சேலம் மாவட்டக் கழகத் தோழர்களின் தொடர் முயற்சியால் தமிழில் பெயர்ப்பலகை!

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீராஜஸ்தானி உணவகத்தின் பெயர் பலகைகளில் தமிழ்நாட்டு அரசாணைப்படி தமிழில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் ஓமலூர் காவல் நிலையத்தில் கடந்த 01.08.2025 அன்று புகார் மனு கொடுக்கப்பட்டிருந்தது.

புகாரைப் பெற்றுக்கொண்டு (18.08.2025) வரை போதிய மாற்றங்கள் ஏதும் செய்யாத நிலையில், மீண்டும் 19.08.2025 அன்று இரண்டாவது புகார் மனு அளிக்கபட்டிருந்தது. அந்த புகார் மனுவில் செப்டம்பர் 05.09.2025 தேதிக்குள் அந்த பெயர் பலகையை நடவடிக்கை எடுத்து மாற்றாத பட்சத்தில் தமிழ்நாடு அரசின் ஆணையை நிறைவேற்றும் எண்ணத்தோடு நாங்களே அந்த பலகையை அழிக்க வேண்டி இருக்கும் என்பதை புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
அதனடிப்படையில் அந்த உணவகத்தின் பெயர் பலகைகளில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் புகார் மனு எதிரொலியால் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 18092025

You may also like...