சேலத்தில் கழக தெருமுனைக் கூட்டம்
“இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல்” என்ற தலைப்பில் சேலம் மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டம் 05.07.2025 அன்று பொன்னம்மாப்பேட்டை தண்ணீர் தொட்டி அருகில் மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாநகரத் தலைவர் பாலு தலைமை வகித்தார். சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகர தலைவர் பாலு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சேலம் மாநகர பொருளாளர் பிரபு மற்றும் சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிமுருகன் ஆகியோரின் அரசியல் நையாண்டி நிகழ்வும் நடைபெற்றது. நிறைவாக நந்தகுமார் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவு மற்றும் தேநீர் தோழர் நந்தகுமார் அவர்கள் வழங்கினார். தோழர்கள் அருண்பாண்டியன், பாலு ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சங்கிகளின் மிரட்டல்
கூட்டம் தொடங்குவதற்கு அரைமணிநேரத்திற்கு முன்பாகவே 30க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தோழர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் சென்று எதற்காக இவ்வளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என கேட்டதற்கு பாஜக, RSS அமைப்பைச் சேர்ந்த சிலர் காவல் நிலையத்திற்கு சென்று இதுபோன்று பரப்புரை மேற்கொண்டால் அதை நாங்கள் தடுப்போம் என கலவர நோக்குடன் பேசி சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. சங்கிகளின் இந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் கூட்டத்தை திட்டமிட்டபடி தோழர்கள் சிறப்பாக நடத்தி முடித்தனர்.
பெரியார் முழக்கம் 17072025இதழ்
