சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

5/7/25 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை நங்கநல்லூரில், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் தலைமையில், ம.குகாநந்தன் முன்னிலையில் நடைபெற்றது. இரண்யா வரவேற்புரையாற்றினார்.

“சுயமரியாதை இயக்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்கள்” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். வரலாற்று ஆவணமாக இவ்வுரை அமைந்தது. “குடிஅரசு உருவாக்கிய அதிர்வலைகள்” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி ஆழமான ஆய்வுரையை நிகழ்த்தினார்.

பொதுக்கூட்டத்தின் சிறப்பம்சமாக, பொதுக்கூட்ட மேடையிலேயே ஆனந்தகுமார் – ஷர்மிளா இணையரின் சுயமரியாதை ஜாதி மறுப்புத் திருமணமும் நடைபெற்றது. இந்நிகழ்வு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. கார்மேகம் – வீரமணி – பேரன்பு – திராவிட மகிழன் குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்கள் மக்களை சிந்திக்க வைத்தன. தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி நன்றியுரையாற்றினார்.

களப்பணியாற்றிய தோழர்களுக்கும் கலைஞர்களுக்கும் நினைவுப்பரிசாக புத்தகங்களை, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, தென்சென்னை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, வடசென்னை மாவட்டத் துணைச்செயலாளர் ஆ.வ.வேலு, சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அருண் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். கடலூர் மாவட்டம் சார்பாக கழகத் தோழர் சிவக்குமார் ரூ.10,000 முழக்க சந்தா வழங்கினார்.

பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தீனா, திஇதபே மாவட்டச் செயலாளர் அன்பு, தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை உதயன்,CPIM ஆலந்தூர் பகுதிக்குழு உறுப்பினர் வெங்கடேசன், ஆலந்தூர் தொகுதி விசிக தொண்டரணி துணை அமைப்பாளர் ஆ.ஓம்பிரகாஷ், திமுக மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், காங்கிரஸ் மாவட்ட அலுவலகப் பொறுப்பாளர் ஆதம் பிரகாஷ் உள்ளிட்ட தோழமை இயக்க தோழர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 10072025இதழ்

You may also like...