புலிகளின் தளபதி பொட்டு அம்மான்: வரலாற்று நூல் கழகத் தலைவர் வெளியீட்டார்

தாய் தமிழர் இயக்கம் நடத்திய அறிவரண் தளபதி பொட்டு அம்மான் வரலாற்று நூல் வெளியீட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னை செங்குன்றத்தில் டேவிட் பெரியார் தலைமையில் நடைபெற்றது.

நூலை வெளியிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கிய இனமுரசு சத்யராஜ், நூலை மதிப்புரை ஆற்றிய திவிக-புதுவை மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், நூலைப் பற்றி அறிமுக உரை மேச்சேரி தமிழரசன் ஆகியோர் உரையாற்றினர்.

திருவல்லிக்கேணி பகுதியில் உயர்நீத்த கழகத் தோழர்கள் பத்ரி நாராயணன், தமிழரசு, கண்ணன், குமார் ஆகியோரின் குடும்பத்தினர் நூல்களை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்விற்கு கழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, துணைச் செயலாளர் இராவணன், இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவி பாரதி மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 19062025இதழ்

You may also like...