நங்கவள்ளி நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
நங்கவள்ளி நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 22.07.2024 அன்று நங்கவள்ளியில் உள்ள அ.செ.சந்திரசேகரன் இல்லத்தில் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமையில் நடைபெற்றது.
சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் அ.அண்ணாதுரை, சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, மே.கா.கிட்டு, கொளத்தூர் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் இயக்க வளர்ச்சி குறித்தும், புதிய தோழர்களை இயக்கத்திற்கு சேர்ப்பது, சந்தா சேர்ப்பு மற்றும் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி நகரச் செயலாளர் பிரபாகரன், அ.செ.சந்திரசேகரன், அருள்குமார், ரமேஷ், ரவிக்குமார், பேரறிவாளன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் 25.07.2024 இதழ்