Category: சென்னை

குடியுரிமையை பறிக்கும் கூட்டுச்சதி எஸ்.அய்.ஆர்.!

குடியுரிமையை பறிக்கும் கூட்டுச்சதி எஸ்.அய்.ஆர்.!

விசிக சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு எஸ்.அய்.ஆர் (S.I.R) குடியுரிமை பறிக்கும் கூட்டுச்சதி விளக்கத் தெருமுனைக் கூட்டம் டிச-7, 2025 அன்று மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் ரூதர்புரம்.அ சுரேசு ( 125 வட்டச் செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) எஸ்.அய்.ஆர் குறித்தும் சனாதன எதிர்ப்பு களத்தில் தமிழ்நாடு எப்படி பயணிக்கிறது என்பது பற்றியும் கருத்துரையாற்றினார். யூதர் சு.கார்த்திக் (மண்டலச் செயலாளர்), வழக்கறிஞர் பி.சாரநாத் (மாவட்டச் செயலாளர்) மற்றும் பல்வேறு விசிக நிர்வாகிகள் உரையாற்றினார்கள். கழகத் தோழர்கள் குமார், பிரசாந்த் (முழக்கம் செய்தியாளர்) மற்றும் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 08012026

தோழர் லலிதா நினைவுநாளையொட்டி ஏழை – எளியோருக்கு உணவு!

தோழர் லலிதா நினைவுநாளையொட்டி ஏழை – எளியோருக்கு உணவு!

சென்னை கழகத் தோழர் புருஷோத்தமன் இணையர் லலிதாவின் நினைவு நாளையொட்டி, டிச-4, 2025, அவருடைய நந்தனம் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), கு. அன்பு தனசேகர் (தலைமைக்குழு உறுப்பினர்), இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, இராவணன் (மாவட்ட துணைச்செயலாளர் ), ப.அருண் ( மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), மயிலாப்பூர் பகுதித் தோழர்கள் மனோகர், சிவா, சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), சே. ராஜேஷ் (பகுதிச் செயலாளர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்), தோழர்கள் சைதை சிவா, தினகரன், இரண்யா, குறளரசி உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். புருஷோத்தமனின் மகனும் திரைப்பட இயக்குநருமான அருண் பிரபு, பேத்தி அனுகீர்த்தி அனைவரையும் வரவேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்...

பெரியார் நினைவுநாளில் கழகம் மரியாதை!

பெரியார் நினைவுநாளில் கழகம் மரியாதை!

கோவை: பெரியார் நினைவு நாளையொட்டி டிச.24 அன்று காந்திபுரம் பெரியார் சிலை முன்பு காலை 9.30மணிக்கு கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. ஏற்காடு: டிசம்பர்-24 அன்று கழகப் பொறுப்பாளர் ஏற்காடு பெருமாள் தலைமையில் தந்தை பெரியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. சேலம் கிழக்கு: 24.12.2025 காலை 10.00 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் உருவச்சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), முத்துமாணிக்கம் (கிழக்கு மாவட்ட அமைப்பாளர்), ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்), ரமேஷ்(இளம்பிள்ளை நகரத் தலைவர்), மோகன்ராஜ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்), தேவராஜ் (சேலம் மாநகர அமைப்பாளர்), வெற்றிமுருகன்(மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), பிரபு(சேலம் மாநகர பொருளாளர்) மற்றும் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம்...

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

களப்போராளிகளை நினைவுகூர்ந்து பொதுக்கூட்டம்!

களப்போராளிகளை நினைவுகூர்ந்து பொதுக்கூட்டம்!

பெரியாரின் 52வது நினைவுநாளில் (24/12/25), கழகப் பணியில் உயிர்நீத்த தோழர்கள் கண்ணன் – குமாரின் 20-ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம், சென்னை ராயப்பேட்டை வெங்கடாசலம் தெருவில், மாலை 6 மணியளவில் சு. பிரகாஷ் தலைமையில், தோழர்கள் ப. கணேசன், ரா. குட்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இரா. உமாபதி – வீரமணி – திராவிட மகிழன் குழுவினரின் பாடல்களும், சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சியும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. 60 பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தபசி குமரன் (கழக தலைமை நிலையச் செயலாளர்), கு. அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), ரூதர் கார்த்திக் (விசிக தென்சென்னை மண்டலச் செயலாளர்), கழகத் தோழர் அறிவுமதி ஆகியோர் கருத்துரையாற்றினர். கருத்துரையாற்றிய ரூதர் கார்த்திக் அவர்களுக்கு கழகத் தோழரும், கண்ணன் குமார் நண்பரும், அவர்களது விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்த வீரமுத்து, கழக வெளியீடுகளை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும்...

ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம், அரங்கு எண் 10-இல் இடம்பெறுகிறது. கழகத்தின் நூல்கள், வெளியீடுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம், அரங்கு எண் 10-இல் இடம்பெறுகிறது. கழகத்தின் நூல்கள், வெளியீடுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!   தமிழ்நாடு  அரசை  வலியுறுத்தி  கோவையில்  போராட்டம்

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோவையில் போராட்டம்

2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற ‘இது தமிழ்நாடு – இளம் தலைமுறையினரின் எச்சரிக்கை’ மாநாட்டில் ‘வைக்கம் போர் முடியவில்லை’ என்ற தலைப்பில் தீர்மானம் இயற்றப்பட்டு அதனடிப்படையில் தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலெடுத்துப் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையத்திலும் மனு அளிக்கப்பட்டது. 2025-இல் கழகத் தலைமைக் குழுவில் செப்-17 முதல் செப்-24 வரை “மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் நிறைவாக கோவையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களைக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கழகத்தின் சார்பில், கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கை கோரி மாநிலம் தழுவிய போராட்டம், டிசம்பர் 29-அன்று காலை 10.30 மணிக்கு...

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!

2006-இல் காசி விஸ்வநாதர் கோயில் நிலத்துக்கு சொந்தமான இடத்தில் மசூதி கட்டுவதாக வெடித்த சர்ச்சையில், இந்து முன்னணியைச் சேர்ந்த குமார பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டனர். உண்மையிலேயே அந்த இடம் கோயில் நிலம்தானா இல்லையா என்ற வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி கலவரங்களை உருவாக்கி, அதில் இந்துத்துவ குளிர் காய்ந்துகொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ். இப்போது திருப்பரங்குன்றம் வரை இது தொடர்கிறது. ஆனால் இதில் இழப்புகளைச் சந்திப்பது ஹெச்.ராஜாவை போன்ற பார்ப்பனர்கள் இல்லை, அப்பாவி சாமானிய இந்துக்களே. குமார பாண்டியன் குடும்பத்தினரும் அப்படிப்பட்ட சாமானிய இந்துக்களே. கொலை செய்யப்பட்டவர்களில் குமார பாண்டியன் சகோதரரின் மகளான ருத்ரா இந்த பார்ப்பன சூழ்ச்சியை புரிந்துகொண்டு, பெரியாரியத்தை நோக்கி தனது திசையை திருப்பிக்கொண்டு, இப்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவையுடன் பயணித்து வருகிறார். அவர், “ஜாதி நமக்கு அவமானம்; மனிதம் நமது அடையாளம்” என்ற...

சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

கழக ஆதரவாளரான தோழர் ரஞ்சித் அவர்களின் சிற்றுண்டி கடை (SNACKIFY), இராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிலையம் அருகில் டிசம்பர்-14, 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் ப. அருண் (இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் கடை திறப்பு விழா நடைபெற்றது. இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) சிற்றுண்டி கடையைத் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ஆர்.என்.துரை (திமுக தென்சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர்) கலந்து கொண்டார். திருவல்லிக்கேணி பகுதிக் கழகத் தோழர்கள் மற்றும் ரஞ்சித் குடும்பத்தினர், நண்பர்கள் உடனிருந்தனர். புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 மாவட்டச் செயலாளரிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் இதழ் 18122025

தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

வடசென்னை கழகத் தோழர் அருள்தாஸின் தாயார் அஞ்சலை (என்கிற) அன்னை மரி முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு டிச-11, 2025 மாலை 6 மணிக்கு கே.பி.பார்க் இல்லத்தில் நடைபெற்றது. அருள்தாஸ் புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு 10 சந்தாக்களை வழங்கினார். நிகழ்வில், இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர் ), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, மற்றும் ராஜன், தினகரன், விஜயன், அசோக் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 18122025

பத்ரி வீழ்த்தப்படவில்லை, விதையாக்கப்பட்டார்!

பத்ரி வீழ்த்தப்படவில்லை, விதையாக்கப்பட்டார்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி… திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில், 1992-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மசூதி வழியாக நடத்தி, கலவரத்தில் முடிக்க முயன்றனர் சிலர். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது வி.எம்.தெரு. அடுத்த ஆண்டில் வி.எம்.தெருவுக்குள்ளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த முயன்றார் ராமகோபாலன். அந்த முயற்சியை முறியடித்து, கலவர நோக்கத்தைத் தடுத்ததுடன், ஐஸ் அவுஸ் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு எதிர்ப்பாக பெரியார் கைத்தடி ஊர்வலத்தை நடத்தி, சமூகப் பதற்றத்தை தணித்தார் பத்ரி. அதேபோல, 2001-இல் அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலின்போது இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றன மேற்குலக நாடுகள். மேடை ஏறி...

அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!

அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!

கோவை: புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில், கோவை மாநகர கழகத்தின் மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பு தபெதிக அமைத்த அம்பேத்கர் படம் முன்பு காலை 9.30 மணிக்கு கோவை தோழர்கள் புகழ் வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் நிலவும் ஜாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை உறுதியாகப் போராடுவது என்று உறுதி ஏற்றனர். பன்னீர்செல்வம், வெங்கட், நிர்மல் குமார் உரையாற்றினர் தோழர்கள் கிருஷ்ணன், மாதவன், சதீஷ், நவீன், தரணி, சத்தியமூர்த்தி, மேட்டூர் பாலு, ஆதரவாளர்கள் சங்கனூர் கார்த்தி, பரத், இலக்கியா கலந்து கொண்டு புகழ்வணக்கம் செலுத்தினர். திருப்பூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவரது நினைவைப் போற்றும் விதமாக மாநகர அமைப்பாளர் இரா. சரசுவதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஜாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கழகப் பொருளாளர் சு.துரைசாமி, வீ.சிவகாமி (தலைவர்,...

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி… எண் 61, வெங்கடாசலம் தெரு, ராயப்பேட்டை என்ற முகவரி கொண்ட ஒற்றைக் குடித்தன வாடகை வீடு, ஒரு உடைந்த நாற்காலி, ஓலைப்பாய், மர பீரோ… பத்ரி நாராயணனுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் அதற்குமேல் இல்லை. ஆனால், அவருடைய கண்ணசைவுக்கே கட்டுப்படும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை 1990-இல் உருவாக்கி வைத்திருந்தார் அவர். 1980-களில் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, பத்தாண்டுகளிலேயே பலமான கோட்டையாக ராயப்பேட்டையை மாற்றிய செயல் வீரர். ராஜீவ் காந்தி படுகொலையில் கைதாகி, 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த எழுவரை, விடுவிக்கக்கோரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி, உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டது இன்றைய...

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா? ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா? ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை ஒட்டி வழக்கமான உச்சி பிள்ளையார் கோயில் பகுதிக்கு மாற்றாக, சிக்கந்தர் பாஷா தர்கா பகுதியில் தீபம் ஏற்ற வேண்டுமென்று, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட இந்த நீதிபதியின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, உறுதியான எதிர்வினையாற்றி, தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியது திமுக அரசு. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருள வேண்டும் என தீர்ப்பளிப்பது, சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களை உமிழ்வது என தொடர்ந்து மதவாத நஞ்சை விதைக்கும் இந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதித்துறையில் தொடர இடம் அளிக்கக் கூடாது என நாடு முழுக்க கண்டனங்கள் வலுத்துள்ளன. இவரை நீக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 107 பேர் கையெழுத்திட்டு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர். இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். நீதிபதி என்று மக்களவையிலேயே அழுத்தம் திருத்தமாகப் பதிவு...

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்!   தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்! தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய நாகரீக உலகிலும் பல்வேறு வடிவங்களில் ஜாதியம் தலைதூக்கி நிற்கிறது. ஜாதிக் கயிறுகள், ஜாதிய குருபூஜைகள், ஜாதிய திருமண தகவல் மையங்கள், சமூக வலைதளங்களில் ஜாதி அடையாளத்தை வெட்கமின்றி ஒட்டிக்கொள்ளுதல் என ஜாதியை வலிமைப்படுத்தும் புதுவிதமான முயற்சிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. ஜாதிச்சங்கங்கள் இந்த வேலைகளை இடைவிடாமல் செய்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய ஜாதி வெறிச்செயல்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கண்டிப்பதுடன், ஜாதிய நடவடிக்கைகளுக்கான எதிரான அரசின் உறுதியான சட்ட நடவடிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, திராவிடர் விடுதலைக் கழகம் இந்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. தமிழ்நாடெங்கும் போராட்டத்திற்கு கழகத் தோழர்கள் தயாராகி வருவதுடன், “மனிதம் நம் அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பிலே போராட்ட நோக்கத்தை விளக்கி, பரப்புரைப் பயணங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த...

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்! கொட்டும் மழையிலும் கொள்கைப் பரப்புரை!

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்! கொட்டும் மழையிலும் கொள்கைப் பரப்புரை!

சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் ‘மனிதம் நமது அடையாளம் -ஜாதி நமக்கு அவமானம்’ என்ற முழக்கங்களோடு ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சமத்துவப் பரப்புரை தெருமுனைக் கூட்டம் 29.11.2025 காலை 11.00 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. சமுத்திரமம், மூலப்பாதை, கொங்கணாபுரம் பேருந்து நிலையம், எட்டிக்குட்டைமேடு ஆகிய நான்கு இடங்களில் பரப்புரை நடைபெற்றது. கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), கவியரசு(தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்), கொங்கணாபுரம் கோகுல் ஆகியோர் தலைமை வகித்தனர். தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), முன்னிலை வகித்தனர். பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார். இளம்பிள்ளை நகரச் செயலாளர் மோகன்ராஜ், குமரசேன், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), கோகுல் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர். பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. எடிசன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்....

கழக ஏட்டுக்கு தோழர் இரண்யா மாதந்தோறும் ரூ.2000 நன்கொடை

கழக ஏட்டுக்கு தோழர் இரண்யா மாதந்தோறும் ரூ.2000 நன்கொடை

கழகத் தோழர் இரண்யா சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக மாதம் ரூ.2000 கொடுப்பதாக தெரிவித்தார். டிசம்பர் மாத வளர்ச்சி நிதியாக ரூ.2000 தந்துள்ளார். சென்னை மாவட்டக் கழக தோழர் அன்பரசு முதல் கட்ட முழக்க சந்தாவாக ரூ.1000 மாவட்டச் செயலாளர் உமாபதியிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். -ஆசிரியர் பெரியார் முழக்கம் இதழ் 04122025

நிமிர்வோம் வெளியீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு!

நிமிர்வோம் வெளியீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு!

தி.மு.க.- 75 அறிவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக, நவம்பர் 8 முதல் 16 வரை வள்ளுவர் கோட்டத்தில், சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி நடைபெற்றது. இதில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நிமிர்வோம் பதிப்பகமும் பங்கேற்க, ஊடவியலாளர் ர.பிரகாசு, தோழர் மகிழவன் முயற்சியில் அரங்கு ஒதுக்கப்பட்டது. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைப்பில், 9 நாட்கள் நிமிர்வோம் பதிப்பக அரங்கு செயல்பட்டது. கழக வெளியீடுகளுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் கழக வெளியீடுகளை தேடி வந்து வாங்கிச் சென்றனர். மொத்தம் ரூ.82,000-க்கு கழக நூல்கள் விற்பனையானது. இளைஞர் அணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு.கோபிநாத், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா, காவை அஜித், முழக்கம் செய்தியாளர் பிரசாந்த், சுகந்தன், வீரா, யாழினி, அசோக், ஓவியா ஆகிய தோழர்கள் அரங்க வடிவமைப்பு பணிகளை முனைப்புடன் செய்தனர். தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி,...

பத்ரி நாராயணன் – இயக்கமாய் ஒரு தனிமனிதன்!

பத்ரி நாராயணன் – இயக்கமாய் ஒரு தனிமனிதன்!

(முரசொலி பாசறைப் பக்கத்தில் ஊடகவியலாளர் பிரகாசு எழுதி வரும் பெரியார் மண் தொடரில், ராயப்பேட்டையை இலட்சியக் கோட்டையாக்கிய கழக செயல் வீரர் மறைந்த பத்ரி நாராயணனின் குறித்து எழுதப்பட்ட கட்டுரை இது) ஒரு தனிமனிதன் வீழ்த்தப்பட்டால் அவர்களின் உடல் இயக்கம் மட்டும்தான் நின்று போகுமே தவிர, அவர்களின் சித்தாந்தம் வீழ்ந்துவிடாது. சிந்தனையாளர்களுக்கு அவர்களின் இறப்பு என்பது ஒருகாலும் மறைவாகாது’ என்பதற்கு திராவிட இயக்கத்தில் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. அதில் தலைநகர் சென்னையின் ஓர் உதாரணம் `பத்ரி நாராயணன்’. 2004-ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருந்தது. `மதமாற்றத் தடைச்சட்டம்’, `ஆடு – கோழி பலியிட தடை’ என ஆர்.எஸ்.எஸ். அரசாகவே மாறியிருந்த அ.தி.மு.க.வைத் தோற்கடிக்க ஓரணியில் திரண்டிருந்தன தமிழ்நாட்டின் முற்போக்கு சக்திகள். சென்னையில் ஏப்ரல் 26-ஆம் தேதியில் இருந்து, தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது பெரியார் திராவிடர் கழகம். ஏப்ரல் 30-ஆம் நாள்...

தமிழீழ போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

தமிழீழ போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

ஆஸ்திரேலியா: தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டு மாவீரர் நாள் தமிழ் தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நவம்பர் 27 மாலை நடைபெற்றது இத்தாலி செயின்ட் ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினார் அவர் தனது உரையில்”போர் தான் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் போராட்ட களம் அரசியல் நிகழ்வுகளுக்காக காத்திருக்கிறது என்றும் விடுதலைப் புலிகளின் மகத்தான தியாகங்கள் குறித்தும் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர் அரசியல் நிகழ்வுகள் மற்றும் ஐநாவின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாட்டில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை வலியுறுத்தி ஸ்ரீதர் ராஜ் உரையாற்றினார். சதீஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் பாடல்களை பாடியதோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கொளத்தூரில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக 27.11.2025 வியாழக்கிழமை...

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

அரசிலமைப்புச் சட்டத்தில் 25, 26, 13, 19, 368, 372(1) ஆகிய பிரிவுகள் ஜாதியைப் பாதுகாக்கும் விதமாக உள்ளது என்றும், அவற்றை நீக்க வேண்டுமென்றும் 03.11.1957 அன்று தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக ஸ்பெசல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய பெரியார், கோரிக்கைக்கு செவிசாய்க்க அரசுக்கு 30 நாட்கள் கெடு விதித்தார். ஆனால் கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டிய அரசாங்கமோ, சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்று வரையறுத்து மசோதாவை இயற்றி நிறைவேற்றியது. 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டமியற்றி அச்சுறுத்திய பின்பும், முதல் நாளே தந்தை பெரியாரை திருச்சியில் வைத்து கைது செய்த பின்பும், 26.11.1957-இல் நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நான்காயிரம் பேர் சிறைபுகுந்து, சிறைக்குள்ளேயும் விடுதலை ஆன ஒரு மாதத்தில் 18 பேர் உயிர் நீத்த வீரஞ்செறிந்த ஜாதி ஒழிப்புப் போராட்டம் இந்தியக் கண்டம் கண்டிராதது....

57 நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை மாவட்டக் கழகம்!

57 நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை மாவட்டக் கழகம்!

மயிலாப்பூரில் கழகத் தலைமை அலுவலகத்தில் 18.11.2025 அன்று சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தலைமையில் சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தோழர் இரண்யா கடவுள் மறுப்பு உறுதிமொழியை வாசித்தார். கடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் இருந்து தற்போது வரை 57 நிகழ்ச்சிகளை சென்னை மாவட்டக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்றிருக்கிறது. கடந்த ஜூன் முதல் தற்போது வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளின் பட்டியலை தோழர் உமாபதி வாசித்தார். திமுக இளைஞர் அணி நடத்திய அறிவுத் திருவிழாவில் கழக வெளியீடுகள் ரூ. 81980 விற்பனையானது. அதை முழுபொறுப்பேற்று நடத்திய தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் மற்றும் அதற்கு மூலக் காரணமாக இருந்த தோழர் பிரகாசு இருவரையும் பாராட்டி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் சால்வை அணிவித்தார். முற்போக்கு புத்தகக் காட்சியில் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் இடம்பெற்று, நூல்கள் விற்க துணைநின்ற மாவட்டக் கழகத்தோழர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தோழர்கள் எட்வின்...

அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு- பெரியார் சொன்னார்; தி.மு.க. செய்தது!

அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு- பெரியார் சொன்னார்; தி.மு.க. செய்தது!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா நிறைவையொட்டி, அதன் இளைஞர் அணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நவம்பர் 8ஆம் தேதி ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற நூலை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார். இந்நூலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர் பிரகாசு ஆகியோர் கட்டுரை எழுதியுள்ளனர். நூல் வெளியீட்டைத் தொடர்ந்து ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ என்ற இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நவம்பர் 8-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை முற்போக்கு புத்தகக் காட்சியும் நடைபெறுகிறது. இதில் அரங்கு எண் 22-இல் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகமும் பங்கு பெற்றுள்ளது. கருத்தரங்கில் மொத்தம் 10 அமர்வுகள் நடைபெற்றன. அதில் கடைசி அமர்வு பெரியாரிய இயக்கத் தலைவர்களைக் கொண்டு நிறைவுற்றது முத்தாய்ப்பாக அமைந்தது. புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் நடைபெற்ற அந்த அமர்வில், ‘கருஞ்சட்டை கழகமும் கருப்பு...

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

பெரியார்: ஜாதி, தேசியம், சோசலிசம் (Periyar – Caste, Nation & Socialism) ஆங்கில நூல் குறித்த அறிமுகம் சிறப்பாக இருந்தது. பெரியாரியல்வாதி தோழர் எஸ்.வி.ராஜதுரை எழுதியுள்ள இந்நூல், வெளியீட்டில் இருந்து தொடர்ச்சியாக இந்நூல் குறித்த விவாதத்தை திராவிடர் விடுதலைக் கழகம் முன்னெடுப்பது இந்நூல் இன்னும் பலரைச் சென்றடைய உதவும். பெரியார் குறித்த அவதூறுகளை மறுத்து ஏற்கெனவே கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் நூல்கள் எழுதியுள்ள நிலையில் அதே பாணியிலான ஆங்கில நூல் வெளிவருவது வரவேற்கத்தக்கது. திராவிடர் விடுதலைக் கழகம் பயிலரங்கத்தில் தோழர் ஜீவா குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கழகத் தலைவர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானது. அதையொட்டி ஆரோக்கியமான விவாதத்தை தலைவர் தொடங்கவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இன்றைய தலைமுறை பல்வேறு வரலாற்று தகவல்களையும் தரவுகளையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். -அருண்கோமதி (தாம்பரம் பகுதி அமைப்பாளர்) பெரியார் முழக்கம் இதழ் 30102025

தோழர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சியுரை!  ஈரோட்டுப் பாதையில் நடைபோடுவோம்!

தோழர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சியுரை! ஈரோட்டுப் பாதையில் நடைபோடுவோம்!

ஈரோட்டுப் பாதை தான் நமக்கு வழி காட்டுகிறது; பெரியார் இயக்கம் தான் எனது தாய் வீடு என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். சென்னையில் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி தலைவர் மறைந்த தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு நிறைவு மலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று துணை முதலமைச்சர் நிகழ்த்திய உரையிலிருந்து சில பகுதிகள்… பெரியாரின் தொண்டர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. பெரியாரின் தொண்டர்களை, துறவிகளைவிட மேலானவர்கள் என்று பெருமையாக சொல்வார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் அய்யா ஆனைமுத்து அவர்கள். பெரியார் தொண்டர்களின் தன்னலம் இல்லாத உழைப்புதான், தமிழ்நாட்டை சுயமரியாதை மண்ணாக மாற்றி வைத்துள்ளது. எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் விட, மிகமிக முக்கியமான நிகழ்ச்சியாக நான் கருதுவது, இன்றைக்கு இந்த அரங்கில் நடந்துகொண்டு இருக்கின்ற அறிஞர் ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழா. இன்னும் சொல்லப்போனால், எனது தாய் வீட்டிற்கு நான் வருகை தந்துள்ளேன். பெரியார் தொண்டர்கள் நிறைந்து...

கழகத்தினர் எடுத்த பெரியார் பிறந்தநாள் விழாக்கள்

கழகத்தினர் எடுத்த பெரியார் பிறந்தநாள் விழாக்கள்

கள்ளக்குறிச்சி: மாவட்டக் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு நயனார்பாளையத்தில் தந்தை பெரியார் பள்ளியில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 10- மணியளவில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ப.அங்கமுத்து தலைமையில் மாலை அணிவித்து பெரியாரின் சிறப்புகள் குறித்து பேசப்பட்டன. இந்நிகழ்வில் க.அசன், க,மதியழகன், ஆ.நாகராசன், ந.வெற்றிவேல் ச.வீரப்பாண்டியன், ஜெயனுல்லாபுதீன், சேரன், மைக்கேல், அஜித்குமார், தண்டபாணி உள்ளிட்ட பல தோழர்களும் பள்ளி மாணவர்களும் கருப்பாயி, இலட்சுமி, வாசுகி, கோமதி, அஞ்சுகம், சாரதாமணி உள்ளிட பெண் தோழர்களும் கலந்து கொண்டனர். சங்கராபுரதில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 11 மணியளவில் ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாலை 5 மணி அளவில் கடுவனூரில் பெரியார் அம்பேத்கர் திடலில், பெரியார் பிறந்தநாள் மற்றும் தோழர்கள் பெ. கோவிந்தன் கா.கோவிந்தராஜ் சு.தினகரன் செ.விஜய் ஆகிய தோழர்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. க. இராமர் மாவட்டச் செயலாளர் தலைமை...

“பெரியாரிஸ்ட்” தமிழ்செல்வி இல்லத்தில் படத்திறப்பு

“பெரியாரிஸ்ட்” தமிழ்செல்வி இல்லத்தில் படத்திறப்பு

17/9/25 – சென்னை அன்று கொளத்தூர் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் பகுதியில் வசிக்கும் தோழர் தமிழ்ச்செல்வி இல்லத்தில் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் இல்லத்தில் பதிக்கப்பட்டு இருக்கும் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து திறந்து வைத்தார் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன். கட்டுமான தொழிலதிபரான தோழர் தமிழ்செல்வி, தலித் மற்றும் இஸ்லாமியர்கள், அசைவ உணவு சாப்பிடுவோர்க்கு வீடு வழங்குவதில் முன்னுரிமையும் விலைச் சலுகைகளையும் தந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. U2 BRUTUS ஞான சத்யா, தமிழ்ச் செல்வி ஆகியோர் உரையாற்றினர். சமூகநீதி நாள் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. திவிக சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.2000 வழங்கினார். பெரியார் முழக்கம் இதழ் 25092025

சென்னையில் வெற்றிநடை போட்ட ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

சென்னையில் வெற்றிநடை போட்ட ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம் என்ற தலைப்பில் கழக இளைஞரணி ஜாதி எதிர்ப்புப் பரப்புரைகளை செய்து வருகிறது. சென்னை, சேலம் மாவட்ட இளைஞரணி தோழர்கள் ஆர்வமுடன் இந்த பரப்புரைகளை நடத்தி வருகிறார்கள். சென்னையில் கடந்த 10 நாட்கள் தொடர் பரப்புரை தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. மிக நேர்த்தியாக சென்னை மாவட்டக் கழக இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ப.அருண் மற்றும் எட்வின் பிரபாகரன் இருவரும் இணைந்து பேச்சாளர்கள் மற்றும் இடங்களை தேர்வு செய்தனர். குறிப்பாக தோழமை இயக்கத் தோழர்கள், ஊடவியலாளர்கள் என பலர் சிறப்புரையாற்றினார்கள். கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள் சிலர் இந்த கூட்டங்களை தலைமையேற்று நடத்தினார்கள். இளைய தலைமுறையினரிடம் வெகுவாக இந்த கூட்டம் கவனிக்கப்பட்டது. அனைத்து தெருமுனைக் கூட்டங்களும் சென்னை மாவட்டக் கழக முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அருவி வலையொலியில் வீடியோ வெளிவந்துள்ளது. 10 நாட்களும் பாடல்கள் வழியாக, அரசியல் நையாண்டி வழியாக, பறை இசை வழியாக பொதுமக்களை கவரும்...

செப்-17-ல் சென்னையில் எழுச்சியுடன் நடந்த பொதுக்கூட்டம் ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி திரளும் இளைஞர்கள்

செப்-17-ல் சென்னையில் எழுச்சியுடன் நடந்த பொதுக்கூட்டம் ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி திரளும் இளைஞர்கள்

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம், செப்-17 அன்று, மாலை 5 மணிக்கு, திவிக திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத் தலைமையில், சென்னை இராயப்பேட்டை வி.எம் தெருவில் நடைபெற்றது. கழக இளைஞரணி மற்றும் திருவல்லிக்கேணி பகுதி கழகத் தோழர்கள் இணைந்து பொதுக்கூட்ட வேலைகளை சிறப்பாக செய்திருந்தனர். பகுத்தறிவுப் பாடல்களை, “புதுவை விடுதலைக் குரல்” தோழர்கள் எழுச்சியுடன் பாடினார்கள். ராப் பாடலை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு பாடினார். திவிக மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி – பொன்ராஜ் ஆகியோரின் சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சி, மக்களின் கவனத்தைப் பெற்றது. உச்சபட்ச ஆதிக்கத்தை செலுத்தும் பார்ப்பனர்களை எதிர்க்காமல் இருப்பதற்காக, பிற்படுத்தப்பட்டவர்களையும் பட்டியலினத்தவரையும் தங்களுக்குள் மோதிக்கொள்ளச் செய்யும் சூழ்ச்சியை அம்பலப்படுத்தும் விதமாக, புராண இதிகாசங்களை மேற்கோள் காட்டி, பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புதுவை தீனா உரையாற்றினார். ஜாதி...

பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது

பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது

People’s literature பதிப்பகம் வெளியிட்டுள்ள “Periyar: Caste, Nation and Socialism” நூலின் அறிமுக விழா, (24.8.25), சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று நடத்தினார். பெரியார் மீது எழும் கேள்விகள் அல்லது குற்றச்சாட்டுகள், அல்லது மனதறிந்து பேசுகிற பொய்கள் எல்லாவற்றையும் விளக்கும் நோக்கத்தோடு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கரின் பார்வைகள், புத்தம் குறித்த பெரியார், அம்பேத்கர் கருத்துக்கள் ஆகியவற்றை முதன்மை தலைப்பாக பதிவு செய்துள்ளார். ரங்கூன் மாநாட்டில் பெரியார், அம்பேத்கர் கலந்து கொண்ட செய்திகளையும், வன்முறைக்கு எதிராக பெரியார் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வை தொகுத்து வழங்கினார். கோவி. கனக விநாயகம் (துணைப் போராசிரியர், எஸ்.ஆர்.எம் சட்டக் கல்லூரி , சென்னை) பேசுகையில், எளிய மொழிநடையில், கேள்வி பதிலாக தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல். 21ம் நூற்றாண்டில் திராவிடர் இயக்கத்துக்கு கிடைத்த ஆவணம் இந்த நூல் என்று வாழ்த்துரை வழங்கினார்....

களம் இறங்கிறது சென்னை இளைஞரணி!

களம் இறங்கிறது சென்னை இளைஞரணி!

சென்னை மாவட்ட இளைஞர் அணி சார்பாக “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள் என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, செப்டம்பர்-17 தேதி வரை தொடர் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், சைதாப்பேட்டை, தியாகராயர் நகர், எம்.ஜி.ஆர் நகர், அம்பத்தூர், அமைந்தகரை, வேளச்சேரி, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. 10 நாட்கள் தினமும் மாலை 5 மணியளவில் தெருமுனைக் கூடட்ங்கள் நடைபெறும். தெருமுனைக் கூட்டங்களில் கழகத் தோழர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் பலர் கருத்துரை ஆற்ற உள்ளனர். செப்-17 நிறைவு பொதுக் கூட்டம் இராயப்பேட்டை பெரியார் படிப்பகம் அருகில் நடைபெறும். இளைஞர்களே ஜாதியை தகர்த்தெறிவோம்! சமத்துவ சமுதாயம் படைப்போம் வாரீர்!

கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா

கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா

சென்னை: கழகம் 14-ம் ஆண்டு துவக்க விழா சென்னை மாவட்டக் கழகம் சார்பில் இராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவு படிப்பகத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கொடியோற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கழகத் தோழர்கள் தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்),வேழவேந்தன்(மாவட்டத் தலைவர்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), ம.கி எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ப.அருண்( இளைஞரணி அமைப்பாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (வடசென்னை மாவட்ட அமைப்பாளர்), கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), த.நா சூர்யா (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் தோழி, குறளரசி மற்றும் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 12.08.2025 மாலை 5.00 மணியளவில் கோனூர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து...

மடியட்டும் ஆணவப் படுகொலைகள் கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

மடியட்டும் ஆணவப் படுகொலைகள் கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

“மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!” என்ற தலைப்பில் கழகத் தோழர்கள் ஜாதி எதிர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் செய்தி விவரம்: சென்னை: ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தெருமுனைக் கூட்டம் 12.08.2025 அன்று திருவல்லிக்கேணி நடேசன் சாலையில் நடைபெற்றது. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), தலைமையில், லட்சுமணன் முன்னிலையில் நடைபெற்றது. சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்வு பொதுமக்களை தோழர்களை வெகுவாக ஈர்த்தது. ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நெல்லை கவின் படத்திறப்பு நடைபெற்றது. வழக்கறிஞர் சாரநாத் (மாவட்டச் செயலாளர் -விசிக) ஜாதி எதிர்ப்புப் பரப்புரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கழக செயல்பாடுகளை பாராட்டி உரை நிகழ்த்தினார். நிறைவாக சிறப்புரையாற்றிய பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையின் தேவை குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இரண்டாம் நாள்: 13.08.2025 அன்று சென்னை சி.என்.கே சாலை...

வேலுபிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

வேலுபிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் 27.07.25 அன்று இயக்குனர் வேலு பிரபாகரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இனமுரசு சத்யராஜ் சிறப்புரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தபெதிக பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், ப்ளூ சட்டை மாறன், இயக்குனர் கதிர், திக பொருளாளர் வீ.குமரேசன், பாடகர் அந்தோணி தாசன், இயக்குனர் அகரன் உள்ளிட்ட பலரும் இயக்குனர் வேலு பிரபாகரனுடனான தங்கள் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். இரா. உமாபதி (திவிக சென்னை மாவட்டச் செயலாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) , ம.கி.எட்வின் பிரபாகரன் (தென்சென்னை மாவட்ட அமைப்பாளர்), கோபி (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் ஒருங்கிணைத்தார். பெரியார்முழக்கம்இதழ்07082025

20 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு கிடைத்த இழப்பீட்டுத் தொகை

20 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு கிடைத்த இழப்பீட்டுத் தொகை

கழக செயல் வீரர்கள் கண்ணன் மற்றும் குமார் இருவரையும் விபத்தில் கழகம் பறிகொடுத்தது. பெரியார் நினைவு நாள் சுவரொட்டிகளை ஒட்ட சென்றபோது களப்பணியில் அந்த தோழர்கள் உயிரிழத்தார்கள். உயிர் நீத்த டிசம்பர் 2005 ஆண்டு 24ம் நாள் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சுவரொட்டி அடித்து அவரது நினைவைப் போற்றி வருகிறது. இவர்களுக்கான காப்பீட்டுத் தொகைக்கான வழக்கு 20 ஆண்டு காலத்திற்கு மேல் நடந்தது. இப்போது அந்த தீர்ப்பு தோழர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பெரியார் நினைவு நாள் சுவரொட்டி சென்றபோது அதிவேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று மோதி தோழர்களின் உயிரைப் பறித்தது. இதற்காக காப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை வழக்கறிஞர் குமாரதேவன் நடத்தினார். நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக வழக்கு நிலுவையிலே இருந்தது. பிறகு முதலமைச்சர் தனிப்...

இனப்படுகொலையின் பேரவலம் கருத்தரங்கம்

இனப்படுகொலையின் பேரவலம் கருத்தரங்கம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை சர்பிடி தியாகராயர் அரங்கில் ஈழ மண்ணில் செம்மணி மனிதப் புதைக்குழி இனப்படுகொலையின் பேரவலம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. செம்மணி மனிதப் புதைகுழி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் தியாகு (பொதுச்செயலாளர் தமிழ் தேசிய விடுதலை இயக்கம்), கோவை இராமகிருட்டிணன் ( பொதுச் செயலாளர் தபெதிக), சி. மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) வேல்முருகன் (சட்டமன்ற உறுப்பினர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்) ஆகியோர் உரையாற்றினார். பெரியார்முழக்கம்இதழ்31072025

“கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி”  நூல் வெளியீடு!

“கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி” நூல் வெளியீடு!

தாய் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் டேவிட் பெரியார் தலைமையில் “கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி” நூல் சென்னை வடபழனியில் 26.07.25 அன்று வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகள் நடத்திய தரைவழித் தாக்குதல் பற்றி விவரிக்கிறது இந்நூல். லோகு அய்யப்பன் (புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்), மல்லை சத்யா, இயக்குனர் அமீர், தமிழ் சாக்ரடீஸ், ஊடகவியலாளர் இந்திரகுமார், வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, இளைய கம்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இரவி பாரதி (காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்) தொகுத்து வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். தோழர் தியாகு சிறப்புப் பிரதியினை பெற்றுக் கொண்டார். தோழமை அமைப்புத் தோழர்கள் மனிதி செல்வி உட்பட பலர் கலந்து கொண்டு நூலை வாங்கி சென்றனர். இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் தபசிகுமரன் (தலைமை நிலையச் செயலாளர்), வேழவேந்தன் (மாவட்டத் தலைவர்), இ.ரா.உமாபதி (மாவட்டச் செயலாளர்), எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), இராவணன் (தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்),...

வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 29வது கூட்டம் அன்பு தனசேகர் (கழக தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் கழகத் தலைமை அலுவலகம் மயிலாப்பூரில் நடைபெற்றது. நிகழ்வை மாவட்டச் செயலாளர் இ.ரா.உமாபதி ஒருங்கிணைத்தார். மறைந்த பகுத்தறிவு இயக்குனர் வேலு பிரபாகரன் படத்தைத் திறந்து வைத்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். நினைவேந்தல் உரையாற்றிய திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கொள்கையில் சமரசமற்ற கடவுள் மறுப்பாளரின் பணிகளையும், வேலு பிரபாகரன் உடன் பயணித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். வேலுபிரபாகரன் இயக்கிய `கடவுள்’ படம் திரையிடப்பட்டது. நிகழ்வில் சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்), வேழவேந்தன்(மாவட்டத் தலைவர்), ம.கி.எட்வின் பிரபாகரன்(தென்சென்னை மாவட்ட அமைப்பாளர்), ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்), சேத்துபட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (வட சென்னை அமைப்பாளர்), ஆ.வ வேலு (வட சென்னை ஒருங்கிணைப்பாளர்), கோபி(திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), சூர்யா(திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) மற்றும் ஊடக நண்பர்கள்...

“மனிதம் நமது அடையாளம்!  ஜாதி அவமானம்!”

“மனிதம் நமது அடையாளம்! ஜாதி அவமானம்!”

சமூகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஜாதியப் படுகொலைகளை (ஆணவ கொலைகள்) தடுக்க சட்டம் மட்டும் போதாது மக்களின் மன உணர்வுகளில் இருந்து அதை நீக்க வேண்டும். நாகரீக சமூகமாக இந்த தமிழ் சமுதாயத்தை மாற்றி அமைக்கப் போராடியவர் பெரியார். அவர் தொடங்கிய இயக்கம் தொடர்ந்து ஜாதி எதிர்ப்பு, சடங்கு மறுப்பு கருத்தியலை வலிமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது. அதன் விளைவாக இன்று பல்வேறு மாற்றங்கள் வந்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் யாரும் பெயருக்குப் பின்னால் ஜாதி போடும் வழக்கத்தைப் பின்பற்றுவது இல்லை. ஆகவே அதன் தொடர்ச்சியாக திராவிடர் விடுதலைக் கழகம் பல்வேறு தலைப்புகளில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களை கள ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து SC/ST ஆணையத்திடம் மனு அளித்தது. தற்போது இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்து உள்ளது. ஜாதிவெறி சிந்தனைகளில் இருந்து இளைஞர்களை மீட்க சென்னை மாவட்டக் கழகம் “மனிதம் நமது அடையாளம்! ஜாதி...

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பாக 15-07-2025 மாலை 4 மணி அளவில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் மாநகரச் செயலாளர் மாதவன் முன்னிலையில் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கல்விக் கண் திறந்த காமராசர் அவர்களின் 123 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கல்வி உரிமைப் பாதுகாப்புப் பரப்புரைப் பயணம் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலும், அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகிலும் காமராஜர் செய்த அரும்பணிகள் குறித்து மக்களிடத்தில் எடுத்துரைக்கும் விதமாக தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்வில் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத்தலைவர் முகில் ராசு, ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் விடுதலை செல்வன்,மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, சரஸ்வதி,தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன்,மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, மற்றும் கழகத் தோழர்கள் ராஜசிங்கம்,ஸ் ரீஜா, ஆத்துப்பாளையம் மதன், முத்து...

வடசென்னையில் கழக கலந்துரையாடல் கூட்டம்

வடசென்னையில் கழக கலந்துரையாடல் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வடசென்னை கலந்துரையாடல் கூட்டம் 13.07.25 ஞாயிறு அன்று மாலை 06.30 மணியளவில் சென்னை அயனாவரத்தில் உள்ள சேத்துப்பட்டு இராஜேந்திரன் இல்லத்தில் அருள்தாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் புதிய தோழர்களை சேர்ப்பது வட சென்னையில் கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் தெருமுனை, பரப்புரை கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு வடசென்னை மாவட்டம் சார்பில் 100 உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, தோழர்கள் ராஜன், தினகரன், சிகாமணி, கழகப் பணிகளை முன்னெடுப்பதை குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத்‌ தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் அருண், தமிழ்நாடு...

கழகத் தோழர் கன்னியப்பன் முடிவெய்தினார்!

கழகத் தோழர் கன்னியப்பன் முடிவெய்தினார்!

சென்னை மாவட்டக் கழகத் தோழர் கன்னியப்பன் உடல்நலக் குறைவால் கடந்த 12.07.2025 அன்று முடிவெய்தினார். அவரின் உடலுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், இளைஞரணி அமைப்பாளர் அருண், தட்சிணாமூர்த்தி, ஏசுகுமார், மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 17072025இதழ்

நிமிர்வோம் வாசகர் வட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 28வது கூட்டம் தோழர் சிரிஜன் தலைமையில் கழகத் தலைமை அலுவலகம் மயிலாப்பூரில் நடைபெற்றது. நிகழ்வை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைத்தார். மறைந்த கழகத் தோழர் கன்னியப்பன் அவர்களின் படத்திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. அரசியலாக்கப்படுகிறதா நீதித்துறை? என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். ‘அம்பேத்கரின் முகவுரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ரகசிய வரலாறு’ என்ற நூலை எட்வின் பிரபாகரன் திறனாய்வு செய்தார். பேராசிரியர் சுப்பிரமணியின் ‘இதழியல் களத்தில் பெரியார்- ஆய்வும் தொகுப்பும்’ நூலை ர.பிரகாசு திறனாய்வு செய்தார். நிகழ்வில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 17072025இதழ்

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார அமைப்புகளைக் கட்டுப்படுத்தவும், அனுமதி இல்லாத இடங்களில் சிலைகளை வைத்து மத மோதல்களைத் தூண்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலி பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள். நீதிமன்ற ஆணைகள், தமிழ்நாடு அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்ய வலியுறுத்தி மனுக்களை நீதிமன்ற ஆணை நகல்களுடன் இணைத்து கோரிக்கை மனு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,மாவட்ட...

அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!

அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் வருமான வரித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி 36 வருட பணிக்குப் பின் ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வு பாராட்டு விழா கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் சிறப்புடன் நடைபெற்றது. உடன் பணியாற்றிய அலுவலர்கள், உறவினர்கள், கழகத் தோழர்கள் நண்பர்கள் திரண்டு வந்திருந்தனர். அன்பு தனசேகர் மகள் வழக்கறிஞர் இளவேனில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். உரையாற்றியவர்கள் அன்பு தனசேகரின் சமூகத் தொண்டுகளை சமூக தொண்டாற்றுவதில் அவரின் ஆர்வத்தையும் பாராட்டினர். தனது பெண் மக்களை முழு சுதந்திரத்துடன் வளர்த்தார். அலுவலகத்தில் ஆளுமைகளை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தினார். அதிகாரியாக இருந்தும் ஒரு அதிகாரியாக நடந்து கொள்ளாமல் எளிமையான மனிதராக எல்லோரிடமும் பழகியவர். தனக்கு கீழே பணியாற்றும் ஊழியர்களுக்கு உதவியவர். அமைப்புகளை உருவாக்கி வழி நடத்தியவர். பிற்படுத்தப்பட்டோர் சமூக உரிமைக்காக தொடர்ந்து களத்தில் நின்றவர். பல ஊர்களுக்கு சென்று பயிற்சி வகுப்புகளை நடத்தியவர். நடைபயிற்சி...

சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

5/7/25 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை நங்கநல்லூரில், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் தலைமையில், ம.குகாநந்தன் முன்னிலையில் நடைபெற்றது. இரண்யா வரவேற்புரையாற்றினார். “சுயமரியாதை இயக்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்கள்” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். வரலாற்று ஆவணமாக இவ்வுரை அமைந்தது. “குடிஅரசு உருவாக்கிய அதிர்வலைகள்” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி ஆழமான ஆய்வுரையை நிகழ்த்தினார். பொதுக்கூட்டத்தின் சிறப்பம்சமாக, பொதுக்கூட்ட மேடையிலேயே ஆனந்தகுமார் – ஷர்மிளா இணையரின் சுயமரியாதை ஜாதி மறுப்புத் திருமணமும் நடைபெற்றது. இந்நிகழ்வு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. கார்மேகம் – வீரமணி – பேரன்பு – திராவிட மகிழன் குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்கள் மக்களை சிந்திக்க வைத்தன. தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி நன்றியுரையாற்றினார். களப்பணியாற்றிய தோழர்களுக்கும் கலைஞர்களுக்கும் நினைவுப்பரிசாக புத்தகங்களை, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, தென்சென்னை மாவட்டத்...

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

சமூக நீதிக் காவலர் விபி சிங் பிறந்தநாளான (25/6/25), சென்னை பிரசிடென்சி கல்லூரியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாலை 5 மணியளவில், திவிக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா.சூர்யா, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இளவரசன் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம்03072025இதழ்

தீவிர களப்பணிக்கு தயராகும் சென்னை மாவட்ட இளைஞரணி

தீவிர களப்பணிக்கு தயராகும் சென்னை மாவட்ட இளைஞரணி

சென்னை கழக தலைமை அலுவலகத்தில் ஜூன் 29 மாலை 5 மணி அளவில் சென்னை மாவட்ட இளைஞரணி மற்றும் தொழில்நுட்ப அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இரு அணிகளை சேர்ந்த 40 தோழர்கள் பங்கேற்றனர். சென்னை மாவட்ட இளைஞரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில், எழுத்தாளர்களை உருவாக்குவது, வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல், தோழமை உணர்வை மேம்படுத்துதல், அறிவியல் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 1. மாதம் ஒரு புத்தக திறனாய்வு கூட்டத்தை இளைஞரணி முன்னெடுக்கும். 2. மாதம் இரண்டு தெருமுனை கூட்டங்கள் நடத்துவது 3. ஆண்டுக்கு இரண்டு பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக அம்பத்தூர் பகுதியில் பகுத்தறிவு பரப்புரை பிரச்சாரம் நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. தொழில்நுட்ப அணி சார்பில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தகவல் தொழிட்நுட்ப் அணி சார்பாக புகைப்படக் கருத்து வடிவ உருவாக்கம், காணொலிப் பிரச்சாரம், இணையதள வடிவமைப்பு, சமூக வலைத்தள செயல்பாடுகள், ஆவணப்படுத்துதல்,...

சென்னையில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி!

சென்னையில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி!

பாலஸ்தீன ஆதரவுக் குழு நடத்திய பாலஸ்தீன விடுதலைப் பேரணி 21.06.25 அன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதான த்தில் தொடங்கி எழும்பூர் ரவுண்டானா அருகில் நிறைவு கண்டனக் கூட்டமாக நிறை வடைந்தது. கண்டனக் கூட்டத்தில் குழந்தைகளைத் திட்டமிட்டு கொன்றுகுவிக்கும் இஸ்ரேல்! காசா மீதான இனஅழிப்புப் போரை நிறுத்தக்கோரி திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி அவர்கள் உரையாற்றினார். பேரணியில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் , மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வடசென்னை மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண், மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு, தட்சணாமூர்த்தி, ஏசு குமார், தினகரன் மற்றும் கழக தோழர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

புலிகளின் தளபதி பொட்டு அம்மான்: வரலாற்று நூல் கழகத் தலைவர் வெளியீட்டார்

புலிகளின் தளபதி பொட்டு அம்மான்: வரலாற்று நூல் கழகத் தலைவர் வெளியீட்டார்

தாய் தமிழர் இயக்கம் நடத்திய அறிவரண் தளபதி பொட்டு அம்மான் வரலாற்று நூல் வெளியீட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னை செங்குன்றத்தில் டேவிட் பெரியார் தலைமையில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கிய இனமுரசு சத்யராஜ், நூலை மதிப்புரை ஆற்றிய திவிக-புதுவை மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், நூலைப் பற்றி அறிமுக உரை மேச்சேரி தமிழரசன் ஆகியோர் உரையாற்றினர். திருவல்லிக்கேணி பகுதியில் உயர்நீத்த கழகத் தோழர்கள் பத்ரி நாராயணன், தமிழரசு, கண்ணன், குமார் ஆகியோரின் குடும்பத்தினர் நூல்களை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்விற்கு கழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, துணைச் செயலாளர் இராவணன், இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவி பாரதி மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 19062025இதழ்