தமிழ்நாடு முதல்வருடன் கழகத் தலைவர் சந்திப்பு!
தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 12.06.25 வியாழன் அன்று மேட்டூரில் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது “குடியரசு 100” எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்ட 3 புத்தகங்கள் அடங்கிய தொகுதியை கழகத் தலைவர் அவர்கள் முதல்வருக்கு வழங்கினார்.
மேலும் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் அவர்கள் புரட்சிப் பெரியார் முழக்கத்தில் வெளிவந்த தலையங்கங்களின் தொகுப்பாக கழகம் வெளியிட்ட “ஆரிய மாடலா? திராவிட மாடலா?” நூலை முதல்வருக்கு வழங்கினார்.
இச்சந்திப்பின் போது மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வகணபதி, மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈஸ்வரன், மேட்டூர் சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், சேலம் மாவட்ட அமைப்பாளர் அன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.
பெரியார் முழக்கம் 19062025இதழ்
