆனந்தி நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
1). கொளத்தூரில் பெண்களே தலைமையேற்று 2025 மே மாதத்தில் நாத்திகர் விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
2). வைக்கம் சென்று பெரியார் போராட்டம் நடத்திய இடங்களை பார்வையிடுவது எனவும்,
3). மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் புதிய பகுதிகளில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கொளத்தூர், காவலாண்டியூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, சேலம், ஏற்காடு பகுதிகளில் இருந்து 26 தோழர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கான அரங்கு, தேநீர் ஏற்பாடுகளை தோழர்கள் டேவிட் – நந்தினி வழங்கினர். மதிய உணவு சேலம் மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள் வழங்கினார். நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற சேலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஏற்காடு தேவா, செயலாளர் நங்கவள்ளி பிரபாகரன், கழக சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், SMT சுரேஸ் ஆகியோர் இணைந்து செயலாற்றினர்.
பெரியார் முழக்கம் 17042025இதழ்
