பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

சேலம்: 18/03/2025 வீரகனூர் பேருந்து நிலையம், பெரம்பலூர் வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது. பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது.

ஆத்தூர் நகர செயலாளர் கணபதி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைகணபதி, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், பெரம்பலூர் சுதாகர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், ஆத்தூர் நகர தலைவர் மகேந்திரன், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், ஆத்தூர் நகர செயலாளர் கணபதி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை தாமோதரன் ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரை நிகழ்த்தினர்.

இறுதியாக ஆத்தூர் நகர தலைவர் மகேந்திரன், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், பெரும்புலியூர் ராகு ஆகியோர் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இணையர்கள் தலைவாசல் வீரகனூர் முத்துக்குமார்-கவிதா ஆகியோர் தோழர்கள் மதிய உணவு மாட்டுக்கறியுடன் ஏற்பாடு செய்தனர். இணையர்களுக்கு கழகத்தின் சார்பாக புத்தகங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை தாமோதரன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்வு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கூட்டத்தை பள்ளி கல்லூரி மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வமுடன் கவனித்தனர். ஆத்தூர் நகர தலைவர் மகேந்திரன் மற்றும் நகர செயலாளர் கணபதி ஆகியோரின் அரசியல் நையாண்டி நிகழ்வும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

19/03/2025: பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம், அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே,
R.S. மாத்தூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்றது.

மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசை முழங்க கூட்டம் தொடங்கியது. சேலம் மாநகர செயலாளர் தோழர் ஆனந்தி அவர்கள் பகுத்தறிவுப் பாடல்களை பாடினார்.

கூட்டத்திற்கு அம்மாபாளையம் சுதாகர், பாரி சிவக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார்.

தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், கழக மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திமுக செந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.எழில்மாறன், சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை தாமோதிரன், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரை நிகழ்த்தினர்.

இறுதியாக சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன் நன்றிகூற கூட்டம் நிறைவு பெற்றது.

காலை உணவு அம்மாபாளையம் நவீன் உணவக உரிமையாளர் வீராசாமி அவர்கள் வழங்கினார். பாரி சிவக்குமார் தோழர்களுக்கு மதியம் அசைவ உணவு ஏற்பாடு செய்தார்.

4-வது கூட்டம் பொதுக்கூட்டமாக செந்துறையில் பேருந்து நிலையத்தில் மாலை 7.00 மணியளவில் நடைபெற்றது. கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பரப்புரையின் நோக்கம் குறித்து விளக்க உரையாற்றினார்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை தாமோதிரன் அவர்களின் மந்திரமா தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்வு பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் எழில்மாறன் அவர்கள் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தார். பொதுக்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தோழமை இயக்க தோழர்கள், திராவிடர் விடுதலைக் கழக மாநில மாவட்ட ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இரவு தங்கும் விடுதி மற்றும் உணவு ஏற்பாட்டினை பாரி சிவக்குமார் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

20/03/2025: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பெருந்து நிறுத்தம், ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு, அணைக்கரை, கும்பகோணம் பேருந்து நிலையம் ஆகிய பகுதியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பாரி சிவக்குமார் அவர்கள் தலைமை வகித்தார். தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் சோலை மாரியப்பன், முன்னிலை வகித்தனர்.

மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசையுடன் கூட்டம் தொடங்கியது. ஆத்தூர் நகர தலைவர் மகேந்திரன் அவர்கள் பகுத்தறிவு பாடல்களை பாடினார். கே.ஆர்.தோப்பூர் கண்ணன் அவர்களின் அரசியல் நையாண்டி நிகழ்வு நடைபெற்றது.

கூட்டத்தில் தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, விசிக மு.மா செயலாளர் தமிழருவி, மாநில துணை செயலாளர் பெரியவர் KPS, திருவிடை மருதூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் புலவர் சந்திரசேகரன், ஆடுதுறை நகர பொறுப்பாளர் தளபதி MPS குட்டி, குடந்தை நகர செயலாளர் கலையரசன், பாலு, ஆசிரியர் கூட்டமைப்பு விசிக இடவை இராக.ராமு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் க.செ.முல்லைவளவன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொறுப்பாளர் க.இராஜவேல், பகத்சிங், மதிமுக மாநில துணை பொது செயலாளர் ஆடுதுறை இரா.முருகன், மதிமுக ஒன்றிய செயலாளர் இரா.பழனி, நகர செயலாளர் பேரூர் மன்ற மு.துணை தலைவர் இரா.சரவணன், ஆடுதுறை பேரூர் ஆட்டோ இராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக நன்றியுரை கே.ஆர்.தோப்பூர் கண்ணன், சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

தோழர்களுக்கு காலை,மதியம் உணவு, தேநீர் பாரி சிவக்குமார் அவர்கள் வழங்கினார்.தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவு விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் அவர்கள் அவரது இல்லத்திலயே ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு புத்தகம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

21/03/2025: திருவிடை மருதூர், திருப்புவனம், ஆடுதுறை, குத்தாளம் ஆகிய பகுதிகளில் காலை 10.00 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், தலைமை குழு உறுப்பினர் சக்திவேல், தஞ்சாவூர் மாவட்ட துணை தலைவர் சோலை மாரியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். சேலம் மாநகர செயலாளர் தோழர் ஆனந்தி முன்னிலை வகித்தார்.

மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவின் பறை இசை முழக்கத்துடன் கூட்டம் தொடங்கியது. ஆத்தூர் நகர தலைவர் மகேந்திரன் அவர்கள் பகுத்தறிவு பாடல்கள் பாடினார்.

கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, ஆத்தூர் நகர தலைவர் மகேந்திரன், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட அமைப்பாளர் அன்பு, சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி, ப.த.ஆசைத்தம்பி இளைஞர் அணி அமைப்பாளர், RN வாசு குத்தாளம் மேற்கு ஒன்றிய செயலாளர், கருணாநிதி பேரூர் கழக செயலாளர், முஜிபூர் ரகுமான் மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர், ஆதிகேசவன் குத்தாளம் ஒன்றிய துணைச் செயலாளர் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்க நிகழ்த்தினார்கள்.

இறுதியாக கே.ஆர்.தோப்பூர் கண்ணன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தோழர் தங்கதுரை நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

22/03/2025: மயிலாடுதுறை செம்மனூர் கோவில் அருகில் 22.03.2025 அன்று காலை 10.00 மணிக்கு மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவின் பறை இசை முழக்கத்துடன் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்திற்கு தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் கவியரசு முன்னிலை வகித்தார். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி, சேலம் மாவட்ட அமைப்பாளர் அன்பு ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்க உரை நிகழ்த்தினர். இறுதியாக கே.ஆர்.தோப்பூர் கண்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
பெரியார் முழக்கம் 10042025இதழ்

You may also like...