வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!
சமூக நீதிக் காவலர் விபி சிங் பிறந்தநாளான (25/6/25), சென்னை பிரசிடென்சி கல்லூரியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாலை 5 மணியளவில், திவிக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா.சூர்யா, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இளவரசன் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம்03072025இதழ்
