சேலம் கிழக்கு, வடக்கு மாவட்டக் கழக கலந்துரையாடல்!

சேலம் கிழக்கு: இளம்பிள்ளையில் சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் கடையில் 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

சேலம் மேற்கு: மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் 08.11.2025 சனி மாலை 6.00 மணியளவில் மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

தீர்மானம் – 1: சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 2026ஆம் ஆண்டிற்கான புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு 500 சந்தாக்களை வருகிற டிசம்பர் 24 அன்று மாவட்ட கழகத்திடம் ஒப்படைப்பதென தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் – 2: நவம்பர் 26 சட்ட எரிப்பு நாளை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 10 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் – 3: டிசம்பர் 24 கோவையில் நடக்கும் தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக பெருவாரியாக தோழர்கள் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் – 4: மாமாங்கம் டால்மியா போர்டில் ஜவுளிப் பூங்கா என அறிவித்து 60 சாயப்பட்டறைகள் அமைக்கப்பட உள்ளன. இதனால் மாமாங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாய பாதிப்பு, குடிநீர் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே அதை தடுக்கும் வகையில் கழகத் தலைவர் அவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் – 5: கழகத் தோழர்களுக்கு ஏற்படும் சட்ட ரீதியான பிரச்சனைகளை அணுகுவதற்கு தேவையான உதவிகளை செய்ய அமைப்பு ரீதியாக உதவ ஒரு குழு அமைக்க தீர்மானிக்கப்பட்டது. நிறைவாக இளம்பிள்ளை நகரச் செயலாளர் மோகன்ராஜ் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.

இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு சேலம், இளம்பிள்ளை, ஏற்காடு, நங்கவள்ளி, மேட்டூர், சிந்தாமணியூர், கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தோழர்கள் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு இளம்பிள்ளை தோழர்கள் தமிழ்மணி அவர்களும் குட்டி (எ) சௌந்தர்ராஜன் அவர்களும் மதிய உணவாக மாட்டிறைச்சி பிரியாணி ஏற்பாடு செய்திருந்தார்.

கூட்டத்தில் மேட்டூர், கொளத்தூர், மேட்டூர் ஆர்.எஸ், நங்கவள்ளி, காவலாண்டியூர் ஆகிய பகுதிகளில் இருந்து பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவாக சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.
பெரியார் முழக்கம் இதழ் 20112025

You may also like...