தேனி, திண்டுக்கல், திருச்சியிலும் கழகம் ஆர்ப்பாட்டம்!

சேலம் : “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்.
சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிமுருகன் வரவேற்புரையாற்றினார். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஏற்காடு தேவபிரகாசு, சேலம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கொளத்தூர் சுதா, சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார்.
சேலம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
இதில் சேலம் (கி) மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம், சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், ஆத்தூர் மகேந்திரன், சேலம் தமிழரசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் இளம்பிள்ளை திவ்யா, சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெள்ளார் சிவசண்முகம், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திவாகர், தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் கவியரசு மற்றும் 100க்கும் மேற்பட்ட தோழர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை: “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் “தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்:- தமிழ்நாட்டில் கல்விக் கட்டமைப்பு என்பது மிகவும் வலுவான ஒன்றாக திகழ்கிறது. இதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையில் ஒன்றிய அரசு 2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் GER-ஐ 50% ஆக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆனால் தமிழ்நாடு 2021ஆம் ஆண்டிலேயே 51.4 சதவீதத்தை அடைந்துவிட்டது. ஏற்கனவே நாங்கள் அடைந்துவிட்ட ஒரு இலக்கை, 20235 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதத்தை எட்ட வேண்டும் என்று நிர்ணியித்த புதிய கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம். இவ்வாறு அவர் பேசினார்.
இது ஒட்டுமொத்த இந்தியாவின் GER அளவை விடக் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகம்.. சிறப்பாக தமிழ்நாடு மாணவர் கழகச் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு வரவேற்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கல்வியாளர் பிரின்சு கஜேந்திரபாபு, இந்திய மாணவர் சங்க தமிழ்நாடு மாநிலக் குழுத் தலைவர் சம்சீர் அகமது, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் சினேகா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாகச் சென்னை மாவட்டக் கழக இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாசு நன்றி கூறினார்.
இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, வட சென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், துணைச் செயலாளர் அ.வ.வேலு, தென் சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் மற்றும் ஏராளமான சட்டக்கல்லூரி மாணவர்கள் – இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
தேனி; தேனி மாவட்டக் கழக சார்பில் “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் “தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தேனி இராயன் தலைமை தாங்கினார். திராவிட மகிழன் வரவேற்புரையாற்றினார். பெரியார் சிவா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் விடுதலைக் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தேனி தமிழரசி, விசிக மது, ஆதித்தமிழர் பேரவை நீலக்கனல், தமிழ்ப் புலிகள் தமிழரசு, ஆதித்தமிழர் கட்சி தீப்பொறி அரசு, திராவிடத் தமிழர் கட்சி இராமசாமி, பெண்கள் விடுதலைக் கழகம் சோலையம்மாள் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாகச் சந்திரன் நன்றி கூறினார்.
இதில் சூரி, சென்ராயன், சேதுராமு, வேலுச்சாமி, சின்னழகு, வசந்தா, காமு ஆகியோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் ; “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மாக்சிம் கார்க்கி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை யாழ் புலேந்திரன், ஞானசேகர், தந்தை பெரியார் திராவிடர் கழக ரமணா, தடா மதி, சமூக ஆர்வலர் பெரியார் மணி, ஆதித்தமிழர் பேரவை மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தலித் சுப்பிரமணி, மாவட்டச் செயலாளர் சுந்தரம், சமூகநீதிப் பேரவைத் தலைவர் சிவகுமார், சமநீதிப்புலிகள் கட்சி நிறுவனர் வெள்ளை பாண்டியன், தமிழர் சமூகநீதிக் கழகத் தலைவர் சுறா தங்கபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டத் தலைவர் அந்தோணி, மாநகரச் செயலாளர் தோழர் அலெக்ஸ், மருதநாயகம் கான்சாகிப் மக்கள் பேரியக்கத்தின் தோழர் தமிம் அன்சாரி, பழனிபாபா மாணவர் பேரியக்கம் ஹக்கீம் சேட், தலித் கூட்டமைப்பு கணேசன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார்கள்.
நிறைவாகத் திண்டுக்கல் மாவட்டக் கழகத் தலைவர் மருதமூர்த்தி கண்டன உரையாற்றினார்.
மாவட்ட அமைப்பாளர் ராஜா நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவர் கபாலி, பழனி ஒன்றிய அமைப்பாளர் பெரியார், நத்தம் ஒன்றிய அமைப்பாளர் தங்கத்தமிழ்க் குமரன், நத்தம் சண்முகம், தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் ஆயுதன், மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர் சங்கர், ஒட்டன்சத்திரம் சுரேஷ், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி ; “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று திருச்சி இராமகிருஷ்ணா மேம்பால மரக்கடை அருகில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் டார்வின் தாசன் வரவேற்புரையாற்றினார். திருவெறும்பூர் ஒன்றியப் பொறுப்பாளர் குணா கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்குசம் இதழ் பொறுப்பாசிரியர் முனைவர் தி. நெடுஞ்செழியன், ம.க.இ.க.பொதுச் செயலாளர் பாடகர் கோவன், ம.தி.மு.க.மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் சாக்ரடீஸ், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் செழியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்குரைஞர் சந்துரு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் திருப்பூர் காட்டன் ஆறுமுகம், திருவரம்பூர் ஒன்றியப் பொறுப்பாளர் மணிகண்டன், ஷர்மிளா, திருவரங்க நகரச் செயலாளர் அசோக், மாவட்ட அமைப்பாளர் த.புதியவன், மக்கள் உரிமைக் கூட்டணி திருச்சி மண்டல செயலாளர் எஸ்.எம்.முகமது காசிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிறைவாகக் கழக மாவட்டச் செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.
(பிற மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட செய்திகள் அடுத்த இதழில் வெளிவரும்)

பெரியார் முழக்கம் 12.09.2024 இதழ்

You may also like...