சேலம் மாவட்டக் கழகம் தொடர் பரப்புரை ஜாதிப் பெருமை பேசாதீர்!

ஜாதிப் பெருமை அல்ல அது அவமானம் ஜாதிப் பெருமை பேசாதீர் அது மீண்டும் நம்மை அடிமையாக்கிவிடும் என்றும் மக்களிடம் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாடு முழுதும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை செய்து வருகிறது.

உலகம் முழுதும் மனிதர்கள் பிறக்கிறார்கள் இந்த நாட்டில் மட்டும் தான் மனிதப் பிறவியோடு ஜாதி அடையாளமும் சேர்ந்து பிறக்கிறது. அந்த ஜாதியே சமூகத்தைப் பாகுப்படுத்துகிறது. ஜாதி அமைப்புக்குள் நாம் மூழ்கிக் கிடந்தால் பார்ப்பனியத்தின் அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறோம் என்று அதன் பொருள். கடந்த தலைமுறைகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதியைப் படிக்க விடவில்லை. ஜாதித் தொழிலை கட்டாயப்படுத்தினார்கள். இதிலிருந்து மீண்டு படித்து, ஜாதித் தொழிலில் இருந்து விடைபெற்ற பிறகு நாம் ஜாதிப் பெருமையை பேசிக் கொண்டிருக்கலாமா?

வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே மனம் விரும்பி திருமணம் செய்தால் அதை தடுக்கலாமா? கழகத் தோழர்கள் அடுக்கடுக்கான கேள்வியை மக்கள் மன்றத்தில் எழுப்பி வருகிறார்கள்.

சேலம் இளைஞர் அணியின் சார்பில் “மனிதம் நமது அடையாளம்” “ஜாதி நமக்கு அவமானம்” ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சமத்துவப் பரப்புரை தெருமுனைக் கூட்டங்கள் 3 நாட்கள் நடைபெற்றன.

முதல் நாள்: 23.08.2025 நங்கவள்ளி பேருந்து நிலையம், ஜலகண்டாபுரம் பேருந்து நிலையம், எடப்பாடி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. பிரபாகரன் (மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்), சிவ சண்முகம் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமை வகித்தார்.
சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), முன்னிலை வகித்தனர்.

கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரை யாற்றினார். கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்), உமாசங்கர் (வனவாசி நகரச் செயலாளர்) ஜாதி ஒழிப்பு பாடல்கள் பாடினார்கள்.

நங்கவள்ளி அன்பு (சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர்), நிர்மல் குமார் (கோவை மாநகரத் தலைவர்), கிருத்திகா (திமுக இளம் பேச்சாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். நங்கவள்ளி தமிழ்ச்செல்வி, கஸ்தூரி நன்றி தெரிவித்தார்.

அன்பு (சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர்), மேட்டூர் முத்துராஜ், பன்னீர்செல்லவம் (வனவாசி நகரச் பொருளாளர்), நிலவன், கி.பிரபாகரன், கஸ்தூரி, கவியரசு (தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்), கொங்கணாபுரம் கோகுல், மேட்டூர் மணி, நித்திஷ் வெள்ளரி வெள்ளி, புவனேஷ் ராஜவேலு ஆகியோர் கலந்து கொண்டனர். மதிய உணவு காவல்துறை அதிகாரி வெங்கடேஷ் அவர்கள் வழங்கினார்.

இரண்டாம் நாள்: 24.08.2025 தாரமங்கலம் பேருந்து நிலையம், சின்னப்பம்பட்டி பேருந்து நிலையம், இளம்பிள்ளை பேருந்து நிலையம் ஆகிய இடங்கிளில் நடைபெற்றது.

தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமை வகித்தார். தேவ பிரகாஷ் (சேலம் மாவட்ட இளைஞர் அணித் தலைவர்), முத்துமாணிக்கம் (சேலம் மாவட்ட அமைப்பாளர்) முன்னிலை வகித்தனர்.
உமாசங்கர் (வனவாசி நகரச் செயலாளர்), சங்ககிரி செந்தில் குமார் ஜாதி ஒழிப்புப் பாடல்கள் பாடினார்கள் தொடங்கியது.

நிர்மல் குமார் (கோவை மாநகரத் தலைவர்), வழக்கறிஞர் சரவண பரத் (திமுக), தேவ பிரகாஷ் (சேலம் மாவட்ட இளைஞர் அணித் தலைவர்), நங்கவள்ளி நித்யா, ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

சிவ சண்முகம் (மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), சங்ககிரி செந்தில், சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), இளம்பிள்ளை ரவி, சிந்தாமணியூர் முருகேசன், கவியரசு (தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்), நங்கவள்ளி நித்யா, கொங்கணாபுரம் கோகுல், பிரகதீஷ், இளம்பிள்ளை தமிழ்மணி, சிந்தாமணியூர் முருகேசன், மேச்சேரி சபரி, பேராண்டிக் கடை சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேட்டூர் முத்துராஜ், கொங்கணாபுரம் கோகுல் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். தோழர்களுக்கு மதிய உணவு இளம்பிள்ளை தமிழ்மணி, குட்டி- சத்தியா ஆகியோர் வழங்கினார்கள்.

மூன்றாம் நாள்: 25.08.2025: காடையாம்பட்டி அரசு மருத்துவ மனை, டேனிஷ்பேட்டையில் நடைபெற்றது. கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), ஏற்காடு பெருமாள் (சேலம் மாவட்ட அமைப்பாளர்) தலைமை வகித்தனர். தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) முன்னிலை வகித்தார்.

கே.ஆர்.தோப்பூர் கண்ணன், நங்கவள்ளி அன்பு (சேலம் மாவட்ட அமைப்பாளர் ), ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்), ஏற்காடு பெருமாள்(சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர்), தேவ பிரகாஷ் (சேலம் மாவட்ட இளைஞர் அணித் தலைவர்) ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். உமா சங்கர் (வனவாசி நகரச் செயலாளர்) நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் கவியரசு, கி.பிரபாகரன், மேட்டூர் முத்துராஜ், பேராண்டிக் கடை சேகர், ஜலகண்டாபுரம் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் கவியரசு, கி.பிரபாகரன், மேட்டூர் முத்துராஜ், ஜலகண்டாபுரம் ஜெயந்தி, இரண்யா, ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர்களுக்கு மதிய உணவு கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்), ஏற்காடு பெருமாள் (சேலம் மாவட்ட அமைப்பாளர்) ஆகியோர் வழங்கினார்கள். இரவு உணவு இரண்யா அவர்கள் வழங்கினார்.
பெரியார்முழக்கம்இதழ்04092025

You may also like...