பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!
விழுப்புரம்: 17/03/2025 (திங்கள்) கீழ்பெண்ணாத்தூர் கலைஞர் பேருந்து நிலையம், கடலாடிகுளம் பேருந்து நிலையம், செஞ்சி பேருந்து நிலையம், அப்பம்பட்டு மசூதி அருகில் நடைபெற்றது. காலை உணவு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தோழர் பொன்.சுப்ரமணி வழங்கினார். நம் பிரச்சார பயணத்தின் தலைப்பான பெரியார் ஏன் எதிரிகளை பதறவைக்கிறார் என்ற செய்தியை அவர்களின் சிந்தனைப் பலகையில் 17/3/2025 அன்றைய செய்தியாக எழுதி வரவேற்றனர், மேலும் ராமநாதன்,கோதண்டராமன், ஆதிமூலம், தமிழ் மக்கள் கட்சியை சார்ந்த முகிலன் அம்பேத்கர் மக்கள் கட்சி விழுப்புரம் மாவட்ட செயலாளர் சு.மழைமேனி பாண்டியன், பகுத்தறிவு கழகத்தை சார்ந்த துரை.திருநாவுக்கரசு, பேராசிரியர். ஜாக்குலின், வி.சி.க. விழுப்புரம் மாவட்ட செயலாளர் தனஞ்செழியன், திராவிடர் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கோபண்ணா, பேராசிரியர் நந்தகுமார், தமுமுக அலிஜான் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் செயலாளர் ராசநாயகம், க.ராமர், பூ.ஆ இளையரசன், தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வின் துண்டறிக்கையைப் படித்துப் பார்த்து திமுகவின் கீழ்பெண்ணாத்தூர் நகரச்செயலாளர் C.K.அன்பு ரூ.1000 நன்கொடையாக வழங்கினார். பெரியார் சாக்ரடீஸ் ஒருங்கிணைத்தார். விசிகவைச் சார்ந்த பழனி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், தோழர்கள் தேநீர் வாங்கிக் கொடுத்து ரூ.150 பணம் நன்கொடை வழங்கினார். இரவு மாத்துர் திருக்கையில் பேராசிரியர் ஜாக்குலின், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் அவர்களின் வீட்டில் இரவு உணவை வழங்கி, தங்குவதற்கு இடமும் அளித்தனர். 18/03/2025 செவ்வாய் காலை உணவும் அவர்களே தோழர்களுக்கு கொடுத்து பயணத்தை சிறப்பாக செய்யுங்கள் என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். விழுப்புரம் பயணக்குழு சார்பாக கழக வெளியீட்டு நூல்களை ஜாக்குலின் அவரது இணையர் செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கினார்.
18/03/25 (செவ்வாய்கிழமை) மூன்றாம் நாள் பிரச்சார பயணம்: கஞ்சனூர் மும்முனை சந்திப்பு, விழுப்புரம் தந்தைபெரியார் சிலை, முகையூர் பேருந்து நிலையம், திருக்கோயிலூர் பேருந்துநிலையம் பகுதிகளில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட தலைவர் பூ.ஆ இளையரசன, தலைமைக் குழு அய்யனார், விசிக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார், விழுப்புரம் மாவட்ட தலைவர் பூ.ஆ இளையரசன், தமிழ்நாடு மாணவர் கழக கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் கு.பாபா, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் க.மதியழகன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.ராமர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
மக்கள் அதிகாரம் விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஏழுமலை மற்றும் பொருளாளர் மகேஷ் கலைநிகழ்ச்சி நடத்தினர். விசிகவின் நகர செயலாளர் இரணியன் மற்றும் திருமால் ராஜ்குமார் கலையரசன், பிரதாப், குரு, கண்ணன், வழக்கறிஞர் லூசியா ஆகிய தோழர்கள் கலந்து கொண்ட கொண்டனர். ஆன்மிகப் பற்று மிகுந்த ஒருவர் ரூ.220-க்கு கழக வெளியீடுகளை வாங்கிச் சென்றார். விசிக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் ரூ.1500 நன்கொடை வழங்கினார். மதிய உணவை திமுகவின் விழுப்புரம் நகர செயலாளர் சக்கரை ஏற்பாடு செய்து வழங்கினார்.
19/03/2025 புதன்கிழமை பகண்டை- வாணாபுரம் கூட்டு சாலை, சங்கராபுரம் மும்முனை சந்திப்பு, மூரார் பாளையம் பேருந்து நிலையம், கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் அதிகார அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர் ராமலிங்கம், தபெதிக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் செ.பிரபு, திவிக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் க.மதியழகன், மாவட்ட செயலாளர் க.ராமர், விழுப்புரம் மாவட்ட தலைவர் பூ ஆ இளையரசன், தமிழ்நாடு மாணவர் கழக கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பாளர் கு.பாபா, தலைமைக் குழு அய்யனார் உரையாற்றினார்.
இந்நிகழ்வின் போது பள்ளி மாணவ மாணவிகள் துண்டறிக்கையை ஆர்வமாக வாங்கிச் சென்றனர். அப்பகுதியின் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர் M.A.சங்கர் மற்றும் பவித்ரன் ஆகியோர் இணைந்து தோழர்களுக்கு பழச்சாறு வாங்கிக் கொடுத்தனர். மாவட்ட தலைவர் க.மதியழகன், மாவட்ட செயலாளர் க.ராமர், விழுப்புரம் திவிக தலைவர் பூ.ஆ இளையரசன் ஆகியோர் உரையாற்றினார்.
20/03/2025 வியாழக்கிழமை சின்ன சேலம் காமராஜர் சிலை, நையினார்பாளையம் காமராஜர் சிலை அருகில், வேப்பூர் கூட்ரோடு, கருவேப்பிலங்குறிச்சி மும்முனை பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. ClTU வை சார்ந்த தோழர் நாகராஜ் காலை உணவை வழங்கினார். தொடக்கமாக பறை இசையுடன் சாமிதுரை, நாகராஜ் பாடலை பாடினார். மாவட்ட தலைவர் தோழர் க.மதியழகன், மாவட்ட செயலாளர் க.ராமர், ClTU வை சார்ந்த தோழர் நாகராஜ், கடலூர் மாவட்ட தலைவர் மதன்குமார் தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் உள்ளிட்டோர் உரையாற்றினார். இசுலாமியராக இருந்து 1971-ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட புலவர் அய்யா ஹசன் அவர்கள் பயணத்தின் நோக்கத்தினை விளக்கிப் பேசினார்.
1971-இல் சேலம் மூட நடம்பிக்கை ஒழிப்பு பேரணியில் கலந்துகொண்ட தகவல்களை பகிர்ந்து கொண்டு, இது போன்ற பயணங்களை நடத்துவது அவசியம் என்று பயணக்குழுவை வாழ்த்தினார். மதிய உணவை மாவட்ட தலைவர் மதியழகன் ஏற்பாடு செய்து வழங்கினார். தோழர் அய்யனார் நிறைவுரை ஆற்றிக்கொண்டிருந்தபோது, ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் 100 ரூபாய் நன்கொடை வழங்கி, சிறப்பான கருத்துக்களை எடுத்துரைத்தாகப் பாராட்டினார். ஆசிரியர் அறிவழகன் வீட்டில் இரவு தோழர்களை தங்க வைத்து, இரவு உணவு வழங்கினார்.
21/3/2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் விருத்தாசலம் பேருந்து நிலையம், சேத்தியாதோப்பு பகுதி, புவனகிரி அம்பேத்கர் சிலை அருகில், சிதம்பரம் மும்முனை சந்திப்பில் பிரச்சாரம் நடைபெற்றது. பறை இசையுடன் நிகழ்வு தொடங்கியது. நாத்திகன் எழுதிய பாடலை தோழர் ராமர் பாடினார். அதனைத் தொடர்ந்து சாமிதுரை பறை இசை நிகழ்த்தினார். கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மதன்குமார்,க.ராமர், கடலூர் மாவட்ட தோழர் போதிசத்வா பயணத்தின் நோக்கத்தினை விளக்கிப் பேசினார். கழக ஆதரவாளர்களான அசோக், சதிஷ், கிருபா ஆகியோர் இரவு உணவு வழங்கினார்கள். மேலும் தாய் ஊடகம் ஸ்ரீதரன் மற்றும் சுந்தர் ஆகியோர் தேநீர் ஏற்பாடு செய்து நிதியுதவி செய்தனர் தங்குவதற்கு மண்டபம் ஏற்பாடு செய்தனர். ஆதரவளித்த அனைத்து தோழர்களுக்கும் தோழர் அய்யனார் நினைவுப் பரிசாக கழக வெளியீட்டு நூல்களை வழங்கினார்.
22/03/2025 கொள்ளிடம், சீர்காழி பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. மு.நாகராஜ், இரா.கார்மேகம், விழுப்புரம் மாவட்ட தலைவர் பூ.ஆ.இளையரசன், தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.ராமர், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பாபா, மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை ஆகியோர் இப்பயணத்தில் ஏழு நாட்களும் கலந்துகொண்டனர். மேலும் மோகன்ராஜ், ஆசிரியர் பழனிவேல், போதிசத்வா, செ.பிரகாஷ், கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.மதன்குமார், மா.குமார், கல்லை ஆசைத்தம்பி, சங்கர் , வெற்றிவேல், மற்றும் சேலத்தை சார்ந்த ராம் பிரகாஷ், பின்னலுரை சார்ந்த கண்ணன் ஆகியோர் தோழர் அய்யனார் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். பிரச்சாரப் பயணத்தில் கழக வெளியீட்டு நூல்களை கு.பாபா மா.குமார் ஆகியோர் பொறுப்பேற்று விற்பனை செய்து ரூ.12,000-ஐ தலைமையிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் பயணக்குழுவிற்கு மலேசியாவை சார்ந்த அம்பேத்கர் பெரியார் மார்க்சிய சிந்தனையாளர்கள் குழுவின் சார்பில் நன்கொடையாக 14000 ரூபாய் வழங்கினர். இத்தொகை கடலூர் மாவட்ட கழக தோழர் போதிசத்வா அவர்கள் மூலமாக பெறப்பட்டது.
சேலம்: இரண்டாம் நாள் 17/03/2023 கருப்பூர் பொறியியல் கல்லூரி அருகில், சேலம் கோட்டை மைதானம், சேலம் தாதகாப்பட்டி கேட், ஆத்தூர் பேருந்து நிலையம் பகுதிகளில் நடைபெற்றது.
மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு கழக சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், ஆத்தூர் நகர செயலாளர் கணபதி ஆகியோர் தலைமை வகித்தார்.
சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி, சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், யாழினி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் காஜாமைதீன், புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
ஆத்தூர் மணிகண்டன், திமுக வெங்கடேஷ், மதிமுக கோபால் ராஜ் விசிக இளையராஜா, தமிழ்ப் புலிகள் மாவட்ட செயலாளர் விஜய் குமார், தமிழ்ப் புலிகள் கட்சி ஆத்தூர் ஒன்றிய செயலாளர் செல்வம், உடன் பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி, ஆத்தூர் நகர தலைவர் மகேந்திரன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிமுருகன் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
திமுக வர்த்தகர் பிரிவு கொண்டலாம்பட்டி கண்ணன் அவர்கள் தோழர்கள் அனைவருக்கும் மதியம் அசைவ உணவு ஏற்பாடு செய்திருந்தார். இரவு உணவு திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் வெங்கடேஷ் வழங்கினார்.
பெரியார் முழக்கம் 03042025இதழ்
