கொளத்தூரில் கலந்துரையாடல்; மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

கொளத்தூர்: கொளத்தூர் நகரக் கலந்துரையாடல் கூட்டம் 27-07-2024 அன்று கொளத்தூர் சோதனைச் சாவடி அருகில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு, நங்கவள்ளி பொறுப்பாளர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இயக்க வளர்ச்சி மற்றும் புதியத் தோழர்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான செய்திகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கொளத்தூர் நகரக் கழகத்தின் எதிர்காலப் பணிகள் – புதியத் தோழர்களை அமைப்பாக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது..
மேலும் இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அது பின்வருமாறு:-
1. மாதம்தோறும் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது.
2. பெரியார் படிப்பகத்தை முறையாக பயன்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவது.
3. புதிய தோழர்களைச் சந்தித்து அவர்களுடன் கழகம் – பெரியாரியல் குறித்து எடுத்துக்கூறி அமைப்பாக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
கூட்டத்தின் முடிவில் பெரியார் இயக்கத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ள ஏதுவாக இட ஒதுக்கீடு உரிமைப் போராட்ட வரலாறு, இந்து மதமும் தமிழர்களும், வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள், திராவிடர் இயக்க வரலாற்றுச் சுருக்கம் (1912-1973), பெரியாரும் அம்பேத்கரும் இன்றைய பொருத்தப்பாடு, ஞான சூரியன், பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள் உள்ளிட்ட நூல்கள் கழகத் தோழர்களுக்கு வழங்கப்பட்டது.
நிறைவாக பிரபு பாலச்சந்தர் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
கூட்டத்தின் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசப்பட்டவை குறித்து சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, மே.கா.கிட்டு ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதில் கொளத்தூர் சி. இராமமூர்த்தி, கொளத்தூர் சஞ்சய் குமார், கொளத்தூர் கோபி கிருஷ்ணன் ராஜா, கொளத்தூர் கோபால கிருஷ்ணன், நங்கவள்ளி G.ராஜேந்திரன், கத்திரிப்பட்டி A. பழனியப்பன், கொளத்தூர் ப. குமார், கொளத்தூர் பா. அறிவுச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்

பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்

You may also like...