கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்- கொளத்தூரில் கண் மருத்துவ முகாம்!
இலவச மருத்துவ முகாமை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். சேலம் வள்ளி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை சார்பாக 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டம் கொளத்தூர் ஸ்ரீ கொளத்தூர் கஃபே, S. K. C கார்னரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார்.
இம்முகாமை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிபுரியும் கழகத் தோழர். ஜலகண்டாபுரம் ரமேஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் கழக தலைமைக் குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், செட்டியூர் மாரி, கத்தரிப்பட்டி பழனியப்பன் ஆகிய கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 27112025
